Wednesday, March 23, 2022

இதெல்லாம் விடை தெரியாத கேள்விகள்.

 ஜெ. மரணத்துக்குப் பின் முதல்வராக பொறுப்பேற்றபோதோ , ஒரு மாதம் முதல்வராக நீடித்தபோதோ ஓ.பி.எஸ். அவர்களுக்கு ஜெ. மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை. அது பற்றி அப்போது அவர் எதுவும் பேசவில்லை.

சசிகலா முதல்வராக முற்பட்டபோது அந்த அதிர்ச்சி தாங்காமல் தியானத்தில் அமர்ந்தபோது தான் அவருக்கு அது பற்றிய சந்தேகம் தோன்றியிருக்கிறது. சசிகலாவும் எடப்பாடியும் ஓர் அணியானதால் சந்தேகம் முற்றி அவர்களுக்கு எதிராக தர்ம யுத்தம் தொடங்கினார். சி.பி.ஐ. விசாரணையே கோரினார். யார் பெயரையும் குறிப்பிடா விட்டாலும் சசிகலா மற்றும் அவர் குடும்பத்தினர் மீதுதான் சந்தேகம் என்று உணர்த்துவது போலவே அவரது பேராட்டங்கள் இருந்தன.
காட்சி மாறி , எடப்பாடியும் ஓ.பி.எஸ். ஸும் இணைந்ததால் சசிகலா இருவருக்கும் பொது எதிரியானார். எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு கமிஷன் அமைக்கப்பட்டு , அது பாட்டுக்கும் ஒரு முன்னேற்றமும் இன்றி அரசுப் பணத்தில் இயங்கி வந்தது.
தேர்தலுக்குப்பின் , ஆட்சியும் போய் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் எடப்பாடியிடமிருந்து கைப்பற்ற முடியாத நிலையில் ஓ.பி.எஸ். ஸுக்கு சசிகலாவின் வருகை ஆறுதல் அளித்தது. இப்போது அவர் மூலம் கட்சியைக் கைப்பற்ற முடியுமா என்று காத்திருக்கிறார் ஓ.பி.எஸ். அதனால் சந்தேகம் போய் மதிப்பும் அபிமானமும் வந்திருக்கிறது.
ஜெ. மரணத்தில் யாருக்கும் சந்தேகம் இல்லையென்றால் கமிஷனே தேவையில்லை. யாருக்காவது சந்தேகம் இருந்திருந்தால் , அவர் கமிஷனில் ஆஜராகி விளக்கியிருக்க வேண்டும்.
ஜெ. சிகிச்சையின்போது 75 நாட்கள் அமைச்சர்களைக் கூட பார்க்க விடாமல் தடுத்தது யார்? எதற்காக தடுக்கப்பட்டது? ' அம்மா நல்லா இருக்காங்க. இட்லி சாப்பிட்டாங்க என்று பொய் சொல்ல வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது. 'தெரியாம பொய் சொல்லிட்டோம். மன்னிச்சுடுங்க ' என்று ஒரு முன்னாள் அமைச்சர் கூறினார். யாருக்காக பொய் சொல்லப்பட்டது? யார் மீதான சந்தேகத்தில் ஜெ. இறுதி ஊர்வலக் காட்சி இடைத்தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தப்பட்டது? இதெல்லாம் விடை தெரியாத கேள்விகள்.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறதோ இல்லையோ, இந்த விஷயத்தில் யார் மீதும் நம்பிக்கை வரவில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...