மயிலை லஸ் சர்ச் ரோட்டில் உள்ள Central Bank of India மயிலை கபாலீஸ்வரர்க்கு சொந்தமான நிலத்தில் இயங்கி வருவதாக கேள்வி பட்ட ஜெபமணி மோகன்ராஜ், வங்கியிடம் வாடகை யாருக்கு செலுத்துகிறீர்கள் என்று கேட்க, வங்கி ஒரு தனியார் பெயரை குறிப்பிட்டது. திரு மோகன் ராஜ் அறநிலையத்துறை ஆணையரிடம் முறையிட, விஷயம் ஆணையர், துணை ஆணையர், செயல்அலுவலர் என்று முடிவில்லாமல் சுற்றி கொண்டிருந்தது.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Wednesday, February 1, 2023
கபாலியின் சொத்து கபாலிக்கே!
நீதிமன்றத்தில் அறநிலையத்துறை வேறு வழியின்றி அந்த சொத்தை பற்றிய உண்மைகளை கக்கியது.
1898 ஆம் ஆண்டு சௌந்தரராஜ அய்யங்கார் என்பவர் 3333 லஸ் சர்ச் ரோட்டில் உள்ள 24 கிரௌட் கபாலீஸ்வரர் சொத்தை 100 ருபாய்க்கு 99 வருட குத்தகை எடுத்தார். அந்த நிலத்தில் 4321 சதுர அடி நிலத்தை தனியார்க்கு உள்குத்தகை விட்டார். உள்குத்தகைகாரர் அங்கு கட்டிடம் கட்டி Central Bank of India மற்றும் Rex Fashionனுக்கு வாடகை விட்டு சுகமாக வாழ்ந்து வந்தார்.
2012 ஆம் ஆண்டு அறநிலையத்துறை ஒரு வழியாக விழித்து கொண்டு நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க தொடங்கியது. ஆக்கிரமிப்பாளர்கள் கோர்ட் கேஸ் என்று இழுக்க 2017 ஆம் ஆண்டு அறநிலையத்துறை ஆணையர் வாடகை காரர்களிடம் நேரடியாக நியாய வாடகை வசூலிக்க வேண்டும் என்று ஆணையிட்டார். ஆனால் கோவில் நிர்வாகம் மறுபடியும் தூங்க தொடங்கியது ( வாடகை யின் ஒரு பகுதி அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சமாக சென்றது என்று கொள்க)
திரு மோகன் ராஜ் தொடுத்த வழக்கில் இரண்டு மாதங்களுக்குள் அறநிலையத்துறை நியாய வாடகை சம்பந்தமாக இறுதி முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஒரு வழியாக இப்பொழுது அறநிலையத்துறை மாதம் ருபாய் 2.5 லட்சம் வாடகைதார்களிடம் வசூலிக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
தகவல் உரிமை அறியும் சட்டம் மற்றும் நீதிமன்றம் துணை கொண்டு எப்படி அறநிலையத்துறையை தன் வேலையை செய்ய வைக்க முடியும் என்பது திரு மோகன் ராஜ் அணுகுமுறை ஒரு சிறந்த உதாரணம்.
தியாகி நெல்லை ஜெபமணியின் மகனான திரு மோகன் ராஜ் கோவில் சொத்து மீட்பு சம்பந்தமாக மேலும் பல நல்ல வெற்றிகளை பெற்றுள்ளார். அவையாவன-
1. மயிலாப்பூர் கிளப் கபாலீஸ்வரர் சொத்தை வைத்து கொண்டு வாடகை தராமல் டபாய்த்து கொண்டிருந்தது. திரு மோகன் ராஜ் எடுத்த முயற்சியால் சுமார் 15 கிரௌண்ட் நிலத்தை கோவிலுக்கு திருப்பி கொடுத்து விட்டது. அந்த நிலத்தில் கார் பார்க்கிங் மூலம் கோவிலுக்கு வருமானம் வருகிறது.
2. சுமார் ருபாய் 2000 கோடிக்கு மேற்பட்ட நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வரம் கோவில் சொத்துக்கள் சட்டபுறப்பாக விற்கப்பட்டது. திரு மோகன் ராஜ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த சொத்துக்களை மீட்க அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டது. இப்பொழுது இது சம்பந்தமாக நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு நடந்து வருகிறது.
3. பல வருடங்களாக ஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கும் வடபழனி வேங்கீஸ்வரர் கோவில் குளத்தை மீட்க திரு மோகன் ராஜ் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற முதல் அமர்வு ஆக்கிரமிப்புகளை நீக்க உத்தரவிட்டது. ஆக்கிரமிப்பாளர்கள் உச்ச நீதிமன்றம் சென்று தடையுத்தரவு வாங்க திரு மோகன் ராஜ் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுதாக்கல் செய்துள்ளார்.
4. விருகம்பாக்கம் சுந்திரவரதராஜ பெருமாள் கோவில் குளத்தை தூர்ந்து பட்டா போட்டு மசூதி கட்ட ஒரு முஸ்லிம் கும்பல் முயல நீதிமன்ற உத்திரவின் பேரில் கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிட்டது. கலெக்டர் இரண்டு வருடங்களாக தூங்க, திரு மோகன் ராஜ் குளத்தை காணவில்லை என்று வழக்கு தொடுத்து கலெக்டர் விசாரணையில் இணைந்து கொண்டார். பிறகு விசாரணை முடிக்காத கலெக்டர் மீது நீதிமன்றம் அவமதிப்பு வழக்ககை அவர் தொடுக்க கலெக்டர் அந்த சொத்து முஸ்லிம் பார்டிக்கு சொந்தமில்லை என்று தீர்ப்பு வழங்கினார். இப்பொழுது கோவில் குளத்தை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இன்று இந்து கோவில் சொத்துக்களை மீட்க இந்துக்களிடையே ஆர்வம் பெருகி வருகிறது. ஆனால் மக்களுக்கு அதை எப்படி செய்வது என்று சரியாக தெரியவில்லை. திரு மோகன் ராஜ் போன்றவர்களை முன் உதாரணமாக கொண்டு கோவில் சொத்துக்களை மீட்க மேலும் பல இந்துக்கள் முன்வர வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment