Sunday, May 29, 2022

நம்பிக்கைதான் வாழ்க்கையை வளப்படுத்தும்.

 எந்த சூழ்நிலையும் மாறும் தன்மையுடையது. நம்பிக்கையை மட்டும் மனதில் விதைத்தால் போதும். நல்ல எதிர்காலம் துளிர்விடும்.

நம்பிக்கைதான் வாழ்க்கையை வளப்படுத்தும்
நம்பிக்கைதான் வாழ்க்கையை வளப்படுத்தும்


















வாழ்க்கையில் நடக்கும் சில விஷயங்கள் நம்மை நம்பிக்கை இழக்கச் செய்திடும். ‘தொடர்ந்து இதேபோல நடக்காது. அடுத்து நல்லதே நடக்கும்’ என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். அப்படி நம்பிக்கை கொண்டால்தான் தொடர்ந்து வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியும். ஒருமுறை ரெயிலில் பயணிக்கும்போது விபத்து நேர்ந்துவிட்டது என்பதற்காக ரெயில் பயணத்தையே தவிர்த்துவிட முடியாது. அதுபோலத்தான் சில விஷயங்கள் அமைந்திருக்கும். எப்போதும் நல்லதே நடக்கும் என்பது நிச்சயமில்லாதது. அதற்காக வாழ்க்கை மீது நம்பிக்கை இழந்துவிடக்கூடாது. ஒருசில விஷயங்களை கவனத்தில் கொள்வதன் மூலம் நம்பிக்கையை வளர்க்கலாம். நிம்மதியை தக்கவைத்துக்கொள்ளலாம்.

மாற்றம்: எப்போதும் வாழ்க்கை ஒரே மாதிரி இருப்பதில்லை. சில நேரங்களில் நம்மை நாமே மாற்றிக்கொண்டு முன்னேற வேண்டி இருக்கும். அந்த நேரத்தில் நான் இப்படித்தான் இருப்பேன் என்று முரண்டு பிடித்தால் காலம் நமக்காக காத்திருக்காது. சூரியன் போகும் திசையெல்லாம் தன்னை திருப்பி கொள்ளும் சூரிய காந்தி செடியை போல வாழ்க்கையின் பாதையை தேர்ந்தெடுத்து பயணத்தை தொடங்க வேண்டும். நம்முடைய மகிழ்ச்சி நமக்கு முக்கியம் என்றால் மாற்றமும் முக்கியம். நம்மை மாற்றிக்கொண்டால் புதிய நம்பிக்கை தோன்றும். மாற்றம் என்பது பல நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும்.

சரியான முடிவு: நாம் எடுக்கும் ஒருசில முடிவுகள் நம் வாழ்க்கை பாதையை மாற்றிவிடும். சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்பட வேண்டும். இதற்கும் நம்பிக்கைதான் பக்கபலமாக அமையும். தன்னிடம் வேலை பார்த்தவன் ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டான் என்பதற்காக வேலைக்காரரே வேண்டாம் என்று முடிவு செய்துவிடக்கூடாது. நேர்மையான, நம்பிக்கையுள்ள வேலைக்காரரை பணியில் அமர்த்திக் கொள்ளலாம். எல்லா வேலைக்காரர்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. கல்வி, தொழில், எதிர்கால திட்டம் போன்ற விஷயங்களில் நம்பிக்கையோடு முடிவெடுக்க வேண்டும். பயந்தோ, சந்தேகமோ கொண்டு நிலை தடுமாறி நல்ல வாய்ப்புகளை நழுவ விட்டுவிடக்கூடாது. நம்பிக்கையுடன் இருந்தால்தான் நல்ல முடிவுகள் மனதில் உதிக்கும்.

சூழ்நிலை: எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மனம் தளர்ந்துபோய்விடக்கூடாது. நெருக்கடியான சூழ் நிலையை சமாளிக்க வேறு வழி இருக்கிறதா என்று யோசிக்க வேண்டும். அது அலுவலகமாக இருந்தாலும், வீடாக இருந்தாலும் சரி சூழ்நிலையை திறம்பட கையாளும் மனப்பக்குவம் கொண்டிருக்க வேண்டும். தங்கள் பிள்ளைகளின் போக்கு சரியாக இல்லை என்றால், அவர்களின் எதிர்காலம் என்னவாகுமோ என்று பீதியடையக்கூடாது. உங்களது கடந்த காலத்தையும், பிள்ளைகளின் சுபாவத்தையும் ஒப்பிட்டுப்பார்த்து நம்பிக்கை இழந்துவிடக்கூடாது. அந்த காலத்திற்கும், இந்த காலத்திற்கும் இடையே எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது. அதை மனதில் கொண்டு தற்கால சூழ்நிலைக்கேற்ப உங்களை நீங்களே மாற்றிக்கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் மற்றவர்களையும் மாறச்சொல்லுங்கள். நிலைமை கட்டுக்குள் வந்து விடும். அதைவிட்டுவிட்டு புலம்பிக்கொண்டிருக்கக்கூடாது.

