Monday, December 28, 2015

***ஆடற்கலைகளின் வகைகளும் அதன் சிறப்பம்சங்களும்***

பரத நாட்டியம்

பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மை வாய்ந்ததும், இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் பிரபலமானதுமாகும். பரத முனிவரால் உண்டாக்கப் பட்டதனால் பரதம் என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். அதே வேளை பரதம் என்ற சொல், ப – பாவம், ர – ராகம், த – தாளம் என்ற மூன்றை யும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படு கிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம் தான் பரத நாட்டியம். நன்கு தேர்ச்சி பெற்ற தொரு நாட்டியக் கலைஞரின் முக பாவனையில்நவரசங்களின் பாவனைகளை யும் வெளிக் கொணருதலைக் காணலாம்.
 .
இந்த நடனத்தை ஆடுபவர்கள் மிகப் பெரும்பான்மையோர் பெண்களே யென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு. சைவ சமயத்தவர் களின் முழுமுதற் கடவுளான சிவன் கூட, நடராஜர் வடிவத்தில் இந்த நட னத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுவது குறிப் பிடத் தக்கது. சிவபெருமான் ஆடும் நடனம் ‘தாண்டவம்’ என்று சொல்லப் படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் ‘ஆனந்த தாண்டவம்’ என்றும், அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் ‘ருத்ர தாண்டவம்’ என்றும் அழை க்கப்படுகிறது. மென்மை யான அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடும் நடனம் ‘லாஸ்யா’ என்று அழைக்கப்படுகிறது.
.
உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது ‘அடவு’ என்று வழங்கப்படுகிறது. பல அடவுகள் சேர்ந்தது ‘ஜதி’ எனப்படு ம். அடவுகள் சுமார் 120 உள்ளன. அவற் றில் கிட்டத் தட்ட எண்பது வரை தான் தற்போது பயன்பாட்டில் உள்ளது. சிதம்பரம் ,மற்றூம் மேலக்கடம்பூர் ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் இவை செதுக்கப் பட்டுள்ளன.
 .
பரத  நாட்டியத்திற்கு பாடல், நட்டு வாங்கம், மற்றும் இசைக் கருவி களின் துணை தேவை. வீணை, புல்லாங் குழல், வயலின், மிருதங்கம் ஆகிய இசைக்கருவிகள் இவற்றில் சில. இசைக் கலைஞர்கள் மேடையின் ஒரு புறமாக அமர்ந்து இசைக்க, நடனம் ஆடுப வர் மேடையின் மையப் பகுதியில் ஆடுவார். நடனம் ஆடுபவர், நாட்டி யத்திற்காக பிரத்யோகமாக தைக் கப்பட்ட வண்ண ப்பட்டாடைகள் அணிந்து இருப் பார். மேலும் பரத நாட்டியத்திற் கான நகைகளை யும், காலில் சலங்கையும் அணிந் திருப்பார்.
 .
பரத நாட்டியம் பயிற்றுவிப்பதில் பல்வேறு பாணிகளும் உள்ளன. அவற்றில் சில, ‘பந்தநல்லூர் பாணி’, ‘வழுவூர் பாணி’, ‘தஞ்சாவூ ர் பாணி’, ‘மைசூர் பாணி’, ‘காஞ்சி புரம் பாணி’ ஆகியவை ஆகும். இக்கலையின் ஆசிரியர் களில், ‘வழுவூர் ராமையா பிள்ளை’, ‘தன ஞ்சயன்’, ‘அடையார் லக்ஷ்மணன் ‘ , ‘கலாநிதி நாராயணன்’ ஆகியோர் குறிப்படத்தக்க வர் ஆவர்
.

