Tuesday, March 22, 2022

காதுவலிக்கு கைமருந்து...!!!

 நேற்று இரவு என் பேரன் திடீரென தூக்கத்திலிருந்து எழுந்து காது வலிக்குது அவ்வா ன்னு ரொம்ப துடியா துடிச்சு அழுதப்போ கொஞ்சம் கலங்கி தான் போயிட்டோம் ..

என்ன செய்யலாம்ன்னு யோசித்து..
வாழை மட்டை சாறு ஊத்தலாமான்னு கேட்டேன்..
இரவு 12 மணி இநேரம் எங்க போய் எடுப்பது..
ரோட்டோரம் இரவு கடையில் போய் வாழை மட்டை வாங்கிட்டு வந்து அடுப்பு தீயில் லேசா வைத்து வாட்டி 5 சொட்டு ஊத்துனேன்..
2 நிமிசத்தில் பிள்ளை அழுகையை நிறுத்திட்டு இப்ப வலிக்கல அவ்வான்னு சொல்லிட்டு தண்ணி குடுச்சுட்டு கொஞ்ச நேரத்தில் தூங்கிட்டான்..
நான் கர்ப்பமா இருக்கும் போது காது வலிக்குதுன்னு துடிச்சப்போ எங்க அம்மா இதே வாழை மட்டை தான்..
வெத்தலை பாக்கு கடையில வாங்கிட்டு வந்து வாட்டி ஊத்துனாங்க..
அதே வாழை மட்டை வைத்தியம் 33 ,வருஷத்துக்கு பின் என் பேரனுக்கும்..
இது தான் கை வைத்தியம் உறவுகளே..!
பின்குறிப்பு
எங்க அப்பா கிணத்துல குதுச்சு குதுச்சு விளையாடி காது வலியில துடிப்பாராம்...
ஆனா கிணத்துல வெளையாடியதை வீட்டில் சொல்லமாட்டாராம் பாட்டிகிட்ட...
பாட்டி புள்ள வலியில இருக்கேன்னு வாழை மட்டை சாறு ஊத்துவாங்களாம்
இப்போ என் அப்பா வயது 90.
இந்த பதிவை பார்த்து 76 வயது நிறைந்த பெரியவர் மெஸெஞ்சரில் என் நம்பர் கேட்டு...
என் மனைவி பேச விரும்புவதாகன்னு சொல்லி
இன்று போன் செய்தார்..
அவருக்கு 3 வருடமா காது வலியும் ..
தும்மலும் ஸைனஸ் தொந்தரவும் இருந்ததாம்..
நான் பதிவில் சொல்லியது போல் தினமும் காலையில் ஊற்றினார்களாம்..
நான் இரவிலும் ஊற்ற சொன்னேன்..
4 நாட்கள் தொடர்ந்து ஊற்றி..
தும்மல் சுத்தமாக இல்லையாம்...
காது வலி இல்லை..
ஆனா..
இருப்பது போல ஒரு உணர்வு இருக்குன்னு சொன்னாங்க....
3 வருஷமா பாக்காத வைத்தியமில்லம்மா ன்னு
அந்தம்மா பேசும்போது கொஞ்சம் சந்தோஷம் கலந்த நெகிழ்ச்சியாவும் இருந்தது என்னவோ உண்மை.....
May be an image of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...