உடல் நிலை: உடல் நிலை பாதிக்கப்பட்டால் நம்பிக்கையை விட சிறந்த மருந்து வேறு எதுவுமில்லை. `நம்பிக்கை இல்லாத வைத்தியம் கைகூடாது' என்பார்கள். சிக்கலான நேரத்தில் அவ நம்பிக்கை கொள்வது பெரிய பிரச்சினைகளுக்கு வித்திடும். ஒருவருக்கு ‘பிரைன் ட்யூமர்’ என்னும் மூளை சார்ந்த நோய் பாதிப்பு உண்டாகிவிட்டது. அவர் நம்பிக்கையை இழந்து புலம்ப ஆரம்பித்துவிட்டார். கணவரின் நிலையை நினைத்து கவலை கொண்ட மனைவி திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். பிள்ளைகளை பற்றி சிந்திக்காமல் அவர் செய்த காரியம் குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கணவர் மீது இருந்த அன்பு காரணமாக அவர் இறப்பதற்கு முன்பு தான் மரணித்துவிட வேண்டும் என்று நினைத்து ஆவேசமாக அந்த பெண்மணி இப்படியொரு முடிவெடுத்துவிட்டதாக பலரும் நினைத்தார்கள். ஆனால் நடந்தது அதுவல்ல. கண வருடைய நம்பிக்கை இழந்த பேச்சு, நடவடிக்கை, மனைவியை பார்த்து அவர் பேசிய அநாகரிகமான வார்த்தைகள் அவரை மிகவும் பாதித்துவிட்டது. தற்கொலை முடிவெடுத்துவிட்டார்.

உடல்நிலை சரி இல்லை என்றால் மன தைரியத்தையும், நம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். தனது வாழ்க்கை அவ்வளவுதான், இனி பிழைப்பது கஷ்டம் என எதிர்மறையான வார்த்தைகளை பேசி உடன் இருப்பவர்களை வேதனையில் ஆழ்த்தக் கூடாது. ‘என் தொல்லையில் இருந்து உனக்கு விடுதலை கிடைக்கப் போகிறது. இனி நீ நிம்மதியாக இரு’ என்பது போன்ற வார்த்தைகளை அந்த பெண்மணியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த விரக்தியில்தான் அவர் தற்கொலை முடிவை எடுத்துவிட்டார். அவருடைய விபரீத முடிவால் பிள்ளைகள் அனாதை களாகிவிட்டார்கள். இதற்கு காரணம் அவநம்பிக்கைதான். அவநம்பிக்கை என்பது நம்மை அதலபாதாளத்தில் தள்ளிவிடும்.

நம்மிடம் உள்ள குறைகளும் நம்மை பின்னுக்கு தள்ளிவிடும். நம்முடைய பலமும், பலவீனமும் நமக்கு தெரியும். அதையே நினைத்து வாழ்க்கையை நகர்த்திவிட முடியாது. நெருக்கடியான சூழ்நிலையில் தைரியமாக நாம் எடுத்து வைக்கும் காலடி நமக்கு வழி காட்டும். நம்பிக்கை நல்வழியை அமைத்துக்கொடுக்கும். நெஞ்சில் நம்பிக்கை துளிர்விடும்போதுதான் புதிய முயற்சிகள் தொடங்கும். நம்முடைய குறைகள் சமன் செய்யப்படும். மகிழ்ச்சியான மனிதர்களாக வாழவைக்கும்.

அவநம்பிக்கை: சில சமயங்களில் சூழ்நிலை சாதகமாக இல்லாதபட்சத்தில் அவநம்பிக்கையோடு சிந்திக்க வைக்கும். எந்த சூழ்நிலையும் மாறும் தன்மையுடையது. நம்பிக்கையை மட்டும் மனதில் விதைத்தால் போதும். நல்ல எதிர்காலம் துளிர்விடும்.