மணிப்புரி

.
மணிப்புரி மாநிலத்தைச் சேர்ந்த, புகழ் பெற்ற நடனம் மணிப்புரி நடனம். அந்த மாநிலத்தில் இதை பலபேர் சேர்ந்து ஆடுவது வழக் கம். இது தாண்டவம், லாஸ்யம் ஆகிய இரு வகை ஆடல்களுக்கும் இடமளிக்கி றது. மணிப்புரி நடனத்தின் அபிநயம், உடல் முழுவதையும் அசைக்கும் ஆங்கிக அபிநயத்தின் அடிப்படையில தான் அமை ந்திருக்கும். ஆகார்யமும், ஓரளவுக்கு இடம் பெற்றா லும், சாத்விக அபிநயத்திற்கோ, ஒவ்வொரு வார்த்தை க்கும் அபிநயக் கையைப் பயன்படுத்து வதற்க்கோ இதில் முற்படுவதில்லை. “லைஹரோபா” நாட்டியம், “ராசலீலா” நிருத்தம், ஆகியவை முறையாக சைவம் , வைஷ்ணவம் ஆகிய சமயங்களின் அடி ப்படையில் நிகழ்த்தப் படுகின்றன. பெண்கள் ஆடும் லாஸ்யம், மிக நளினமாகவும், குழைவாகவும் அமைந்திருக்கும். தாண்டவமுறையைச் சேர்ந்த “புங்சோலோம்” போன்ற நடனங் கள் உத்வேகம் நிறைந்ததாக இருக் கும். இந்த நடனத்தில், ஆண்கள் கையிலே “டோல்கி” என்ற மத்தளத் தை வாசித்தபடியே ஆடுவர். “கர்த்தால் சோலோம்” என்தில் கைகளால் பெரிய தாளங்களை தட்டிய வண்ணம் ஆடுவர். இவை இரண்டும் “சங்கீர்த்தன்” என்று சொல்லப்படும் வைணவ வழிபாட்டு முறையின் ஒரு அம்சமாக விளங்குகி ன்றன.
.
மணிப்புரியில், பொதுவாக பாதங்களை எப்போதும் சேர்த்தும் முழங்கால் வளைத்தும் வைக்கப் பட்டு செயல்படுவர். உடம்பின் செய்கை அலைபோல எழும்பியும், பாம்பு போன்று நெளிந்தும் இருக்கும். கைஅசைவுகளை செய்யும் பொழுது, விரைப்பாகயின்ரி இழைந்து செயல் ப்படுவர். இவர்கள் பொதுவாக எல்லா அசைவுகளிலும் ஹஸ்த காரணங்களை உபயோகிப்பர். நிருத்தஹச்தங்களையே அதிகமாக பயன் படுத்தி, அபிநய ஹஸ்தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள். மணிப்புரி சொற் கட்டுகள் “ங்” என் னும் சப்தத்தை அதிகம் பயன்படுத்தி, கேட்ப தற்கு சீன மொழியை சற்று நினைவு படுத்தும். டோல்கி, குழல், மஞ்சிரா (தாளம்) போன்ற வாத்தியங்கள் இதன் முக்கிய மான இசைக்கருவி களாகும். மனிப்புரி யில் உபயோகிக்கப் படும் ஆடை களும் அணிகலன்களும் அழகான வேலைப் பாடுகளுடன் அமை ந்திருக்கும். கூடை போன்ற வடிவம் கொண்ட ஆடை சமீப காலமாக உருவா னதே, முதலில் இவர்கள் உபயோகித்தது லுங்கியைப் போன்ற ஆடை தான். மணிப்புரி நடனம் மணிப் பூர் மக்களின் வாழ்க்கையோடு சமய அடிப்படையில் சங்கமமானதொரு அழகிய கலை. இதன் செய் முறையைக் கொண்டு, தனி நடனங்க ளையும் நிருத்திய நாடகங் களையும் கூட மணிப்புரி நடனக்காரர் கள் ஆடி வருகின்றனர்
 .

ஒடிசி

 .
ஒடிசி என்பது இந்தியாவிலிருக்கும் ஒரிஸ்ஸா மாநிலத்தில் ஆடப்படும் ஒரு நடனம். இது கோயில்களில் பேணப்பட்டுவந்த ஒரு பாரம்பரிய நடனக் கலையாகும். பதினேழாம் நூற்றாண்டில் ‘கோட்டிப் புகழ்’ எனப்படும் சிறுவர்கள் இந்நடனத் தைப் பெண்ணுடை தரித்துக் கோயில் களில் ஆடினர்.
.
வட இந்திய கல்வெட்டுக்கள் மற்றும் சிற்ப சான்றுகளின்படி, பல நூற்றாண்டுகளாக ஒடிசி நடனம் ஆடப்பட்டு வந்திருக்கிறது. ராணி கும்பா குகைகளில் காணப்படும் சிற்பங்களின் ஒடிசி நடனமாவது, கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தி லேயே ஆடப் பட்டு வந்தது என்பதற்கு சான்றாகும். சில அறிஞர்கள் ஒடிசி நடன மாவது, பரத நாட்டியத்திற்கும் முந்தயது என்று கருதுகிறார்கள்.
.
டிசி நடனத்திற்கு இசைக்கப்படும் இசை யில் கர்நாடக இசை மற்றும் ஹிந்துஸ் தானி இசை மட்டுமல்லாது ஒரிசா மாநிலத் தின் பழங்குடியினரின் இசையையும் பார்க்கலாம். பக்க வாத்தியங்கள் மத்தளம், தபலா, புல்லாங்குழல், மிருதங்கம், மஞ்சீரா, சித்தார் மற்றும் தம்பூரா ஆகிய வை அடங்கும்
.
நடன முறை
.
ஒடிசி நடன நிகழ்ச்சிகள் பெரும்பாலும் ஜகன்னாதருக்கு செய்யும் இறை வணக்க மான ‘மங்களசரண்’ என்னும் நடனத்துடன் தொடங்கும். பின்னர் குரு வந்தனம்நிகழும். அடுத்தது, தாளக்கட்டிற்கு ஏற்றவாறு ‘பல்லவி’ நடனமும், கை முத்திரைகளும், முக பாவனைக ளும் கூடிய ‘அபிநயம்’ நடனமும் ஆடப்படுகின்றன. ‘மோக்ஷம்’ என் னும் நடனம் இதன்பின் ஆடப்படு கிறது. பின்னர் விஷ்ணுவின் பத்து அவதாரங்களை விளக்கும் ‘தசாவதாரம்’ மற்றும் சிவபெருமா னின் பெருமைகளைப் பேசும் ‘பாட் நிருத்யம்’ ஆகியவை ஆடப்படுகின்றன.
ஒடிசி நடனத்தின் இன்றைய வளர் சிக்குக் காரணமாக விளங்கிய வர் குரு கேலு சரண் மகாபாத்ரா. உலக அளவில் இந்த நடனம் பேசப் பட இவரும், இவரது மாணவரான சஞ்சுக்தா பணி கிரஹியும் காரண மானவர்கள். மேலும் குரு பங்கஜ் சரண்தாஸ், குரு மாயாதர் ராவுட், குரு தேவ்பிரசாத் தாஸ் ஆகி யோரும் ஒடிசி இன்று உலக அளவில் பேசப்படக் காரணமான வர்கள்
.

