உங்ககிட்டே இருக்கும் ரூபாய் நோட்டிலே ஒரு எண் இருக்கும். அதை வைத்தும் அந்த ரூபாய் நோட்டு சரியா இல்லையா என முடிவு செய்வார்கள்.
இப்போ அந்த ரூபாய் நோட்டுக்கு பதிலாக அந்த எண் மட்டும் உங்கள் கைபேசியிலே இருந்தால் அதற்கு பெயர் தான் இ-ரூபாய்
இப்போது உங்கள் வங்கி கணக்கிலே பணம் இருந்தால் மொத்தமாக் இருக்கும். 12,436 ரூபாய் என்றால் அது மொத்தமாக ஒரு எண்ணாக இருக்கும்.
இந்த இ ரூபாய் என்றால்
2000 இ-ரூபாய் 6
200 இ-ரூபாய் 2
10 இ-ரூபாய் 3
5 இ-ரூபாய் 1
1 இ-ரூபாய் 1
என இருக்கும்.
இதிலே என்ன புதுசு? கைபேசி மூலம் பணம் செலுத்தினால் என்ன மாறூதல்?
இதே தானே இப்போ பீம் செயலி மூலம் செய்கிறோம் என கேட்டால்
ஒன்றே ஒன்று தான்.
முன்பு இது வங்கிகளுக்கு போய் தான் பணம் கைமாறும்.
அதாவது உங்கள் வங்கி கணக்கிலே இருந்து இன்னோருவர் வங்கி கணக்குக்கு போகும் அல்லவா
அதற்கு பதிலாக இதிலே உங்கள் கைபேசியிலேயே மாற்றிக்கொள்ளமுடியும்.
அந்த நிரலி வழியாக மாற்றமுடியும்.
யாரிடம் அந்த இ-ரூபாய் போய் வந்திருக்கிறது என்ற தகவலும் சேமிக்கப்படும்
அதாவது வங்கி கணக்கு இல்லாமலேயே பரிமாற்றம் செய்யலாம்.
இப்போது உங்களிடம் இருக்கும் அச்சடித்த காகித நோட்டை எப்படி பயன்படுத்துகிறீர்களோ அப்படி இந்த இ-ருபாயை பயன்படுத்தலாம்.
கைபேசி வழியாக இணையம் இல்லாமலே பயன்படுத்தலாமா என்றால் இன்னமும் அதை பற்றிய திட்டம் தொடங்கப்படவில்லை.
முழு பயன்பாட்டுக்கு வரும்போது அதுவும் வரலாம்.
தற்போதைய யுபிஐ பரிமாற்றத்தை விட இது இன்னமும் அதிக கண்கானிப்பும் வசதிகளும் கொண்டது.

No comments:
Post a Comment