கோடை_வெப்பத்தை #தவிர்க்க #தண்ணீர்_டிப்ஸ் !

 தாகம் தணிப்பதில் தண்ணீருக்கு முதலிடம் :

✔ தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலை குளிர்ச்சியாக்க முடியும்.
💧கோடை காலத்தையும், கோடை கால நோய்களைத் தவிர்க்கவும், தினமும் 3 லிட்டர் முதல் 5 லிட்டர் வரை சுகாதாரமான தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். உடல் சூட்டை தணிக்க இளநீர், ஜூஸ், மோர், எலுமிச்சை ஜூஸ்கள் அதிகமாக குடிக்கலாம்.
💧கோடையை சமாளிக்கவே இயற்கை அளித்த வரம் வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி. வெள்ளரி தாகத்தை தணிப்பதுடன் கோடைகாலத்தில் பல நோய்களுக்கும் மருந்தாகிறது. இதில் 93 சதவீதம் நீர்சத்து உள்ளதால் அப்படியே பச்சையாக உண்பது தான் முழுமையான பலனைத்தரும்.
💫 கோடையில் உடலைக் குளிர்ச்சியாக வைக்க, அதிக அளவில் வியர்வை வெளியேறும். அதனால், அதற்கேற்ப தண்ணீர் அருந்த வேண்டும். இந்த நீரை பருகலாமா?
♻️ கார்பனேற்றப்பட்ட பானங்கள், மது பானங்கள் போன்றவை கெட்டுப்போகாமல் இருக்க விதமான வண்ணங்கள் மற்றும் சர்க்கரைகளை சேர்க்கின்றனர். அதனை பருகுவதன் மூலம் அமிலத்தன்மை நீர்ப்பெருக்கியாக செயல்பட்டு சிறுநீர் மூலமாக இழப்பை ஏற்படுத்தும்.
😁மேலும் பற்கள், சிறுநீரக கற்கள், கீல்வாதம் போன்ற நோய்கள் ஏற்படுகிறது.
💰அதிக அளவு பணம் கொடுத்து வாங்கும் இரசாயன குளிர்பானங்கள், எனர்ஜிடிக் பானங்கள் உடலுக்கு எந்த விதத்திலும் நல்லதல்ல. பணம் நஷ்டம் மட்டும் அல்லாமல், நாமே பணம் செலவு செய்து நம் உடலுக்கு தீமைகளை வாங்குகிறோம். எனவே, இவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
🍹🧉மேலும், அதிக அளவு டீ, காபி குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
அதிக அளவு குளிரூட்டப்பட்ட பானங்கள் :
⛱️ கோடைகாலத்தில் அனைவரும் குளிர்ச்சியுடன் தான் இருக்க விரும்புவார்கள்.
🥵உடல் புழுக்கமான சூழ்நிலையில் குளிர்ந்த திரவங்களை உட்கொள்வதன் மூலம் தோல் இரத்த நாளங்களில் சுருக்கம் ஏற்பட்டு வெப்ப இழப்பை ஏற்படுத்தும். எனவே, மிகுந்த குளிரூட்டப்பட்ட பானங்களை தவிர்ப்பது நலம்.
குறைவான தண்ணீர் குடிப்பதால் வரும் நோய்கள்
💧அவரவர் வேலை மற்றும் அவர்களின் உடலின் வியர்வைக்கேற்ப தண்ணீரின் தேவை மாறுபடும். உடல் உழைப்பு அதிகமானவர்கள் அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும்.
🤷🏻‍♂️உடலில் நீர்ச்சத்து குறையும் பட்சத்தில் மாலையில் களைப்பு, உடல்வலி, நீர்க்கடுப்பு, காலையில் மலச்சிக்கல், நாள்பட சிறுநீர்ப் பாதை கல், மூலம், வயதானோர்க்கு வெக்கையினால் ஏற்படும் மயக்கம் என பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். உதடுகள் காய்ந்துபோவது, நாக்கு வறட்சி அடைவது, அடிக்கடி தாகம் எடுப்பது, எப்போதும் தூக்கம் வருவது போன்ற பிரச்னைகள் ஏற்படும். பொதுவான டிப்ஸ் !
💧தற்போது கேன் வாட்டர் பரவலாக பயன்பாட்டில் உள்ள நிலையில், அதன் தரத்தைப் பார்த்து வாங்கிப் பயன்படுத்துவதே நலம். கேனில் ஐஎஸ்ஐ முத்திரைக் குத்தப்பட்டு இருந்தால் மட்டுமே சுத்தமாக இருக்க வாய்ப்புள்ளது.
🌤️வெயில்கால பாதிப்புகள் பெரியவர்களை விட, குழந்தைகளுக்கு தான் எளிதில் தொற்றும்.அதிக உஷ்ணம் காரணம்.
May be an image of 1 person and drink

130 பக்க தேர்தல் அறிக்கையின் முதல் பக்கம் லீக் ஆகியுள்ளது...

