Thursday, March 31, 2022

நவதுவாரங்களையும் பொத்திக்கொண்டிருக்கிறதுகள்…

 ▪ஒரு மூத்த அமைச்சர், பட்டியல் பிரிவைச் சார்ந்த ஒரு அதிகாரியை சாதியைச் சொல்லி திட்டியிருக்கிறார்


ஆனால் திருமாவளவனுக்கு கோபமோ எதிர்த்து போராட்டம் செய்யனும் ங்கிற எண்ணமோ வரவில்லை


▪பொள்ளாச்சி மாதிரி தமிழ்நாடு முழுக்க பெண்கள் கொடூரமாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். திமுகவினரே நேரடியாக சம்மந்தமும் பட்டிருக்கிறார்கள்.


ஆனால், கனிமொழிக்கு போராட்டம் நடத்தும் எண்ணம் வரவில்லை


▪டாஸ்மார்க் பார் ஐ தடை செய்த, உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஸ்டாலினின் அரசு பார் வேண்டும்ன்னு வழக்குத் தொடுத்துள்ளது


ஆனால், குமரியில் இருந்து சென்னைக்கு நடை பயணம் மேற்கொண்டு, ஒரு சொட்டு மது கூட, தமிழ்நாட்டில் இருக்கக் கூடாதுன்னு அறைகூவல் விடுத்த வைகோவிற்கு  போராட்டம் நடத்தத் தோன்றவில்லை. 


கூலிக்கு மாரடிக்கும் கோவன்களை ஆளையே காணவில்லை. இளம் விதவைகளைப் பற்றி கவலைப்பட்ட கனிமொழியின் வாய் திறக்கப்படவே இல்லை


▪பழைய ஓய்வூதியத் திட்டப்படி ஊதியம் வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் அறிக்கையிலேயே சொல்லப்பட்டதை குப்பையில் தூக்கி வீசியுள்ளது அதே திமுக


ஆனால், ஜாக்டோ ஜியோ போன்ற அரசு ஊழியர்களுக்கு போராட்டம் நடத்தத் தோன்றவில்லை. முத்தரசன்களும் ராமகிருஷ்ணன்களும் போராட்டம் என்ற வார்த்தையையே பயன்படுத்தவில்லை


▪அமேஷான் நிறுவனம் சென்னை OMR ரோட்டில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது ஸ்டாலினால்.


ஆனால், அமேஷான் வந்தால் எங்கள் அடிவயிறு சுருங்கி செத்தே விடுவோம் எனச் சொன்ன வியாபாரிகளின் தலைவர் விக்கிரமராஜாவுக்கு போராட்டம் நடத்த வேண்டும் என்றே தோன்றவில்லை


▪திமுக என்ற தனிப்பட்ட ஒரு கட்சியின் அலுவலகத்தை திறந்து வைக்க வரவேண்டும் எனச் சொல்லி, மோடி மற்றும் அமித் ஷாவை காலில் விழாத குறையாக கெஞ்சி அழைப்பிதலை திணித்திருக்கிறது திமுக.


ஆனால், பிரதமரான மோடியை முதல்வரான எடப்பாடி பழனிசாமி வரவேற்கச் சென்றதும், அடிமையாகி விட்டது அண்ணாதிமுக என்று கொதித்தெழுந்த, பாய் உபிக்களுக்கு, தன் கட்சி அலுவலகத்தை மோடி எதற்கு திறக்கனும் அதை நாம எதிர்த்தே ஆகணும் ங்கிற எண்ணமே வரவில்லை


▪ஒவ்வொரு பெரிய நடிகரும், ஒன்னு் Sun pictures ல நடிக்கனும், இல்லைன்னா ரெட் ஜெயண்ட் மூவி ல நடிக்கனும். இல்லைன்னா எவன் தயாரிச்சாலும் படத்த இவனுக கிட்ட விற்கனும்ன்னு எழுதப்படாத விதி உருவாகியிருக்கு. இவர்கள் தான் எந்தப் படம் எத்தெந்த தியேட்டரில் ஓடனும்ன்னு முடிவு பண்ணுகிறார்கள்.


ஆனால், சுயமரியாதைப் பேசும், புரட்சிப் பேசும், புதுமை பேசும் ஒரு நடிகருக்கும், ஒரு தயாரிப்பாளருக்கும் போராட்டமோ ஒரு முக்கல் முனகலோ கூட வெளிப்படுத்த முடியவில்லை


▪சமூக வலைதளத்தில் அதைப் பேசிட்டார் இதைப் பேசிட்டார்ன்னு தினந்தோறும் எதிர்க்கட்சிகள் மீதும் இன்னும் சிறு சிறு அமைப்புகள் மீதும் வழக்கு. 


ஆனால், கருத்து சுதந்திரம் பற்றி வாய் கிழிய கிழிய பேசிய ஊடகங்களும் பத்திரிக்கைகளும் அரசியல் விமர்சகர்களும் அரசுக்கு எதிரான ஒரு துளி எதிர்க்குரல் இல்லை.


▪இதற்கெல்லாம் ஒரே காரணம் இப்போது அண்ணாதிமுக ஆட்சியில் இல்லை. 


அதிமுக ஆட்சியாக இருந்திருந்தால் மேற்சொன்னவற்றை எல்லாம் எதிர்த்து, மேற்சொன்ன நபர்கள் எல்லாம், பொங்கியிருப்பார்கள். போராடியிருப்பார்கள். போராளிகளாகியிருப்பார்கள். போர்க்களமாக்கியிருப்பார்கள். 


▪விடியல் வேண்டுமென்று வெடித்திருப்பார்கள். வெயிலில் விழுந்த புழுவாய் துடித்திருப்பார்கள். பாசிச அதிமுகவே எனச் சொல்லி நர நர வென பற்களைக் கடித்திருப்பார்கள். 


ஆனால் மேற்சொன்ன நிகழ்வெல்லாம் நடப்பதே, மேற்சொன்னவர்கள் விரும்பிய  விடியல் ஆட்சியில் தான் என்பதால் நவதுவாரங்களையும் பொத்திக்கொண்டிருக்கிறதுகள்…


▪எடப்பாடி பழனிசாமி என்னும் சாதாரண பின்னணி கொண்ட ஒரு எளிய மனிதன்  முதலமைச்சராய் இருந்தது, எத்தனையெத்தனைப் பேருக்கு எரிச்சல் மூட்டியிருக்கிறது என்று நினைத்தால் வியப்பாயிருக்கிறது.


▪இத்தனை இத்தனை பேரையும் மீறித்தான் அண்ணாதிமுக தன் வெற்றியைப் பதிக்க வேண்டிய தேவையும், மக்களுக்கான சேவையும் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை, 


அண்ணாதிமுகவினர் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

 😜😜😜👍

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...