Monday, September 13, 2021

"சமூக நீதி மண்"

அமைச்சர் சேகர்பாவு அவர்களின் மகள் பற்றிய காதல் சர்ச்சை சில வாரங்களுக்கு முன்பே வந்தது ஆனால் ஆதாரமில்லாமல் ஒரு பெண் அதுவும் இளம்பெண்ணை பற்றி எழுதுவது தவறு என்பதால் ஏதும் சொல்லமுடியவில்லை
இப்பொழுது விவகாரம் வெடிக்கின்றது, அப்பெண்ணின் காதலன் விவகாரத்தை அவனே கொட்டிவிட விஷயம் வெளிவந்தாயிற்று
இது அவர்களின் சொந்த விஷயம் எனினும் அந்த காதலர் உயிருக்கு அஞ்சி சில வீடியோக்களை வெளியிட்டு அது பரவும் பொழுது சிக்கலாகின்றது.
இவ்விஷயத்தில் சட்டம் தன் கடமையினை செய்யட்டும், பதின்ம வயது முடிந்து பக்குவம் பெற்ற ஆணும் பெண்ணும் இணைந்து மணவாழ்வினை தொடங்க சட்டம் வழி செய்கின்றது
இப்பொழுது இதில் சாதியும் இன்னபிற சிக்கலும் இருப்பதாக அறிய முடிகின்றது
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தன் முந்தைய தேர்ந்தல் அறிக்கையில் அதாவது கடந்த ஏப்ரல்மாதம் தான் சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு தங்கமும் பணமும் மேற்கொண்டு அரசு வேலையும் தன் அரசு கொடுக்கும் என அறிவித்திருந்தார்
இதனால் அந்த ஜோடிகளுக்கு அவரே பணம் கொடுத்து அரசு வேலையும் கொடுக்க வேண்டும், நிச்சயம் கொடுப்பார்
சாதி ஒழிப்பு போராளி திருமா என்பவரும் சாதாரணமல்ல, நாடக காதலனையே நாலு சாத்து சாத்தி பெண்ணோடு வாழவைக்கும் அவர் இந்த ஒடுக்கபட்ட சாதி காதலனின் உண்மையான காதலை நிறைவேற்றி வைப்பார்
அவர் அமெரிக்க அதிபரின் மகளே சென்னையில் தாழ்த்தபட்ட காதலனை விரும்பினால் தன் சிறுத்தை படை புடைசூழ நடத்திவைப்பார் எனும்பொழுது இந்த சாதாரண திமுக மாநில அரசு எம்மாத்திரம்?
உடுமலைபேட்டை கவுசல்யாவுக்கு நீதி வழங்கிய பிரபல நீதிபதிகள் தியாகுவும், கொளத்தூர் மணியும் தங்கள் தப் படை புடை சூழ வருவார்கள்
"சமூக நீதி" காவலர் அய்யா வீரமணி அவர்கள் 135 அடி அளந்து ராம்சாமி சிலையினை கட்டிகொண்டிருந்தாலும் இந்த கலப்பு திருமணத்தை ஆதரிக்க விரைந்து வருவார்
ஆக முதல்வர் தலமையில் வீரமணி முன்னுரை வாசிக்க, திருமா வாழ்த்த, பிரபல நீதிபதிகள் சாட்சி எழுத திருமணம் விரைவில் நடைபெறும்.
அது சீர்திருத்த திருமணமாக இருக்கலாம்
இதற்கு அமைச்சர் எனும் வகையில் அல்லாமல் பெண்ணின் தகப்பனார் எனும் வகையில் நிச்சயம் சேகர்பாபு அவர்களும் அழைக்கபடுவார்
அவர் விரும்பினால் முள் பிடுங்கிய அர்ச்சகர்கள் மந்திரம் தமிழ் மந்திரம் ஓத, திருகுறள் ஒலிக்க , மணமகள் மணமகனுக்கு தாலிகட்டும் "தமிழ்" திருமணமாகவும் அது நடக்கலாம்
வாழ்க மணமக்கள்..
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது"
என்ற குறளுக்கு அய்யா முத்தமிழ் அறிஞர் கருணாநிதி எழுதிய விளக்கத்தை வாசித்து அவர்களை வாழ்த்துவோம்
திருமண விழாவில் கனிமொழி அவர்கள் கலந்து கொண்டு இந்த சங்க பாடலை பாடி வாழ்த்தட்டும்
"யாயும் ஞாயும் யாராகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல்நீர் போல,
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே"
அந்த காதலன் இது "சமூக நீதி மண்", இதன் முதல்வர் "சமூக நீதி காவலர்" "கலப்பு திருமணங்கள் காவலன்" என நம்பித்தான் வீடியோ வெளியிட்டிருக்கின்றான்
அவன் நம்பிக்கையினை இந்த அரசும் அவரோடு இருக்கும் சமூக நீதி காவலர்களும் நிச்சயம் நடத்தி வைப்பார்கள், மணமக்களுக்கு
வாழ்த்துக்கள்
## கடவுள் இருக்கான் குமாரு...
May be an image of 2 people, people standing and outdoors

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...