கடையில்...

முதல்ல
அம்மாவுக்கு

ஒரு
தாலிச்செயின்

வாங்கனுமுடா ..!
அப்பாவுக்கு
ஒரு டஜன் 


கைலியும், பட்டைப் பெல்ட்டும் 

வாங்கனுமுடா ..!
தம்பிக்கு
நல்ல டிசைன்ல

4 ஜோடி
பேண்டு சட்டையும்
,


லேட்டஸ்டு செல்போனும்

வாங்கனுமுடா ..!
தங்கச்சி
மாசமா இருக்கு,


நல்ல சருகை
பட்டுப்புடவையா எடுக்கனுமுடா ..!

மச்சினனுக்கு

நல்ல கோல்ட் கலர்
வாட்ச்

2 எடுக்கனுமுடா ..!
நம்ம வீட்டு

கெழடு கட்டைகளுக்கு
கோடாளித் தைலம்
வாங்கனும் ..!

புள்ளைக நெறைய இருக்கு
பேனாபென்சில்,
விளையாட்டு சாமான்கள்
வாங்கனும் ..என்னைப் பாக்க வர்ற சொந்தங்களுக்கு
செண்டு
பாட்டிலும்,பேனாவும் வாங்கனும் ..!
வீட்ல இருந்த
எமர்ஜெண்சி லைட்டு எல்லாம்கெட்டுப்போச்சாம் அதுவாங்கனும் ..!
எல்லார்வீட்லயும்
பிளாஸ்மா டீவி இருக்காம்
நமக்கும் ஒன்னு வாங்கணும் ..!
மாப்ள மறந்துட்டேன்டா
சாக்லேட்டு நெறைய வாங்கனுமுடா ..
மாப்ள நல்லா யோசனைபன்னி பாருடா எதுவும் விட்டுட்டமானு ..!
சரி மாப்ள
எல்லா பொருளும்
' ரொம்ப காஸ்ட்லியா '
புடிச்சு, வாங்கியிருக்க ..
பரவால்லை டா மாப்ள
அவுங்க சந்தோசம் தான்டா
என் சந்தோசம் .. சரி மாப்ள
உனக்கு போட்டுக்கிட்டு போக
துணி எடுத்துக்கடா ..!
இல்ல மாப்ள
இங்க விலை அதிகமா
இருக்குடா
நான் ஊர்ல போயி
எடுத்துக்கிறேன்டா ..!
படித்ததில் வலித்தது ..
இதுதான்வெளிநாடுஉழைக்கசென்றவர்களின்வெகுளியானமனசு.
No comments:
Post a Comment