Thursday, September 9, 2021

" இயக்குனர் பாலா"

 பரதேசி வெளியான தேதி முதல் இன்று வரை பாலாவை திட்டிக்கொண்டே இருக்கிறது உலகளாவிய

அறிவைப்பெற்ற ஒரு கும்பல்.
இத்தனை நாள் அவர்கள் எங்கிருந்தார்கள்
என்று தெரியவில்லை..
போகட்டும்.... இன்னொரு கும்பல் பாலா ஒரு சைக்கோ என்று சொல்லிக்கொண்டு திரிகிறது.. உண்மையில் யார் இந்த பாலா..
1.ஹாலிவுட் திரைப்படத்திலிருந்து காப்பி அடித்து தன் கதைக்குள் புகுத்த தெரியாத ஏமாளி.
2.பாடலுக்கு மட்டும்
கதாநாயகியை வைத்துவிட்டு கதையிலிருந்து கலட்டி விடத்தெரியாத
அறைகுறை இயக்குனர்.
3.தயாரிப்பாளர் செலவில் ஓசியில் நாடு நாடாய் சுற்றத் தெரியாத வெகுளி.
4.காமெடியை மட்டுமே வைத்துவிட்டு, கதை பண்ணத் தெரியாத
அறைகுறை இயக்குனர்.
5.சண்டை காட்சியில் கதாநாயர்களை பல அடி தூரம் பறக்கவிட்டும், எத்தனைக் குண்டுகள்
ஹிரோ நோக்கி வந்தாலும் ஒன்று கூட ஹிரோ மேல் படாதபடி எடுக்கத்தெரியாத
முட்டாள்.
6.ஒரு பாடலுக்கு ஒரு லட்சம் கூட செலவு செய்யாத கஞ்சன்.
தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு
கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்துக்
கொண்டிருக்கும் மிக சிலருள் ஒருவர் தான் பாலா. அவரை பாரத்து சைக்கோ என்று சொல்பவன் தான் உண்மையில் சைக்கோவாக இருப்பான்..
எனக்கு பிடித்த இயக்குநர்களில்
இவரும் ஒருர்.
May be an image of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...