Thursday, December 8, 2022

*தமிழகத்தின் அரசியல் அதிசயம்..!*🚩🚩🚩

 *திரு. அண்ணாமலை கையில் எடுத்திருப்பது சாதாரண விஷயம் இல்லை. இத்தனை வருடங்களாக பலர் பேசக் கூடத் தயங்கும் விஷயம்*.

*இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படும் ஜெயலலிதாவே இவர்களின் எதிர்ப்பைக் கண்டு இந்த கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை வாபஸ் வாங்கினார் என்றால் இவர்களின் அமைப்பு ரீதியான வீரியத்தை புரிந்து கொள்ளுங்கள்.*
*ஆனால் இந்த மனிதர் இந்து கோவில் அனைத்திற்கும் பின் வாசல் வழியே செல்லாமல், முன் வாசல் வழியே செல்கிறார், திருநீறு பூசுகிறார். சந்தானம் இடுகிறார். ஓட்டுக்காக எந்த மறைமுக செயலும் செய்யாமல் நான் இந்து தான் என்று தைரியமாக மக்கள் முன் நிற்கிறார் இந்த தலைவன்.*
*சினிமா நடிகன், என்னும் கவர்ச்சி இல்லை. முன்னாள் முதல்வரின் மகன் என்னும் அடையாளமும் இல்லை.*
*இயல்பான மனிதர். ஒரு மேக்கப் இல்லை, பந்தா இல்லை. வெள்ளந்தியாக பேசும் மனிதர்.*
*எந்த குறிப்பும் இல்லாமல் சா்வ சாதாரணமாக விசயங்களை கனகச்சிதமாக ஆதாரத்துடன் பதட்டமில்லாமல், உண்மையை மட்டும் பேசும் பாங்கு. தேவையற்ற விசயங்களைக் கண்டு கொள்ளாமல் நகர்வது.*
*இந்த குணத்தை அடையாளம் கண்டுதான் அவரைக் காண கூட்டம் அலை மோதுகிறது. ஒவ்வொரு தெருக்களிலும் திரு. அண்ணாமலை கூட்டம் நடந்ததே நீ போனியா, சரியான கூட்டம் என்று சொல்லும் அளவுக்கு பறந்து விரிந்து கொண்டே போகிறது.*
*நடுநிலை இந்துக்கள் என்று போர்வை போர்த்திக் கொண்டு அலையும் இந்துக்களே இப்போது பிஜேபி பக்கம் சாய தொடங்கி விட்டார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.*
*அதிகாரி என்ற நிலையை தாண்டி கைதேர்ந்த அரசியல்வாதியாக தமிழகத்தை வலம் வரும் காட்சி அற்புதம்*.
*திராவிட அரசியல் கட்சிகள் அத்தனையும் இவரை சாதாரணமாக நினைத்தார்கள். ஆனால் இவரை எப்படி எதிா்கொள்வது என்று தெரியாமல் திணறுவது தான் தமிழகத்தின் இன்றைய அரசியல் லேட்டஸ்ட்.*
*மக்கள் லேசாக முணு முணுக்க ஆரம்பித்து விட்டார்கள். அநேகம் பேர் அண்ணாமலை என்ற மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.*
*இதனால் இப்போது உள்ள கட்சிகளின் அலறல்கள் நாம் எதிர்பார்த்த ஒன்று தான்*.
*ஆனால் உண்மையை என்றாவது, யாராவது பேசி தான் ஆக வேண்டும். அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பார்கள். பேச பேசத்தான் மக்களும் புரிந்து கொள்வார்கள்.*
*ஆனால் டெல்லியில் மோடியை யாராலும் அசைக்க முடியாது, அவரின் ஆசிபெற்ற அண்ணாமலையின் வீச்சும் பெரிய அளவில் அன்று வளந்திருக்கும்.*
*2026 ல் திமுக ஆட்சிக்கு எதிர்ப்பலையை அப்படியே தங்களுக்கு சாதகமாக இந்த கூட்டணி பயன்படுத்திக் கொள்ளும்.*
*தமிழக வாக்காள பெருமக்களே............*
*திரு. அண்ணாமலை, இவர் அரசியலுக்கு வராமல் போயிருந்தால் கர்நாடக மாநில டிஜிபியாக ஓய்வு பெற்றிருப்பார்.*
*இப்போது தமிழக மக்கள் இவரை பயன்படுத்தா விட்டாலும் கூட அவர் நிச்சயமாக இன்னும் ஒரு சில ஆண்டுகளில் மத்திய அமைச்சராக உலா வருவார், அரசியலில் எதிர்காலம் இல்லாமல் போக அவருக்கு 60 வயதோ அல்லது 70 வயதோ இல்லை வெறும் முப்பத்தி 7 வயது தான்.*
*ஆகவே திரு. அண்ணாமலை அவர்களுக்கு இழப்பதற்கு எதுவுமே இல்லை என்ற நிலையில் நன்றாக அடித்து ஆடுகிறார்.*
*ஆரம்பத்தில் அறிவாலயத்தில் முணுமுணுப்பாக கேட்டது சத்தம். இன்று அலறல் சத்தமாகவே கேட்கிறது*
*இத்தனை காலமாக நாம் எந்த மாதிரியான ஒரு தலைமைக்கு ஏங்கிக் கிடந்தோமோ, அதை அப்படியே நிறைவேற்றும் விதமாக வந்திருக்கிறார்.*
*பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு நல்ல நோக்கத்திற்காக அரசியலுக்கு வந்த தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள். இவரை முழுமையாக பயன்படுத்துவது நம் கையில் தான் உள்ளது.*
*தமிழக மீடியாக்கள் திரு. அண்ணாமலை அவர்களை எதாவது செய்து பெயரை கெடுக்க வேண்டும் முனைப்போடு அலைவது போலத்தான் தோற்றம் இருக்கிறது. அதையும் தாண்டி அண்ணாமலை அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று கடவுளை பிராத்திக்கிறேன்.*
*இப்படி ஒரு தலைவருக்காகத் தான் தமிழகம் இத்தனை நாள் காத்துக் கிடந்தது. விரைவில் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றிக் காட்டுவார் இந்த முன்னாள் போலீஸ் அதிகாரி ...*
*இனி நாம் நிமிர்ந்து தைரியமாக சொல்லலாம் உலக நாடுகள் போற்றும் அரசியல் கட்சியின் பலம் வாய்ந்த தலைவர்களின் பாதையில் செல்கிறோம் என்று சொல்லலாம்...*
*மக்களாகிய நாம் தான் விழித்துக் கொள்ள வேண்டும்.*
*இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை.*
*#விழித்து கொள் தமிழா...*
*ஜெய்ஹிந்த்*
*வந்தேமாதரம்*
*பாரத் மாதாக்கி ஜே*
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
*Annamalai Kuppusamy*
Jai shree ram ji our Martha should always be India first PM modi ji.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...