 *நாடுமுழுவதும் டாஸ்மாக் விரிவு படுத்தப் படும்

*தமிழ்நாடு முதல் அனைத்து மாநிலங்களையும் தனிநாடுகளாக அறிவித்து அவைகளை இணைத்து USSI (United social states of india) என அமைக்கப் படும்
*தாய்மார்களுக்கு மாதம்தோறும் 20000 ரூ உரிமைத் தொகை
*பெட்ரோல்-டீஸல் விலை துபாய் விலைக்கே விற்பனை
*பெட்ரோல் 1 லிட்டர் வாங்கினால் 2 லிட்டர் இலவஸம்
*டீஸல் 5 லிட்டர் வாங்கினால் 10 லிட்டர் இலவஸம்
*தியாகி பேரறிவாளர் விடுதலை நாளை அரசு பொது விடுமுறை தினமாக அறிவிப்பு
*தியாகிகள் பேரறிவாளர்,முருகனார்,குண்டு சாந்தனார்,நளினியம்மையார் ஆகியோர் பெயர்களில் அவர்களை போல தீரச்செயல் செய்த ஈகிகளுக்கு விருதுகள் வழங்கப்படும்
*பத்ம விருதுகள் முறையே பெரியார்ஸ்ரீ, அண்ணா பூஷண்,கலைஞர் விபூஷண் என பெயர் மாற்றம்.
May be an image of 1 person and text that says "19-05-2022 ஜனியர் - விரைவில் மத்தியில் திராவிட மாடல் ஆட்சி! திராவிட மாடல் என்பது மாநில சுயாட்சி. அந்த மாநில சுயாட்சி கொள்கையோடு சமூக நீதியும் இணைந்ததுதான் திராவிட மாடல். விரைவில் மத்தியில் திராவிட மாடல் ஆட்சி அமையும். மாநில சுயாட்சி கிடைக்கும் -டி.ஆர்.பாலு, திமுக எம்.பி! www.vikatan.com /juniorvikatan ஜனியர் vikatan"

சலிப்படைந்தால் சாதனை இல்லை..

 ஒவ்வொரு மகத்தான சாதனைக்குப் பின்னும் கடுமையான, முறையான உழைப்பு இருக்கிறது. சலித்துப் போகாத மனம் இருக்கிறது.

