ஒரு படத்தைத் திட்டமிட்டபடி எடுக்கமுடியுமா? எடுக்கின்ற படத்தை குறுகியகாலப் படைப்பாக தயாரிக்கமுடியுமா? குறிப்பிட்ட நடிகரை வைத்து தொடர்ந்து பல படங்கள் கொடுக்கமுடியுமா? நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் சம்பளத்தை ஒரேதவணையில் வழங்கும் தயாரிப்பாளர் உண்டா? படத்துக்குப் பூஜை போடும்போதே, பட ரிலீஸ் தேதியை அறிவித்து, அந்தத் தேதியில் படத்தை வெளியிடுவது சாத்தியமா? அத்தனையும் நிகழ்த்திக் காட்டியவர்... சாண்டோ சின்னப்பா தேவர். உடல்வாகில் பயில்வான். செயல் திறனில் அசகாயசூரர். பிறந்தது ராமநாதபுரம் மாவட்டம் என்றாலும் வளர்ந்தது கோவையில்தான். வறுமைக்கு வாக்கப்பட்ட குடும்பத்தில் மில் வேலை உட்பட பல வேலைகளைச் செய்தார். சின்னச்சின்னதாக தொழில்கள் செய்தார். சகோதரர்களுடன் சேர்ந்து உடற்பயிற்சிக் கூடம் வைத்திருந்தார். அந்தக் கூடம் லேசான திருப்புமுனையை ஏற்படுத்தியது. அப்போது கோவையில்தான் இருந்தது ஜூபிடர் ஸ்டூடியோ. இந்த நிறுவனத்தில் மாதச் சம்பளத்துக்கு நடித்தவர்களில் ஒருசிலர், இவரின் உடற்பயிற்சிக் கூடத்துக்கு வந்தார்கள். பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கட்டுமஸ்தான உடம்பு கொண்ட சின்னப்பா தேவருக்கு, ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மெல்ல மெல்ல திரைத்துறையில் ஆர்வம் வந்தது. அந்த சமயத்தில், கிடைத்த நடிகருடனான நட்பு, மரணிக்கும் வரை நீடித்தது. அதுமட்டுமல்ல... திரைத்துறையில் மிகப்பெரிய வெற்றிக்கும் வித்திட்டது. சின்னப்பா தேவருக்கு அப்படிக் கிடைத்த நண்பர்... எம்ஜிஆர்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Thursday, September 9, 2021
நினைவு_அஞ்சலி #சின்னப்பதேவர்.
சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தார் தேவர். ‘சொந்தமாக படமெடுத்தால் என்ன’ எனும் எண்ணம் தோன்றியது. நண்பர்கள் கையிலிருந்த பணத்தைக் கொடுத்து உதவினார்கள். ‘தேவர் பிலிம்ஸ்’ உருவானது. எம்ஜிஆரை ஹீரோவாக்கினார். பானுமதி, கண்ணாம்பா முதலானோர் நடித்த ‘தாய்க்குப் பின் தாரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. முதல் படத்தில் ‘மாடு’ பிரதானக் காட்சியில் இடம்பிடித்து மிரட்டியெடுத்தது. பின்னர், சிங்கம், புலி, யானை உள்ளிட்ட பல மிருகங்களை படத்தில் கொண்டுவந்தார் என்பது தனிக்கதை. ‘தேவர் பிலிம்ஸா... மிருகங்களை வைச்சு அசத்துவாங்களேப்பா’ என்று எல்லோரும் சொல்லும் அளவுக்கு தனி அடையாளத்துடன் திகழ்ந்தார். முதல் படம் எம்ஜிஆருடன். ஆனால் இருவருக்கும் முட்டிக்கொண்டது. ஒருவழியாக படத்தை எடுத்து முடித்து, ரிலீஸ் செய்து, வெற்றிப் படமாகவும் அமைந்தது. பின்னர் ஒருவழியாக எம்ஜிஆரும் சின்னப்பா தேவரும் பிணக்கில் இருந்து வெளிவந்தார்கள். பழைய நட்பு இன்னும் கெட்டிப்பட்டது. ‘தாய் சொல்லைத் தட்டாதே’, ‘தாயைக் காத்த தனயன்’ என்று தொடர்ந்து படங்கள் பண்ணினார்கள். எல்லாமே ஹிட்டடித்தன. நடுவே, ரஞ்சன், சி.எல்.ஆனந்தன், ஜெமினி கணேசன் என ஒரு ரவுண்டு போய்விட்டு வந்தார் எம்ஜிஆரிடம். சிவாஜியை வைத்து ஏ.பீம்சிங் ‘ப’ வரிசை படங்களை இயக்கினார் என்றால், சின்னப்பா தேவர் எம்ஜிஆரை வைத்து ‘த’ வரிசைப் படங்களை தயாரித்தார். தன் படங்களுக்கென கதை இலாகாவை உருவாக்கினார். டைட்டிலில் ‘தேவர் பிலிம்ஸ் கதை இலாகா’ என்றே வெளிவரும். இசைக்கு கே.வி.மகாதேவன். பாடலுக்கு கண்ணதாசன். இயக்கத்துக்கு சகோதரர் எம்.ஏ.திருமுகம். பாட்டெல்லாம் ஹிட்டாகின.