கதகளி

.
கதகளி இது கேரள மாநிலத்தின் பாரம்பரிய நடன வடிவமாகும்.கதகளி நடனம், கேரள மக்களின் பண்பாட்டி னைத் தெளிவாக எடுத்துக் காட்டும் அற்புதமான தெய்வீகக் கலை. இது பல பாத்தி ரங்களைக் கொண்ட ஒரு நாட்டிய நாடகமாக ஆடப்பட்டு வரு கிறது. இராமாயணம், மகாபாரதம் போன்ற சமயம் சார்ந்த பழங்கதைகள் இந்த நடனத் துக்குக் கருப் பொருளாக அமைகின்றன.
.
கதகளி என்ற பதத்திற்கு ‘கதையை அடித் தளமாகக் கொண்ட ஆடல்’ என்பது பொருள். ‘ஆட்டக்கதை’ என்ற மற்றோர் பெயரும் இதற்கு உண்டு. இந்த நாட்டிய நாடகம், பழைய நாடக மேடைச் சம்பிரதாயங்களிலிருந்தும், தேவதைகளை வழி படும் ஆட்டங்க ளிலிருந்தும் தோன்றி யதாகக் கருதப்படுகிறது. முடியேட்டு, பகவதி பாட்டு, காளி யாட்டம், தூக்கு முதலான இந்த ஆடல் வகைகள், ஆரியர்களின் வருகைக்கு முற்பட்ட காலத்தே, மக்களின் வாழ்கையோடு ஒட்டித் தோன்றியதாகத் தெரிகிறது. கதகளி யின் விஷேச அம்சங்க ளான, பேச்சு இல்லாத அபிநயம், சமயத் தொடர்பு, மந்திரவாதத் தொடர்பு, வினோத வேஷக்கட்டு, சண்டைக் காட்சிகள் எல்லாம் சம்பிரதா யமாக அக்காலத்திலி ருந்தே நிலைத்தி ருக்கின்றன.
.
முகபாவமும், கையசைவுகளும் இந்த நடனத்தின் முக்கியமான அம்சங் களாகும். ஒப்பனையும், உடையல ங்காரமும் இதனை ஒரு தனித்துவமான நடன வடிவமாக்குகின்றன.
.
கதகளி வேசப் பொருத்தம்
 .
தேவர்கள், அசுரர்கள் முதலான புராண சம்பந்தமான பாத்திரங் களே பெரும்பாலும் இந்நாடகங்க ளில் வருகின்றபடியால், பரிச்ச யமான தோற்றத்தைத் தவிர்த்து, அமானுஷ்யமான கதா பாத்திரங்க ளாக வேஷக்கட்டு அமைகிறது. கதகளி நடிகர்கள், பச்சை, கத்தி, தாடி, கரி, மினுக்கு என ஐவகை முக வேஷத்தை ஒட்டி பிரிக்கப் படுகின்றனர்.
 .
பச்சை வேசம்
.
தேவர்கள், கிருஷ்ணன், இந்திரன் போன்ற கதாபாத்திரங்கள் பச்சை வேஷத்திற்கு உரியவராவர். இத்தகைய பாத்திரங்க ளுக்கு, அரிசிப் பொடியையும் சுண்ணாம்பையும் கலந்து முகத்திற் ‘சுட்டி’ அமைப் பார்கள். காதின் மேற்புறத்திலிருந்து தாடை எலும் பைப்பற்றி வில் போல மத்தியில் அகன்றும் நுனியில் குறுகியும் இருக்கும் படி ஒப்பனை செய் வார்கள். சுட்டியின் உட்பாகத்திலும், முகத்திலும், நெற்றியிலும் பச்சைச் சாயம் தீட்டப் படும். இதழிலே சிவப்பு, புருவத்திலே மைக்கறுப்பு, நெற்றியிலே நாமம் முதலி யன இடம்பெறும். கதகளி சம்பிரதாய அஹார்ய அபிநயம் வருமாறு: கச்சை, முன் வால், பின்வால், உடுத்துக் கட்டு, உள் குப்பாயம், வெளிக்குப் பாயம், தோள்பூட்டு, தோள்வளை, கடகம், பருத்திக் காய்மணி, கிரீடம், நெற்றிச் சுட்டு, மேல்கட்டு, சாமரம், வெள்ளி நகம் போன்ற ஆடையா பரணாதிகளே கதகளியின் சம் பிரதாய ஆஹார்ய அபிநயமாகும்.
கத்தி வேசம்
.
மூக்கின் கீழிருந்து கண்வரை கத்தரி போல, வெள்ளை பூசி, அதிலே ரத்தச் சிவப்புப் பூசினால் மேலே குறித்த பச்சை வேஷத் தில் மாறுதல் ஏற்பட்டு கத்தி வேஷம் ஆகிறது. நெற்றியிலே புருவங்களுக்கிடையிலும், மூக்கு நுனியிலும், வெள்ளை உரு ண்டைகள் ஒட்டப் பெற்று, முகத்தின் தோற்றமே மாறுபாட டைந்து இராவணன், ஹம்சன், சிசு பாலன் முதலிய அசுரர்களைக் குறிக் கின்றது. கோரப் பற்கள் பயங்கரமான இராக்ஷத தோற்ற த்தை அளிக்க வல்லன.
 .
தாடி வேசம்
 .
சிவப்பு, வெள்ளை, கறுப்பு நிறத் தாடிகளைத் தாங்கியிருப்பத னால் இந்த வகைக்குத் தாடி வேஷம் என்று பெயர். சிவப்புத் தாடி துச்சாதனனைப் போன்ற கொடியவர்களையும், வெள்ளைத்தாடி அனுமன், சுக்கிரீவன் போன்றவர்களையும் குறிக்கிறது.
.
கரி வேசம்
.
கறுப்பு சாயத்திலும், கறுப்பு உடையிலும் தோன்றும் சூர்ப்பனகை போன்ற பாத்திரங்களுக்கு கரி வேஷம் என்று பெயர்.

