Monday, March 21, 2022

ஆறுகளே இல்லாத நாடு சவூதி அரேபியா.

 அதனால் கடல்நீரை தான் குடிநீர் ஆக்கிக்கொண்டுள்ளனர்.

ஆனால் இதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. கடல்நீரை குடிநீர் ஆக்க இரு வழிமுறைகள் உண்டு. ஒன்று நீரை காய்ச்சி, நீராவியை குளிர்வித்து நல்ல நீர் ஆக்குவது. ஆனால் இதற்கு நிறைய எரிபொருள் செலவு ஆகும்
இரன்டாவது முறை, நீரை மிக நுண்ணிய வலைக்குள் பிஸ்டனை வைத்து அமுக்குவது. இதில் நீரில் இருக்கும் உப்புக்கள் எல்லாம் வலையில் தங்கிவிடும். பில்டர் ஆகி வரும் நீர் குடிநீராக வரும்
ஆனால் இரு முறைகளிலும் எரிபொருள் செலவு கூடுதல். கடல்நீரில் இருந்து பிரித்து எடுக்கும் உப்புக்கள் (பிரைன்) என சொல்வார்கள் சுற்றுசூழலுக்கு கேடு. அதை மீண்டும் கடலுக்குள் செலுத்தினால் கடல்வாழ் உயிரினங்கள் இறக்கும். குப்பைதொட்டியில் போட்டால் நிலம் உப்பாகும்.
இப்போது இதற்கு சோலார் வாட்டர் எனும் பிரிட்டிஷ் கம்பனியுடன் சேர்ந்து ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது அரேபியா
கடல்நீர் கண்னாடி குழாய்கள் வழியே ஒரு கண்ணாடி டோமுக்குள் செலுத்தபடும். குழாய்களும், கண்னாடி டோமும் சூரிய வெப்பத்தை உள்ளிழுக்கும் தன்மை கொண்ட கண்ணாடிகளால் ஆனவை. இதனால் டோமுக்குள் நீர் சூரிய வெப்பத்தில் காய்ச்சபட்டு ஆவியாகி குழாயில் வெளியேறி குடிநீராகிவிடும்.
டோமில் மீதமுள்ள உப்புநீரான பிரைன் சில தொழிற்சாலைகளில் பயன்படும். சில மூலப்பொருட்களை தயாரிக்க முடியும்.
இதில் குடிநீருக்கான செலவு ஆயிரம் லிட்டருக்கு 20 ரூபாய் என கணிக்கபடுகிறது. இது மிக, மிக குறைந்த தொகையாகும்.
வடமேற்கு சவூதி அரேபியாவில் 26,500 சதுரகிமி பரப்பளவில் உள்ள பாலைவனத்தின் வெயிலில் இந்த மிகப்பெரும் டோம் அமைக்கும் திட்டப்பணிகள் துவங்கியுள்ளன
வரும்காலத்தில் உலகெங்கும் உள்ள குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் தீர்வு இதுவாக இருக்கலாம். ஏனெனில் உலகின் 3% குடிநீர் தான் நல்லநீராக உள்ளது. உலகெங்கும் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்களை எல்லாம் சேர்த்தாலும் 3% தான் வரும். மீதமுள்ள 97% நீரும் கடல்நீர்தான். 3% நீருக்கு தான் இத்தனை போர்கள், அடிதடிகள்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...