தாமரை மலர் மேல் தவளை.
சுற்றிலும் முதலைகள், பிளந்த வாயுடன் விழுங்கக் காத்திருந்தன.
'தப்ப வழியே இல்லையா..!
விழித்துக் கொண்டிருந்தது தவளை.
கரையில் இருந்த ஆந்தை வழி சொன்னது..
'தவளையே அங்கிருந்து தாவிப் பறந்து கரைக்கு வா...!
'என்னால் அது முடியுமா..?
'ஏன் முடியாது? உன்னால் முடியும் நம்பு. பறந்து வா..!
தன்னம்பிக்கை பெற்றது தவளை.
கரையை நோக்கித் தாவிப் பறக்கப் முயற்சி செய்து பம்மியது.
பம்மித் தாவிய வேகத்தில் துள்ளியமாக
ஒரு முதலையின் வாயில் விழுந்தது. விழுந்த வேகத்தில் கதறியது..
'ஐயோ முட்டாள் ஆந்தையே..
தவறுதலாக வழிகாட்டி விட்டாயே...
முதலையின் வாயில் விழ வைத்து விட்டாயே..!
அமைதியாய் சொன்னது ஆந்தை!
'என்னால் வழிதான் காட்ட முடியும்.
என்னைப் போல உன்னால் பறக்க முடியுமா? என்று
நீ தானே முடிவு செய்ய வேண்டும் ..!
புத்தி சொல்லவெல்லாம் புத்திசாலி அல்ல!
வழி சொல்பவரெல்லாம் வழிகாட்டியும் அல்ல.
No comments:
Post a Comment