மினுக்கு வேசம்
.
உடம்பில் அழகிய நிறமாக இலே சாக வர்ணம் பூசி, மைக்காத் தூளைத் தெளிப்பார்கள். ரிஷிகள், பிராமணர் கள், அரக்கியர் அல்லாத மற்றப் பெண்கள் ஆகியோர்களைக் குறிக்க மினுக்கு வேஷம் அமைக் கப் பெறும். எல்லா வகைப் பாத்திரங்களும் தங்கள் கண்கள் சிவப்பாகத் தோன்றும்படி செய்து கொள்வார்கள். ஆடவர்கள் தங்கள் விரல் களில் நீண்ட வெள்ளி நகங்களைத் தரித்திருப்பார்கள். உடை யிலும் அணிகளிலும் குறிப்பிடத் தக்க மாற்றம் எதுவும் இல்லை. ஆடவர்கள் பெரும் பாலோர் கீரீடம் அணிந் திருப்பர்.
.
கதகளி நடிப்பு முறை
.
பேச்சில்லாத நாடகமான படி யால் அபிநயம் நாடகத்தின் பாஷை யாக அமைகிறது. 10 அல்லது 12 வயதிலும் ஆரம்பிக்கப் பெற்று, நடிகர்களுக்குக் கடுமையான பயிற்சியளிக்கப் படுகிறது. கதகளி நடக்க இருப்பதை மத்தளம் முழக்கி அறிவிப்பார்கள். இரவு சுமார் 9 அல்லது 10 மணிக்குத் தொடங்கி இரவு முழுவதும் நாடகம் நடைபெறும். மேடையையும் சபையையும் பிரித்துக் காட்டும் வகையிலே, பெரிய குத்து விளக்கு வைக்கப் பெற்று, அதன் ஒளியிலே நாடகம் நடிக்கப் பெறும். முதலில் மத்தளம், செண்டை வாசிப்பார் கள். இது அரங்கு கழி எனப்படும். அதன்பின் தெய்வ வணக்கம். அப்புறம் திரை நோக்கு. இது பக்திரஸமான பாடல். பாடும் போது திரைக்குப் பின்னாலிருந்து கலாசங்களுடன் ஆடும் பாடல். சில வேளைகளில் திரையைப் பதித்து முகத்தை மட்டும் சபை யோருக்குக் காட்டுவார்கள். திரை எடுத்ததும் தோடயம், புறப்பாடு போன்ற ஆடல் வகைகள், அதற் கப்புறம் மேளப்பதம். இது கதை யின் அறிமுகப்பாடல். இதன் பின்னர் ஆட்டக்கதை. இறுதியில் தனாசி என்னும் மங்களம் ஆகும் .
.
கதகளி நடனத்தில் பாடுபவர்களும், மத்தளம் செண்டை வாசிப்ப வர்களும் இருப்பார்கள். பிரதான பாடகர் பாடும் ஒவ்வொரு வரியையும் சீடர்கள் திருப்பிப் பாடுவார்கள். இவர்கள் பாடும் போ து நடிகர்கள் அபிநயம் பிடிப்பார்கள். பாட்டும், நடனமும் அநேக முறை நடைபெறும். காதற் காட்சிகளுக்கு பதிஞ்ச ஆட்டம் என்று பெயர். இது மெதுவாக ஒருமணி நேரமாவது நிகழும். கதையி லே, தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் போராட்டம் நடந்து இறுதியில் தர்மத்தின் வெற்றியையும் அதர்மத்தின் அழிவையும் கதகளி நாடகங்கள் போதிக்கின்றன. வீரம், ரெளத் திரவம் ஆகிய ரஸங்கள் கதகளியில் முக்கியத்துவம் பெறுகி ன்றன. அசுர பாத்திரங்கள் மேடை யில் தோன்றும்போது கர்ஜனை செய்வதும் முன்னால் பிடித்தி ருந்த திரையைப் பிடித்தி ழுப்பது போன்ற ஆர்ப்பாட்டங்களும் செய்வர். இவ்வாறாக இரவு முழுவதும் நடை பெறும் கதகளி விடியும் தருணத்தில் பக்திரஸமான நடனத்துடன் நிறைவு பெறும்.
 .

