Sunday, September 5, 2021

தனிமரம்......

 அறுபது வயது ஆலமரம்

விழுதுகளை விட்டுப் உயர்ந்து வளர்ந்திருந்தது.
பக்கவாட்டிலும் பரந்து விரிந்த வளர்ச்சி.
அதன் அடியில்...
பெரிய பெரிய மரமாக வேண்டிய சின்னச் சின்னச் செடிகள்.
ஆலமரத்தின் நிழலை வாழ்த்தின:,
'எவ்வளவு பெரிய மரம்...!
இந்த நல்ல மரமின்றி எங்களுக்கு நல்வாழ்வு இல்லை.
இம்மரமே எங்கள் முன் மாதிரி.
எவ்வளவு சுகமான வாழ்வு இது...!
பெரியவர் ஒருவர் வந்தார்.
கொழு கொழுவென வளர்ந்திருந்த
சின்னச் சின்னச் செடி கொடி, கன்றுகள் பார்த்தார்.
மனமிரங்கினார்:
'தள தளவென்று இந்த வளர்ச்சி அரோக்கியமானதல்லவே!'
பிடுங்கி வேறொரு இடத்தில் நட்டு வளர்க்க முயன்றார்.
அலறின அறிவு கெட்ட சின்ன தாவரங்கள்:
'ஐயோ...!. எங்களைப் பிடுங்காதீர்கள்.
இந்த ஆலமர நிழலின்றி வேறு வாழ்வை
எங்களால் யோசித்துக் கூடப் பார்க்க முடியாது.
வேறு ஒரு இடத்தில் இப்படி
'கொழு கொழு...' வென்று வளர முடியுமா?
அங்கு நாங்கள் நிழலுக்கு எங்கே போவோம் ?'
பெரியவர் சொன்னார்.
'இந்த ஆலமரம் இல்லையென்றால்
உங்களுக்கு நிழல் கிடைக்காமல் போகலாம்.
ஆனால்....
சூரிய ஒளி கிடைக்குமே....!.
சூரிய ஒளி இல்லாமல் தான்
நீங்கள் இப்படி 'கொழு கொழு ' வென்று இருக்கிறீர்கள்.
இப்படியே வளர்ந்தால்
உங்களால் வளர்ந்து கனி தர முடியாது!
தொடர்ந்தார்:
'சின்னச் சின்னச் செடி கொடிகளே..
நிழல் தர வேண்டிய நீங்களே
இப்படி நிழலுக்கு அலையலாமா?
புரிந்து கொண்ட செடி கொடிகள் அறிவுரை கேட்டு நின்றன.
' நாங்கள் தனியொரு பெரிய மரமாய் உருவாக
என்ன செய்ய வேண்டும்?
கடைசியாய்ச் சொன்னார்..
'சுய சார்பு கொள்ளுங்கள்.
சொந்தக் காலிலே நில்லுங்கள் !'
பரத்து வளர்ந்த ஆல மரத்தடியில்....
எந்த மரமும் செழித்து வளர முடியாது.
அப்படி ஒரு வேளை வளர்ந்தால்- அது ஒட்டுண்ணியும் சாறுண்ணியுமாகத்தான் இருக்கும்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...