Thursday, March 31, 2022

கோவைக்காய்_தேங்காய்ப்பால்சாறு.

 காலையில் அரை டம்ளர் தண்ணீர் அருந்திய பிறகு கால்மணி நேரம் கழித்து பூண்டு 4 பல் சிறிது சிறிதாக வெட்டி தண்ணீர் சேர்த்து விழுங்கினேன்.பிறகு நடைபயிற்சிக்கு செல்லும் போதே பசுமஞ்சள் 4 ,5 துண்டுகள் வெட்டி எடுத்து சென்று நடக்கும்போதே பசுமஞ்சள் நன்றாக மென்று சாப்பிட்டாயிற்று.தற்போது வீட்டிற்கு வந்தவுடன் கோவைக்காய் தேங்காய்ப்பால் சாறு நாட்டுச் சர்க்கரை சேர்த்து.சுவை அருமை.

கோவைக்காய் உடல் சூட்டை தணிக்கும்.உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும்.இரத்தத்தை சுத்திகரிக்கும்.பித்தம்,வாயுத்தொல்லையை நீக்கும்.சர்க்கரை வியாதி இருப்பவர்கள் கோவைக்காயை சாப்பிடலாம்.கட்டுக்குள் வைக்கும்.வாய்ப்புண்,வயிற்றுப்புண்ணை சரிப்படுத்தும்.செரிமானக்கோளாறு,சிறுநீரகம் சார்ந்த கோளாறுகள், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் பிரச்சினைகளை சரிசெய்யும்.இவ்வளவு பலன்கள் கொண்ட இந்த கோவைக்காய் சாறை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.உணவிலும் சேர்த்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...