இந்த இரண்டும் இல்லாமல் எந்த சிறந்த சாதனையும் நிகழ்ந்து விடுவதில்லை.
சாதனைகளைப் பாராட்டுகின்ற மனிதர்கள் சாதித்தவர்களின் திறமைகளைத் தான் பெரும்பாலும் சாதனைகளின் காரணமாக எடுத்துக் கொள்கிறார்கள்.
அதற்கென சலிக்காமல் உழைத்த உழைப்பை அதிகமாக யாரும் கவனத்தில் கொள்வதில்லை.
ஏனென்றால் பரிசுகளும் பாராட்டுகளும் குவியும் போது தான் அவர்களைக் கவனிக்கிறோம். புகழ் சேரும் போது தான் சுற்றி ஒரு கூட்டமும் சேர்கிறது.
அந்த ஒரு நிலை வரும் வரையில் அவர்கள் உழைக்கும் போது அவர்கள் தனியர்களே. அவர்கள் இருப்பதைக் கூட உலகம் அறியாமலேயே இருந்து விடவும் கூடும்.
திறமை மிக முக்கியம். அது தான் முதல் தேவையும் கூட. திறமை இல்லாவிட்டால் உழைப்பு வீண் தான்.
ஆனால் திறமை இருந்தும் அதற்காக உழைக்கா விட்டால் திறமையும் வீண் தான். இதற்கு எத்தனையோ உதாரணங்களை நாம் நம்மைச் சுற்றியும் பார்க்கலாம்.
திறமையும் முக்கியம், உழைப்பும் முக்கியம் என்றாலும் எது எந்த அளவு முக்கியம் என்ற கேள்விக்கு விஞ்ஞானி எடிசன் ”1% திறமையும் 99% உழைப்பும்”வெற்றிக்குத் தேவை என்கிறார்.
இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் புரிந்த அவரைக் காட்டிலும் பொருத்தமான வேறு நபர் இருக்க முடியாது என்பதால் அதை வெற்றிக்கான சூத்திரமாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உலக வரலாற்றில் இரண்டு துறைகளில் நோபல் பரிசுகள் பெற்றவர்கள் இருவர். அதில் முதலாமவர் மேரி கியூரி அம்மையார்.
இயற்பியல், வேதியியல் என்ற இரண்டு துறைகளில் 1903, 1911 ஆம் ஆண்டுகளில் அவர் நோபல் பரிசுகள் பெற்றார்.
வேதியியலில் நோபல் பரிசு கிடைக்கக் காரணமாக இருந்த ரேடியத்தைக் கண்டுபிடிக்க அவர் உழைத்த உழைப்பு கொஞ்ச நஞ்சமல்ல. அவருக்கு ஆராய்ச்சிக்கேற்ற வசதிகளை செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. குதிரை லாயமே அவரது ஆராய்ச்சி சாலையாக அமைக்கப்பட்டது.
பொருளை அரைப்பது, கழுவுவது, அடுப்பு மூட்டி சூடாக்குவது போன்ற சில்லறை வேலைகளைச் செய்யக்கூட வேலையாட்கள் இல்லை. அந்த வேலைகளை அவரே தான் செய்தார்.
கனிமத்தை அரைக்கும் எந்திரத்தைச் செக்குமாடுகள் போல அவரே இழுத்து அரைத்தார்.
இப்படி ஒரு நாள், இரு நாளில்லை பல ஆண்டு காலம் பல துன்பங்களை ஏற்று உழைத்துத் தான் ரேடியத்தை அவர் கண்டுபிடித்தார்.
இப்படி ஒவ்வொரு உண்மையான உயர்ந்த சாதனையின் பின்னும் பெரும் உழைப்பு இருக்கிறது.
வெற்றிக்கான முயற்சிகளில் பல சமயங்களில் செய்ததையே தொடர்ந்து பல காலம் செய்ய வேண்டி இருக்கும். அந்த உழைப்பு சுவாரசியமானதாக இருப்பது மிக அபூர்வம்.
எடிசன் குறிப்பிட்ட 1% திறமை இருப்பவர்கள் ஏராளம். ஆனால் அந்த 99% உழைப்பு என்று வரும் போது தான் பல திறமையுள்ளவர்கள் பின்வாங்கி விடுகிறார்கள்.
அவர்களுக்கு தொடர்ந்த ஒரே மாதிரியான உழைப்பில் சலிப்பு ஏற்பட்டு விடுகிறது.
ஒருசில முயற்சிகளில் பலன் கிடைத்து விட வேண்டும் என்கிற எண்ணம் இருந்தால் சாதனை என்பது என்றுமே சாத்தியமில்லை.
