Thursday, September 9, 2021

ஐயப்பன் தோசைக் கடை.

 தோசை எல்லோருக்கும் பிடித்தமான, எளிமையான உணவு. மதுரைக்காஞ்சியில் மெல்லடை என்ற அரிசிஉணவு குறித்து "நல் வரி இறாஅல் புரையும் மெல் அடை" என வருகிறது. அடை தோசை இன்றும் உள்ளது.

மதுரை ஐயப்பன் தோசைக்
கடையில் பலவகையான சுவைகளில் தோசை கிடைப்பது அதன் தனிச்சிறப்பு. தோசை, ஸ்பெசல் தோசை, பொடி தோசை, நெய்ப்பொடி தோசை, மிளகுப்பொடி தோசை, ரவாதோசை, நெய்ரவா தோசை, வெங்காய தோசை, எள்ளுப்பொடி தோசை, பன்னீர் மசால்தோசை, பூண்டு மசால் தோசை, பச்சைபட்டாணி மசால் தோசை, சென்னா மசால் தோசை, மஷ்ரூம் தோசை, பீஸா தோசை, கோவா தோசை என ஒவ்வொரு தோசையும் சுடச்சுட கொடுக்கிறார்கள். விலையும் 20ரூபாயிலிருந்து 50 ரூபாய்க்குள் என்பதால் குறைந்த செலவில் புதிய சுவைகளில் தோசை சாப்பிடலாம்.
ஐயப்பன் தோசைக்கடை கூடலழகர் பெருமாள் கோவில் தேர் நிற்கும் பாண்டிய
வெள்ளாளர் தெருவிலுள்ளது. ஹாஜிமார் தெருவிலிருந்தும் நீங்கள் இந்தத்
தெருவை வந்தடையலாம். மாலை நேரத்தில் பசியாற சுவையான சாம்பார், சட்னியோடு
தோசை சாப்பிட ஏற்ற இடமென ஐயப்பன் தோசைக் கடையைச் சொல்லலாம். அடை தோசையும் இக்கடையில் கிடைக்கிறது.
குழந்தைகளுக்கு ஸ்பெஷல் பட்டர்ஜாம் தோசை, கோவா தோசை ரொம்பவும்
பிடிக்கும். தோசை ரசிகர்கள் இந்தக் கடைக்குச் செல்லவில்லையானால் இன்றே
கிளம்புங்க..
May be an image of food and indoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...