Thursday, December 8, 2022

துக்ளக் ஆசிரியர் சோ கூறுகிறார்…

 இப்ப உனக்கு நான் அந்த மாதிரி ஏன் பண்ணினேன்னு தெரிஞ்சுண்டாகணும் இல்லையா? இல்லைனா மூளை சும்மா இருக்காது, இல்லை ?”-''சோ''வைப் பார்த்து பெரியவா

(”ஏன் இந்த மகா ஸ்வாமிகள் இப்படிப் பண்ணினார்னு ஒரு விஷயம் பத்திக் கேட்டேன். அது சரியில்லையே, ஏன் அப்படிப் பண்ணினார்?” என்று தனியாக நண்பர்களிடம் 'சோ' பேசின பேச்சுக்கு பெரியவாளின் பதில் மேலே)
(இரண்டு சம்பவங்கள் இக்கட்டுரையில்) -+"சந்நியாசியான தாத்தா"(இன்று 'சோ'வின் முக்தி நாள்.07-12-2022
துக்ளக் ஆசிரியர் சோ கூறுகிறார்…

நான் ஒரு incident சொல்றேன். ஆச்சரியமா இருக்கும்.
“நான், Indian Express Group-ல நிறைய பேர், Goenka, grand sons… Arun Shourie, Gurumurthy எல்லோரும் மஹா சுவாமிகளைப் பார்க்கப் போயிண்டிருக்கோம்.
அப்போ போற வழியிலே, என் வாய் சும்மா இல்லை. என் வாய்தான் எப்பவுமே சும்மா இருக்காதே…”ஏன் இந்த மகா ஸ்வாமிகள் இப்படிப் பண்ணினார்னு ஒரு விஷயம் பத்திக் கேட்டேன். அது சரியில்லையே, ஏன் அப்படிப் பண்ணினார்?” என்று.
நான் தான் பெரிய ப்ருஹஸ்பதி ஆச்சே… எல்லாத்தைப் பத்தியும் பேச முடியுமே!” பகவான் கொடுத்த எதை use பண்றேனோ இல்லையோ, வாயை மட்டும் நன்னா useபண்ணிண்டு இருக்கேன். So, அந்தமாதிரி கேட்டுட்டேன். அப்ப குருமூர்த்தி அவாள்லாம், “நமக்கு என்ன தெரியும்? என்னமோ பண்ணியிருக்கார். நமக்குத் தெரியாது” என்றனர்.
இது தாம்பரத்துக்கும் முன்னால் நடந்த சம்பவம். காஞ்சீபுரத்துக்குப் போய் உட்கார்ந்தோம் அவர் முன்னாலே… நிறைய பேர் இருந்தா. அதனால இந்த incidentசொல்றதில்ல தப்பில்ல… ஒரு 200 ~ 250 பேர் இருந்தா. அவர் நிறைய விஷயங்கள் பேசினார். பேசிட்டு, என்னைப் பார்த்து, “இப்ப உனக்கு நான்அந்த மாதிரி ஏன் பண்ணினேன்னு தெரிஞ்சுண்டாகணும் இல்லையா? இல்லைனா மூளை சும்மா இருக்காது, இல்லை ?”
ஆடிப் போயிட்டேன். எழுந்து ஓடிப் போயிடலாம் போல இருந்தது. சாதாரணமாகவே அவர் முகத்தைப் பாக்கறதே கஷ்டம். இந்த மாதிரி சொன்னதுக்கப்புறம் என்ன பண்றதுன்னே தெரியலே. நைசா நழுவிடலாமா என்கிற அளவுக்கு வந்துட்டேன். அப்புறம் பெரிய explanation கொடுத்தார்.
எனக்காக இல்ல. அங்க இருக்கற எல்லாருக்காகவும் – தெரிஞ்சுக்கட்டும்னு…
எப்படி அவருக்குத் தெரிஞ்சுது சார் ? எப்படிக் கண்டு பிடிச்சார் அவர் ? நாங்க இங்க எங்கேயோ பேசிண்டிருக்கோம். நான் கேட்டிருக்கேன். அங்க போய் உட்கார்ந்தவுடன், “இது உனக்குத் தெரிஞ்சாகணும் இல்லியா?” என்று கேட்கிறார். இது மாதிரி சில powersஎல்லாம் இருக்கு சார்.