தென்னாப்பிரிக்காவில் பல்லாயிரக்கணக்கான ஆட்கள் சுரங்கத்தைத் தோண்டி வைரத்தை வெட்டி எடுக்கிறார்கள். பல டன் எடையுள்ள மண்ணைத் தோண்டி அப்புறப்படுத்தும் போது தான் அதில் சிறிய வைரத்துண்டு கிடைக்கிறது.
தோண்டி எடுப்பதில் வைரத்தை விட மண் தான் அதிகமாகக் கிடைக்கிறது என்று சலிப்படைவதில் அர்த்தமில்லை. அப்படிக் கிடைப்பது தான் நியதி.
எனவே நாம் அதை எதிர்பார்த்தே அது போன்ற வேலையில் ஈடுபட வேண்டுமே ஒழிய நமக்கு மட்டும் விதிவிலக்கு வேண்டும் என்ற பேராசையில் முயற்சிகள் மேற்கொண்டால் பெருத்த ஏமாற்றத்தையே அடைய நேரிடும்.
பரிசு வாங்கும் நிகழ்ச்சி போல பயிற்சி செய்யும் நேரங்களும் சுவாரசியமாக இருப்பதில்லை. ஆனால் பெரிய சாதனை புரிந்த அத்தனை பேரின் பயிற்சி நேரங்கள் சாதாரண மக்களின்
கற்பனைக்கெட்டாத அளவில் இருக்கின்றன.
பலரும் கேளிக்கைகளிலும் பொழுது போக்குகளிலும் ஈடுபட்டிருக்கையிலும், பலரும் உறங்கிக் கொண்டிருக்கையிலும் சாதிக்க நினைப்பவன் தன் சாதனைக்காக விடாமல் உழைக்க வேண்டி இருக்கிறது.
பல நேரங்களில் சாதனையாளர்கள் சாதனைகளைச் செய்வதைப் பார்க்கையில் அவர்கள் அலட்டிக் கொள்ளாமல், சிறிதும் கஷ்டப்படாமல், அனாயாசமாகச் செய்கிறது போல் தோன்றலாம். ஆனால் அந்த நிலையை அடைய அவர்கள் எந்த அளவு உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை அவர்களைக் கேட்டால் தான் தெரியும்.
ஃப்ரிட்ஸ் க்ரீஸ்லர் என்ற பிரபல வயலின் மேதை சிறிதும் பிசிறில்லாமல் மிக மிகச் சிறப்பாக ஒரு நிகழ்ச்சியில் வயலின் வாசிப்பதைக் கேட்டு பிரமித்துப் போன ஒரு இளைஞன் சொன்னான். ”இப்படி வாசிக்க வாழ்நாளையே தந்து விடலாம்”. அந்த இசை மேதை அமைதியாகச் சொன்னார். “அப்படித் தான் தந்திருக்கிறேன் இளைஞனே”. அப்படிப்பட்ட ஒரு இசையைத் தர அவர் வாழ்நாள் முழுவதும் உழைத்திருக்கிறார்.
ஒரு சாதனையைக் காண்கையில் புத்துணர்ச்சி பெற்று அப்படியே சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் வருகிறது. அந்த ஆரம்பப் புத்துணர்ச்சியைக் கடைசி வரை தக்க வைத்துக் கொள்வது என்பது வெகுசிலராலேயே முடிகிறது. அந்த வெகுசிலராலேயே சாதனை புரிய முடிகிறது.
எனவே எந்தத் துறையில் சாதிக்க ஆசைப்பட்டாலும் முதலில் அதற்கான திறமை உங்களிடம் இருக்கிறதா என்று பாருங்கள்.
அந்தத் திறமை இருக்குமானால் அதை மெருகேற்றவும், வெளிக்கொணரவும் முறையான திட்டமிட்ட உழைப்பைத் தர மனதளவில் உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள். மனம் தயாராகா விட்டால் எந்த முயற்சியும் அரைகுறையாகவே முடியும்.
சாதனையின் உயரத்திற்கேற்ப பயணிக்கும் தூரமும், நேரமும் அதிகமாகத் தான் இருக்கும். அந்தப் பயணத்தில் சலிப்படைந்து விடாதீர்கள். பாதியில் நிறுத்தி விடாதீர்கள். சாதனைப் பயணத்தில் பாதியில் நிறுத்தியவர்களை யாரும் நினைவு வைத்துக் கொள்வதில்லை.
சலிப்பு வரும் போதெல்லாம் முடிவு நிலையின் பெருமையை எண்ணி உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.
தொடர்ந்து முயன்றால் ஒரு நாள் கண்டிப்பாக சாதித்து முடித்திருப்பீர்கள்!

