Thursday, March 31, 2022

புதுமைப் பெண்.

 31-3-22 பள்ளி முதல் பெல் அடித்து விட்டது . ப்ரேயர் முடிந்து வனஜா

டீச்சர் பெயர் அட்டவணை எடுத்துக்
கொண்டு இருந்தார்கள், அப்பொழுது
ஒரு சிறுபெண் "டீச்சர்" என்று வாய்
தடுமாறி கூப்பிடுவது போல் தோன்றியது,
வாசலில் ஒரு ஐந்து வயது பெண்
பாவடை சட்டையில் நின்று கொண்டு
இருந்தது, தலை சரியாக வாராமல்
இருந்தது, கையில் ஒரு நோட்புக்,
பரிதாபமான பார்வை,
" உள்ளே வா "என்று கூப்பிட்டவுடன்
அவளும் அவள் தாத்தாவும் உள்ளே
வந்தார்கள், பயந்து அங்கும் இங்கும்
பார்த்துக் கொண்டு இருந்த அவளை
மெள்ள பக்கத்தில் கூப்பிட்டு மடியில்
உட்கார வைத்து "உன் பேர் என்னம்மா
என்றவுடன, பா,,...ரதி" என்று திக்கு திணறி சொன்னாள்,"ஐயோ திக்குவாய் போல் இருக்கே" இவள்
எப்படி இந்த பள்ளியில் தாக்கு பிடிக்கப் போகிறாள்" தாத்தாவை
பார்த்தாள் அவரும் தலையை அசைத்தார், " இவளுக்கு திக்குவாய்,
நீங்க தான் இவளை படிக்க வைக்கணும், "
இப்படியாக பாரதி வனஜா டீச்சர்
வகுப்பில் சேர்ந்தாள், அவளை பேச
வைப்பதற்குள் சக்தி எல்லாம் போய்
விடும், முதல் தடவை இவள் திக்கு
திணறி பேச ஆரம்பிக்கும் பொழுது
முழு வகுப்பும் சிரித்தது, பாரதி
அழவில்லை, அவளும் இவர்கள் கூட
சிரித்தாள், இந்த மாதிரி நிறைய
பேருடைய சிரிப்பை பார்த்தாச்சு,
இந்த சிரிப்பு எல்லாம் தன்னை ஒண்ணும் பண்ணாது, இதுக்கெல்லாம்
அழ ஆரம்பித்தால் வாழ்க்கை பூரா
அழ வேண்டி இருக்கும், இந்த சின்ன
வயதில் தன் குறையை உணர்ந்து
அதை ஏற்கும் மனப்பக்குவம் அவளுக்கு இருந்தது,
அவள் சிரித்தும் மற்ற மாணவர்கள் அமைதியாகி விட்டார்கள், இந்த வித்தியாசமான
அணுகுமுறை அவர்களை வியக்க
வைத்தது, அதில் இருந்து பாரதி
பேசினால் இவர்கள் சிரிப்பதில்லை,
சின்ன கேள்விகளுக்கு, பாரதியை பதில் சொல்லுமாறு கேட்பாள் வனஜா, பதில் வர லேட்டாக ஆனாலும் பாரதி
சரியாக சொல்லி விடுவாள் ,
மாணவர்கள் கை தட்டி உற்சாகப்
படுத்துவார்கள், ஒரு தடவை பாரதியின் தாத்தா பள்ளிக்கு வந்து
இருந்தார், பாரதியின் சோகக்கதை
பற்றி சொன்னார், பெற்றோர் இருவரும் டைவோர்ஸ் வாங்கி பிரிந்து விட்டார்கள், தாய் மறுமணம்
புரியப் போவதால் பாரதியை ஹாஸ்டலில் சேர்த்து விடுகிறேன்
என்றாள், தந்தையோ " திக்குவாய்
பெண்ணை வைத்துக் கொண்டு யார்
கஷ்டப்படுவார் என்றார்?
தாத்தா தானே பார்த்துக் கொள்வதாக சொன்னார்,
வனஜா டிச்சர் இந்த கதையை
கேட்டவுடன் இப்படியும் ஒரு தாய்
இருப்பாளா? என்று வருத்தப்பட்டாள்,
பாரதியின் மேல் இன்னும் பாசம்
கூடியது, அவளை தனியாக "ஸ்பீச்
தெராபி" வகுப்பில் சேர்த்தாள், தன்னால் முடிந்த உதவியை செய்தாள், பத்தாவது படிக்கிறாள்
பாரதி,
அன்று பத்தாவது வகுப்பு
ஆண்டு நிறைவு, எல்லா பெற்றோர்களும் வந்து இருந்தார்கள்.
பாரதியின் பெற்றோரும் வந்து
இருந்தார்கள், நிறைய போட்டிகள் நடந்தன, கடைசியாக பேச்சுப் போட்டி.
" இப்பொழுது நம் பள்ளியினுடைய
"ஸ்டார்" பேச்சாளர் "பாரதி சர்மா"
அவர்கள் பேசுவார்கள், மாணவர்கள்
ஒரே கைத்தட்டல், பாரதி மிக அழகாக பள்ளிச் சீருடையில் வந்து
பேசினாள், தங்கு தடையின்றி மணிப்
பிரவாளமாக அவள் பேச்சு இருந்தது,
அருவி கொட்டுவது போல் தங்கு
தடையின்றி அவள் பேச்சு இருந்தது,
ஒரு இடத்தில் திக்குவதோ திணறுவதோ இல்லை,
அவள் பேச்சு முடிந்தவுடன் சபையே எழுந்து கை தட்டியது,
அவளுக்கு தான் முதல் பரிசு,
பரிசு கொடுக்கும் பொழுது பெற்றோர் ஸடேஜீக்கு ஓடி வந்தனர்,
அவள் தந்தை "இவள் பெயர் பாரதி
சர்மா அல்ல" பாரதி விமல்" என்றார்,
பாரதி விரக்தியான புன்னகையுடன் ஓரமாக நின்று
இருந்த தாத்தாவை அழைத்து "இவர்
தான் சர்மா என்னை ,வளர்த்தவர்,
"இதை கேட்டவுடன் தந்தையின் தலை
அவமானத்தால் தாழ்ந்தது,
பாரதி ஓடிப் போய் வனஜா டீச்சரையும்,தாத்தாவையும் மேடைக்கு
அழைத்து "பரிசை அவர்கள் கையில்
கொடுத்தாள், " இன்று இந்த மாதிரி
நான் திக்காமல் மேடையில் பேசுவதற்கு காரணம் இவர்கள்
இருவரும் தான்,
பரிசை கையில் வைத்துக் கொண்டு கண்ணீருடன் டீச்சரும்,
தாத்தாவும் பேச்சு வராமல் நின்று
கொண்டு இருந்தார்கள்,,
பாரதி என்ற சிங்கப்பெண்
தன் குறையை எதிர்த்து போராடி
வாழ்க்கையில் வெற்றி பெற்றாள்,
இவள் தான் ,பாரதி ,சொன்ன
"புதுமைப்பெண்ணோ?
மிக்க நன்றி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...