நான் இத சொல்றத வச்சு நான் அவருக்கு என்னமோ ஆத்மார்த்த சிஷ்யன் என்று எல்லாம் நினைச்சுடாதீங்கோ. கிடையாது. ஏதோ சில சமயம் பார்த்திருக்கிறேன். பேசியிருக்கிறேன்.. ஆனா அவருக்கு என் தாத்தா மேல ரொம்ப அபிமானம் உண்டு. அதனால கொஞ்சம் பேசுவார். அப்படி வச்சுக்கணுமே ஒழிய நான் என்னமோ அவருக்கு ரொம்ப close, சிஷ்யன் அப்படி எல்லாம் நினைச்சுடாதீங்கோ…எனக்கு அந்த அருகதை கிடையாது. But, எதுக்கு சொல்ல வந்தேன்னா, நமக்கு மீறின விஷயங்கள் நிறைய தினம் உங்க Life-லேயும் நடக்கிறது. என் Life-லேயும் நடக்கிறது. நம்ப Realizeபண்றதில்ல. இதெல்லாம் கடவுளோட வேலைன்னு…
..............................................................................................................................................
கட்டுரை-2-"சந்நியாசியான தாத்தா"
ஒரு பழைய குமுதத்தில் 'சோ'வின் கட்டுரையில் ஒரு சில துளிகள்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
சோவின் ஒ சா ம அ சா "சந்நியாசியான தாத்தா"
என்னுடைய தந்தை வழிப்பாட்டனார் ராமநாத அய்யர். அவர் ஒரு அட்வகேட்.'லா லெக்சிகன்' என்று ஒரு சட்ட அகராதியை எழுதியவர்.
செங்கல்பட்டுக்குப் பக்கத்தில் உள்ள பினாயூர்தான் எங்களுடைய ஊர். பெரிய நிலச்சுவாந்தர். வீடுகளும் பல.
உடம்பின் மேலே சட்டை போட்டுக் கொள்வதை இடையில் விட்டுவிட்டார். 'நார்மடி' என்று சொல்வார்கள். அப்படித்தான் வேட்டி கட்டுவார். வீட்டில் யாருக்காவது உடல்நலம் சரியில்லை என்றால்ஆஸ்பத்திரிக்குப்போவது அவருக்குப் பிடிக்காது. அவரே ராம ஜெபம் பண்ணுவார். அதில் குணமாகும் என்று மற்றவர்கள் நம்ப வேண்டும். அதை மீறி டாக்டரிடம் போனது தெரிந்தால் கோபப்படுவார் அதனால் டாக்டரைப் பார்க்கப்போனால் வீட்டில்அவருக்குத் தெரியாமல்தான் போவார்கள்.
திருப்பதிக்குப் போனால் சென்னையிலிருந்து நடந்தே போவார். எந்தப் படாடோபமும் அவருக்குப் பிடிக்காது. நான் சிறு குழந்தையாக இருந்த போது- அப்போது வெல்வெட் துணியில் என்னைப் படுக்க வைத்திருக்கிறார்கள்.அப்போது வெல்வெட்டின் விலை அதிகம்.[இது பிடிக்காமல் முண்டகக் கண்ணியம்மன் கோயிலுக்குப் போய் உட்கார்ந்து விட்டார்]
இப்படி இருந்த அவருக்கு ஒரு நாள் சந்நியாசம் வாங்கிக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் வந்து விட்டது. காஞ்சிப் பெரியவர் மஹாஸ்வாமிகளிடம் அனுமதி கேட்டார்.அனுமதி கொடுத்ததும் சந்நியாசம் வாங்கிவிட்டார். எல்லாச் சொத்தையும் மகன்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டு காஞ்சி மடத்திலேயே தங்கிவிட்டார்.
May be an image of 1 person and eyeglasses

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...