🌹 திருப்பதி!

 திருப்பதியில் அவசியம் தரிசிக்க வேண்டிய

வேறு சில இடங்களும் உண்டு. அவை என்னென்ன தெரிந்து கொள்வோமா?
இது மலை அடிவாரத்தில் உள்ளது. ஸ்ரீ நிவாஸனின் விஸாலமான இரண்டு பாதங்கள் சிற்பத்துடன் பெரியதாகக் காணப்படுகின்றன. திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்கள் இங்கு அர்ச்சனை ஆரத்தி செய்வதற்கு வசதியாக தேவஸ்தான அர்ச்சகர்கள் இருக்கிறார்கள். இந்த இடத்தை அலிபிரி என்று அடிபுளி என்றும் கூறுகிறார்கள். இங்குள்ள புளிய மரத்தின் கீழேதான், உடையவர் ராமானுஜருக்கு, திருமலை நம்பிகள் ஸ்ரீ மத் ராமாயண ரகசியங்களை உபதேசித்தார் என்றும், அப்போது அவர் ஸேவிக்க வசதியாக திருமலை ஸ்ரீ நிவாஸனின் பாதங்கள் தோன்றிய தாகவும் வேங்கடாசல இதிஹாஸ மாலா என்ற நூல் கூறுகிறது.
பாதாள மண்டபம் தாண்டியவுடன் சிறிது தூரத்தில் தலயேரு குண்டு என்கிற பெரியபாறையைக் காணலாம். இந்தப் பாறையின் மீது பக்த ஆஞ்சநேயர் சிற்பம் செதுக்கப்பட் டுள்ளது. மலை ஏறுவோரும் இறங்குபவர்களும் தலைவலி அல்லது கால்வலி வராமல் இருக்க, தங்களின் தலையை இப்பாறையின் மீது தேய்ப்பார்கள். அந்த அடையாளம் சிலையில் தென்படுகிறது.
தலயேரு குண்டு தாண்டியதும் காணப்படும் மிகவும் சிதிலமான மண்டபம் கும்மர மண்டபமாகும். கும்மர மண்டபம் என்றால், குயவன் மண்டபம் என்று பொருள். தொண்டமான் சக்ரவர்த்தி அரசாண்ட காலத்தில், குரவ நம்பி என்கிற குயவன் திருமலை ஸ்ரீநிவாஸன் திருமடைப்பள்ளிக்குத் தளிகை செய்யத் தேவையான மட்பாண்டங்க ளைத் தயார் செய்து அனுப்புவான். அவன் அனுதினமும் தான் இருக்கும் இடத்திலேயே ஸ்ரீ நிவாஸனின் மண் விக்கிரகத்துக்கு பூஜைகள் செய்து, மண் புஷ்பங்களை பக்தியுடன் சமர்ப்பித்து வந்தான். அவ்வாறு அவன் சமர்ப்பித்த மண் புஷ்பங்கள், திருமலையில் பெருமாள் சந்நிதியில் தென்பட்டதாம்! அவன் வசித்த இந்த இடம் அவன் பெயராலேயே அழைக்கப் படுகிறது.
திருமலைக்கு நடந்து செல்லும் வழியில் ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்மர் கோயிலுக்கு முன்பாக முக்கு பாவி என்கிற ஆழமான கிணறு ஒன்று உள்ளது. இந்தக் கிணற்றுக்குப் பக்கத்தில் கரையில் பக்த ஆஞ்சநேய ஸ்வாமி மண்டபம் உள்ளது. மஹந்து மடத்தைச் சேர்ந்த ஸாதுக்கள் பூஜை செய்கின்றனர். ‘முக்கு’ என்றால் கோலம் போடுதல் என்று பொருள். கோலம் போடும் கற்கள் அதிகமாக இங்கு தென்படுவதால் அந்தப் பெயர் ஏற்பட்டது. ஸ்வேத சக்ரவர்த்தி என்கிற அரசனின் குமாரர் ஸம்பு என்பவர் இங்கு தவமியற்றினாராம். ஸ்ரீ நிவாஸன் நேரில் தோன்றி அவரை அனுக்கிரஹித்தாராம்.
திருமலைக்கு நடந்து செல்லும் வழியில் ஒன்பதாவது மைலில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரின் ஆலயம் ஒன்றுள்ளது. திருமலைக்கு நடந்து வந்த மார்க்கண்டேய மஹரிஷி வேண்டிக் கொண்டதன் பேரில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் இங்கு அவருக்கு தரிசனம் அளித்தாராம். சாலுவ நரஸிம்மராயுலு என்கிற அரசன் இந்த ஆலயத்தைப் புதுப்பித்திருக்கிறான்.
