Wednesday, March 30, 2022

ஒரு நொடிக் கதை.

 கோயிலுக்குக் கிளம்பினேன். வாசற்படி தடுக்கியது. இதென்ன புறப்படுகையில் ஓர் தடை? தடுக்கற்தே. தண்ணீர் குடித்துவிட்டுச் செல்லுங்கள் என்றாள் மனைவி.

கல் தடுத்தால் என்ன? செல்வது கோயிலுக்கன்றோ! அதனால் கல் தடுக்கியதற்கு எந்தப் பரிகாரமும் வேண்டாம்.
கோயிலுக்குள் சென்றேன். "சாமி தரிசனம் ஆக ஒருமணி நேரமாகும்" என்றார்கள். இந்த ஒரு மணி நேரம் இங்கு இருந்தால், மற்ற வேலைகள் அடிபடுமே என்று மனம் சிந்திக்கத் தொடங்கியது.
கிளம்பும்போதே கல் தடுக்கியது. இருந்தாலும் சாமி பார்த்துக் கொள்வார் என்று அப்போது இருந்த உறுதி, "தரிசனத்திற்காக இப்போது ஒரு மணி நேரம் காத்திருக்கவேண்டும்" என்ற தகவல்கிடைத்தபோது, தளர்ந்துபோனது.
எது தடை? கல்லா அல்லது மனமா?
"கேள்வியின் நாயகனே! இந்தக் கேள்விக்கு பதில் ஏதடா?" கைப்பேசி ஒலித்தது. மனம் வீட்டிற்கு விரட்டியது.
========

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...