குச்சிப்புடி

.
குச்சிப்புடி இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வளர்ந்த ஒரு நடன நாடக வடிவமாகும். இப் பெயர் ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள குச்சிலாபுரம் என்ற கிராமத்துடன் தொடர்புடையது. 17 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி தொடக்கம் இக் கிராமத்திலிருந்து பரவத்தொடங்கிய இது இன்று இந்தியாவின் ஒரு முக்கிய நடனமாகப் பிரபலமாகியுள்ளது.
.
வரலாறு
.
நெடுங்காலமாக தேவதாசிகள் இந்த நாட்டிய நாடகத்தைஆந்திராவின் கோவில்களில் ஆடி வந்தார்கள். காலப்போக்கில் சமுதாய மாற்றத்தோடு தேவ தாசி முறை இல்லா தொழியவே இடைக் காலத்தில் பிராமணர் களால் இது வளர்க்கப்பட்டதாகச் சொல்லப்படு கிறது. அக்காலத்தில் இது பல பாத்திரங்களைக் கொண்ட நாட்டிய நாடகமாக, ஆண்களாலேயே ஆடப் பட்டதாகத் தெரிகிறது.
.
தற்காலத்தில் ஆடப்படும் குச்சிப்புடி ஆரம்ப காலத்திலிருந்த திலும், பெருமளவு வேறுபட்டுள்ளது. இன்று இந்த நடனம் தனிநபர்ஆட்டமாகப் பெரும்பாலும் பெண்களால் ஆடப்படுகிறது. இந்த ஆட்டம் பெரும் பாலும், சமயத்தொடர்புள்ள புராணக் கதைக ளையே கருப்பொருளாகக் கொண் டுள்ளன. துரித பாத அசைவு களையும், லாவகமான உடலசைவுகளையும் அடிப்ப டையாகக் கொண்டது இந்த நடனம்.
.
நாட்டிய நாடகம் மூலம் மக்களுக்கோ, அரசுக்கு ஒரு செய்தியைத் தரும் ஊடகமா கவும் இந்த குச்சிப்புடி நடனம் செயல் பட்டிருக்கி றது. ஒரு சமயம் நரச நாயக்கர் மன்னராக இருந்தபோது, வரிச் சுமையினால் மக்கள் படும் அவதியை மன்னர் பார்வைக்கு அரச வையில் இருந்த குச்சிப்புடி கலைஞர்கள் கொண்டு சென்றார்கள். மன்னனும் நிலைமையை உணர்ந்து மக்கள் துயர் தீர்த்தானாம்.
.
இசைக்கருவிகள்
.
இந்த நாட்டிய இசையில் கருவிகளாக ஹார்மோனியம், கஞ்சீரா, புல்லாங்குழல், வீணை மற்றும் வயலின் பயன்படுத்தபடுகிறது. மேலும், வாய்ப் பாட்டு பாடுபவர் கர்நாடக சங்கீதத்தில் பாட்டுப் பாட, நட்டுவனார் ஜதி சொல்ல, குச்சிப்பிடி நடனம் அரங்கேறும்.
.
நடனமுறை
.
குச்சிப்பிடி நடனத்தின் அங்கங் கள் நிருத்தம், நிருத்யம் மற்றும் நடனம் ஆகும். நிருத்தம் தீர்மானங்களையும், ஜதிகளையும் கொண்டது. நிருத்யம் என்பது பாடல் பகுதி. நடனம் என்பது முக பாவனைகள் மற்றும் கை முத்திரைகளை அடக்கியது ஆகும். நடனத்தில் ஒரு பகுதியாக வெண் கலத் தாம்பாளத்தின் விளிம் பின்மீது நின்றுகொண்டு ஆடுவதுண்டு. இந்தப் பகுதிக்கு பெயர் ‘தரங்கம்’ ஆகும். சில சமயம் தண்ணீர்ப் பானையு டனும் ஆடுவது ண்டு.
.

