மூலம் நட்சத்திரமா என்று கேட்டுவிட்டு பயம் கலந்த வெறுப்போடு வேறு ஜாதகம் இருந்தால் சொல்லுங்கள் என்று பலரும் கூறுவதை கேட்டு நமக்கு சற்று சலிப்புதான் ஏற்படுகிறது
அப்ப மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திருமணமே ஆகவில்லையா ? அவர்கள் வாழ்வு சிறப்பாக அமையவில்லையா?
பல்லாயிரம் பேர் மூலநட்சத்திரத்தில் பிறந்து திருமணம் செய்து கொண்டு பிள்ளைபேற்றுடன் சிறப்பாக வாழ்கிறார்கள்
ஆனால் மூல நட்சத்திரம் ஆகாதென்று யாரோ சொல்வதை கேட்டு விட்டு நல்ல மணமக்களை இழக்கும் பரிதாப நிலை ஏற்படுகிறது
அப்படி கண்மூடித்தனமாக நம்புகிறவர்கள் தன் வரையில் நம்பினால் கூட அது அவர்களை மட்டுமே சார்ந்த இழப்பு
அவர் சந்திப்பவர் பேசுபவர் வரன் பார்ப்பவர் என்று எல்லோரிடமும் சொல்லி அவர்களும் குழம்பி மற்றவரையும் குழப்பி அவர்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள்
மூல நட்சத்திரத்தில் பிறந்தவர் என்ன பாவம் செய்தார்,. இனியாவது நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்க்காமல் இருவரின் வாழ்க்கை ஒன்றிப்போகுமா பொருளாதாரம் சிறக்குமா போன்று ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் செய்யுங்கள்
முக்கியமாக மனப்பொருத்தம் தேவை
No comments:
Post a Comment