திருமலையில் அவ்வசரிகோண என்கிற இடத் துக்கு அருகில் பெரிய மலையின் மீது இதை நிர்மாணித்துள்ளனர். மலையில் பெருமாளுக்கு நைவேத்தியம் ஆகும் நேரம், திருமலைக் கோயிலில் இரண்டு மணிகளை அடிப்பார்கள். திருமலை பூராவும் எதிரொலிக்கும் அந்த நாதத்தைக் கேட்டு கண்டாமண்டபத்திலுள்ள மணியை அடிப்பார்கள். அந்த கண்டாநாதம் கீழ்த் திருப்பதி சந்த்ரகிரி போன்ற இடங்களிலும் கேட்குமாம். விஜயநகர ராஜாக்கள் சந்த்ரகிரியில் முகாமிடும் நேரத்தில் #இந்த_கண்டா_நாதத்தை (மணியொலியை)க் கேட்ட பிறகே #சாப்பிடுவார்களாம்.
திருமலைக்கு நடந்து வரும் பக்தர்கள், தங்களின் முழங்காலைப் பிடித்துக் கொள் கிற மாதிரியான வலியை உண்டாக்கும் இடம் இது. அந்த நாளில் பக்தர்கள் இந்த இடம் வரும்போது, முழங்காலில் கையை வைத்தபடி மலை ஏறுவார்களாம். எம்பெருமானாருக்கும் வியாஸராயருக்கும் திருமலை பூராவும் சாளக்கிராமமாக ஸ்வாமி தென்பட்டதால், இருவரும் முழங்காலால் மலை ஏறினார்களாம். ஸங்கீத மூர்த்தி அந்நமாசார்யருக்கு இந்த இடத்தில் தாயார் (அலமேலுமங்கை தாயார்) பிரசாதம் கொடுத்து வழி காட்டியதாகக் கூறுவர்.
மோகாள்ள முடுபு என்கிற இடத்துக்கு அருகில் உள்ள பள்ளமான இடம் இது. ‘அந்தப் பக்கத்தில் உள்ள பள்ளம்’ என்று பொருள்.
திருமலைக்குச் செல்லும் வழியில் மோகாள்ள முடுபுவுக்கு அருகில் பாஷ்யகாரர் ஸந்நிதி உள்ளது. ‘த்ரோவ்வ’ என்றால் நடந்து போகும் வழி எனப் பொருள். நடந்து போகும் வழியில் உள்ள பாஷ்யகாரர் ஸந்நிதி இது. உடையவர் திருமலைக்கு வந்தபோது இங்கு சிறிது நேரம் இளைப்பாறினார் என்றும், திருமலை நம்பி அவருக்கு ஸ்வாகதம் (நல்வரவு) கூறி வரவேற்றதாகவும் ஐதீகம்.
மோகாள்ள மலை தாண்டியவுடன் பெட்டி பெட்டியாக சிலைகள் காணப்படுகின்றன. இவற்றைக் காவல் காப்பது போல் அனுமன் சிலை ஒரு பெட்டியில் உள்ளது. ஸ்ரீ நிவாஸ கல்யாணம் ஆனவுடன் சீர் வரிசைகளுடன் வந்த பத்மாவதித் தாயாரைப் பார்த்து ஸ்ரீ நிவாஸன் இந்தப் பெட்டிகளில் கறிவேப்பிலை இருக்கிறதா எனக் கேட்டதாகவும், கோபம் அடைந்த தாயார் திருச்சானூர் சென்றுவிட்டதாகவும் செவிவழிக் கதை ஒன்றுண்டு!
இனி, திருமலையை அடைந்ததும் அங்கே தரிசிக்க வேண்டிய சில இடங்களைப் பார்ப்போம்.
திருமலையில் பெருமாள் சந்நிதிக்கு வடக்கில் சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் இது உள்ளது. இதற்கு முன்பு இந்த ஸிலா தோரணம் ஸ்படிக சிலையாக இருந்ததாம். கடல் பொங்கி அலைகளால் தள்ளப்பட்ட சிலைகள் எனக் கூறுகிறார்கள். உலகிலேயே அபூர்வமான ஸிலா தோரணம் இது.
பெருமாள் சந்நிதிக்குச் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் நாராயணகிரி சிகரத்தின் மேல் பெருமாள் பாதங்கள் உள்ள சிலை ப்ரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து நேராக பூலோகத்தில் கீழே இறங்கிய பகவான் இங்கு பாதத்தை வைத்து இறங்கினாராம். வருடம்தோறும் ஆடி மாதம் சுக்ல துவாதசி அன்று இங்குள்ள மண்டபத்தில் உள்ள தூண்களுக்கு 2 குடைகளைக் கட்டிப் பெருமாள் பாதங்களுக்குப் பூஜை நடக்கிறது.
இந்த இடங்கள் மட்டுமின்றி, ஆயிரங்கால் மண்டபமும் கொலு மண்டபமும், திருமலை நம்பி ஸந்நிதியும், அநந்தாழ்வான் தோட்ட மும், வஸந்த மண்டபமும் திருமலையில் உள்ளன. மேலும் ஸ்ரீ மத் அழகியசிங்கர் நிர்மாணித்துள்ள ஸ்ரீ அஹோபில மடம், ஸ்ரீ மத் ஆண்டவன் ஆஸ்ரம், பரகால மடம், பெரிய ஜீயர் மடம், சின்ன ஜீயர் மடம் ஆகியனவும் திருமலையில் அழகுற மிளிர்கின்றன.
May be an image of temple

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...