Wednesday, March 30, 2022

ராஜகண்ணப்பனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க போராட்டம்.

 அமைச்சர் ராஜகண்ணப்பனை இலாகா மாற்றினால் போதாது. அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும், என தேவேந்திர குல வேளாளர் சங்கத்தினர், ஆதிதமிழர் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

Rajakannappan, DMK, TN Minister


ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் தொகுதியில் வெற்றி பெற்ற ராஜ கண்ணப்பன் போக்குவரத்து துறை அமைச்சரானார். அமைச்சரான பின் சிலமுறை மட்டுமே தொகுதிக்கு மட்டுமே வந்து சென்றார். மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு வருவதில்லை.முதல்வர் ஸ்டாலின் எச்சரித்த பின் மாவட்டத்தின் பிற பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

இந்நிலையில் பி.டி.ஓ., ராஜேந்திரனை சிவகங்கையில் உள்ள வீட்டிற்கு வரவழைத்து ஜாதியை குறிப்பிட்டு ஒருமையில் தரக்குறைவாக பேசியுள்ளார். அமைச்சர் ராஜ கண்ணப்பனை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும். தவறினால் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடிக்கும், என தேவேந்திர குல வேளாளர் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.latest tamil news




இலாகா மாற்றம் தி.மு.க.,வின் பித்தலாட்டம்


கே.மகேஸ்வரன், தேவேந்திர குல வேளாளர் சங்க அமைப்பான மருத நில இளைஞர் சங்க தலைவர், பூசேரி, முதுகுளத்துார்: பி.டி.ஓ., ராஜேந்திரன் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பூபதிமணி, சண்முகம் ஆகியோருக்கு ஆதரவாக செயல்பட சம்மதிக்காததால் ராஜகண்ணப்பன் மிரட்டியுள்ளார்.

சமூக நீதிக்காக போராடுகிறோம். சமூக நீதியை நாங்கள் தான் காப்பாற்றுகிறோம் என்று கூறும் தி.மு.க., அரசில் உள்ள அமைச்சரே ஜாதி வன்மத்தோடு பேசியிருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. ராஜகண்ணப்பனை பதவி நீக்கம் செய்து அவர் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிய வேண்டும். இலாகா மாற்றம் என்பது மக்களை திசை திருப்பும் தி.மு.க., அரசின் பித்தலாட்ட வேலை.


அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும்


க.பாஸ்கரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஆதிதமிழர் கட்சி, ராமநாதபுரம்: அமைச்சரின் செயலை ஆதி தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அரசியலமைப்பு சட்டப்படி உறுதிமொழி ஏற்ற அமைச்சர். நாங்கள் சொல்வதை கேட்கமாட்டாயா. உன்னை பணிமாற்றம் செய்வேன் என்று மிரட்டியது சட்டவிரோதம்.

யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்பேன் என்று தினமும் முதல்வர் பேட்டியளிக்கிறார்.ஆனால் அமைச்சரே இப்படி நடக்கலாமா. குற்றச்சாட்டு வந்த பின் விசாரணை நடத்தி அறிக்கை பெறும் வரை அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...