‘முதலாளி’ என்று எம்ஜிஆர் அழைத்த சின்னப்பா தேவர்; பூஜையின் போதே ரிலீஸ் தேதி; திட்டமிட்ட உழைப்பாளி!
- சாண்டோ சின்னப்பா தேவர் 105வது பிறந்தநாள் இன்று
ஒரு படத்தைத் திட்டமிட்டபடி எடுக்கமுடியுமா? எடுக்கின்ற படத்தை குறுகியகாலப் படைப்பாக தயாரிக்கமுடியுமா? குறிப்பிட்ட நடிகரை வைத்து தொடர்ந்து பல படங்கள் கொடுக்கமுடியுமா? நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் சம்பளத்தை ஒரேதவணையில் வழங்கும் தயாரிப்பாளர் உண்டா? படத்துக்குப் பூஜை போடும்போதே, பட ரிலீஸ் தேதியை அறிவித்து, அந்தத் தேதியில் படத்தை வெளியிடுவது சாத்தியமா? அத்தனையும் நிகழ்த்திக் காட்டியவர்... சாண்டோ சின்னப்பா தேவர். உடல்வாகில் பயில்வான். செயல் திறனில் அசகாயசூரர். பிறந்தது ராமநாதபுரம் மாவட்டம் என்றாலும் வளர்ந்தது கோவையில்தான். வறுமைக்கு வாக்கப்பட்ட குடும்பத்தில் மில் வேலை உட்பட பல வேலைகளைச் செய்தார். சின்னச்சின்னதாக தொழில்கள் செய்தார். சகோதரர்களுடன் சேர்ந்து உடற்பயிற்சிக் கூடம் வைத்திருந்தார். அந்தக் கூடம் லேசான திருப்புமுனையை ஏற்படுத்தியது. அப்போது கோவையில்தான் இருந்தது ஜூபிடர் ஸ்டூடியோ. இந்த நிறுவனத்தில் மாதச் சம்பளத்துக்கு நடித்தவர்களில் ஒருசிலர், இவரின் உடற்பயிற்சிக் கூடத்துக்கு வந்தார்கள். பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கட்டுமஸ்தான உடம்பு கொண்ட சின்னப்பா தேவருக்கு, ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மெல்ல மெல்ல திரைத்துறையில் ஆர்வம் வந்தது. அந்த சமயத்தில், கிடைத்த நடிகருடனான நட்பு, மரணிக்கும் வரை நீடித்தது. அதுமட்டுமல்ல... திரைத்துறையில் மிகப்பெரிய வெற்றிக்கும் வித்திட்டது. சின்னப்பா தேவருக்கு அப்படிக் கிடைத்த நண்பர்... எம்ஜிஆர்.
சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தார் தேவர். ‘சொந்தமாக படமெடுத்தால் என்ன’ எனும் எண்ணம் தோன்றியது. நண்பர்கள் கையிலிருந்த பணத்தைக் கொடுத்து உதவினார்கள். ‘தேவர் பிலிம்ஸ்’ உருவானது. எம்ஜிஆரை ஹீரோவாக்கினார். பானுமதி, கண்ணாம்பா முதலானோர் நடித்த ‘தாய்க்குப் பின் தாரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. முதல் படத்தில் ‘மாடு’ பிரதானக் காட்சியில் இடம்பிடித்து மிரட்டியெடுத்தது. பின்னர், சிங்கம், புலி, யானை உள்ளிட்ட பல மிருகங்களை படத்தில் கொண்டுவந்தார் என்பது தனிக்கதை. ‘தேவர் பிலிம்ஸா... மிருகங்களை வைச்சு அசத்துவாங்களேப்பா’ என்று எல்லோரும் சொல்லும் அளவுக்கு தனி அடையாளத்துடன் திகழ்ந்தார். முதல் படம் எம்ஜிஆருடன். ஆனால் இருவருக்கும் முட்டிக்கொண்டது. ஒருவழியாக படத்தை எடுத்து முடித்து, ரிலீஸ் செய்து, வெற்றிப் படமாகவும் அமைந்தது. பின்னர் ஒருவழியாக எம்ஜிஆரும் சின்னப்பா தேவரும் பிணக்கில் இருந்து வெளிவந்தார்கள். பழைய நட்பு இன்னும் கெட்டிப்பட்டது. ‘தாய் சொல்லைத் தட்டாதே’, ‘தாயைக் காத்த தனயன்’ என்று தொடர்ந்து படங்கள் பண்ணினார்கள். எல்லாமே ஹிட்டடித்தன. நடுவே, ரஞ்சன், சி.எல்.ஆனந்தன், ஜெமினி கணேசன் என ஒரு ரவுண்டு போய்விட்டு வந்தார் எம்ஜிஆரிடம். சிவாஜியை வைத்து ஏ.பீம்சிங் ‘ப’ வரிசை படங்களை இயக்கினார் என்றால், சின்னப்பா தேவர் எம்ஜிஆரை வைத்து ‘த’ வரிசைப் படங்களை தயாரித்தார். தன் படங்களுக்கென கதை இலாகாவை உருவாக்கினார். டைட்டிலில் ‘தேவர் பிலிம்ஸ் கதை இலாகா’ என்றே வெளிவரும். இசைக்கு கே.வி.மகாதேவன். பாடலுக்கு கண்ணதாசன். இயக்கத்துக்கு சகோதரர் எம்.ஏ.திருமுகம். பாட்டெல்லாம் ஹிட்டாகின.
குழுவினரை அழைத்து கதை உருவாக்கச் சொல்லுவார். கதை இவருக்குப் பிடித்திருந்தால்தான் அடுத்தக்கட்டத்துக்குச் செல்வார். இல்லையெனில் மீண்டும் கதை உருவாக்கும் வேலை தொடங்கிவிடும். அந்தக் கதையில், எம்ஜிஆருக்கென சின்னச்சின்ன விஷயங்கள் சேர்க்கப்படும். எல்லோரும் பார்க்கும்படியான கதையாக அமைக்கப்பட்டிருக்கும். சண்டைக்காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். சென்டிமென்ட்டுகள் கவனம் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும். அவ்வளவுதான்... கதை ரெடி. எம்ஜிஆருக்குச் சொல்லப்படும். கால்ஷீட் கொடுப்பார். பூஜை தேதி அறிவிக்கப்படும். பூஜையின் போதே, ரிலீஸ் தேதியும் தைரியமாக அறிவித்துவிட்டுதான் வேலையில் இறங்குவார். சொன்ன தேதியில் ரிலீஸ் செய்தும்விடுவார். இதைக் கண்டு வியக்காத தயாரிப்பாளர்களே இல்லை. அதேபோல், படத்தில் நடிகர், நடிகைகள் முடிவு செய்யப்படும். அவர்களிடம் பேசப்படும். சம்மதம் வாங்கப்படும். டெக்னீஷியன்களும் அப்படித்தான். எல்லாம் முடிவானதும், எல்லோருக்கும் ‘சிங்கிள் பேமெண்ட்’ வழங்கப்படும். அதாவது, ஒரு படத்துக்கான சம்பளத்தை, இரண்டு மூன்று தவணைகளாகக் கொடுப்பதெல்லாம் சின்னப்பா தேவருக்குப் பிடிக்கவே பிடிக்காத விஷயங்கள். இந்தித் திரைப்படத்துக்காக, ‘ஹாத்தி மேரா சாத்தி’ படத்துக்காக ராஜேஷ்கண்ணாவிடம் கதையைச் சொல்லி, சம்மதம் வாங்கினார் தேவர். இத்தனைக்கும் தேவருக்கு இந்தியெல்லாம் தெரியாது. அதேபோல், ராஜேஷ்கண்ணா தேவரின் செயலைக் கண்டு மிரண்டுபோனாராம். படத்துக்கு சம்பளம் சொன்னதும், அந்தத் தொகை முழுவதையும் கையில் வைத்திருந்த ஹேண்ட் பேக்கில் இருந்து எடுத்துக் கொடுத்தாராம். காசோலை பயன்படுத்தமாட்டார் தேவர் என்றும் நீண்டகாலமாக வங்கியில் கணக்கு கூட வைத்துக் கொள்ளவில்லை என்றும் சொல்லுவார்கள்.
இன்று அவர் நினைவு நாளில் வணங்குவோம்

நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...

No comments:
Post a Comment