கதக்

.
கதக் (இந்தி: कथक, உருது: کتھک ) வட இந்தியாவில் உருவான எட்டு இந்திய பாரம்பரிய நடன வடிவங்களில் ஒன்றாகும். இந்த நடனவடிவத்திறகான மூலங்கள், கதாக்ஸ் அல்லது கதைச் சொல்லி கள் என்றழைக்கப்படும் பழங்கால த்து வட இந்தியாவின் நாடோடிப் பாணர்களுடன் தொடர்பு கொண்டி ருக்கிறது. கிராம மையப் பகுதிகள் மற்றும் கோவில் முற்றங்களில் நிகழ்வு களை நடத்திய இந்த பாணர்கள், பெரும்பாலும் புராணக் கதைகள் மற்றும் வேதப் புத்தகங் களிலி ருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிக் கதைகளை விவரித்துக் கூறுவ தில் நிபுணர்களாக இருந்தனர், மேலும் தங்கள் கதை எடுத்துரைத் தலை கை அசைவுகள் மற்றும் முகபாவங்களால் அலங்கரித் தனர். கதைகளுக்கு உயிரூட்டுவதற்கு, இசைக் கருவிகள் மற்றும் வாய்மொழி இசை களுடன் புது நடையிலான கை அசைவுகளைப்பயன்படுத்தும் ஒரு மிகச்சிறந்த எடுத்து க்காட்டு அரங்க மாக இருந்தது. இன்றைய அதன் வடிவம் கோவில் மற்றும் சமயச் சடங்குக்குரிய நடனங் கள் மற்றும் பக்தி இயக்கத்தின் பாதிப் பையும் கொண்டிரு க்கிறது. 16 ஆம் நூற்றாண்டு முதல் அது பெர்ஷிய நடனம் மற்றும் முகலாய காலத்தின் அரசவையால் இறக்குமதி செய்யப்பட்ட மத்திய ஆசிய நடனத்தின் சில குறிப்பிட்ட அம்சங்களை உள் வாங்கிக் கொண்டது.
.
கதக்கிற்கு மூன்று பெரும் பள்ளிகள் அல்லது கரானாக்கள் இருக்கின்றன, அவற்றிலிருந்தே பொதுவாக இன்றைய நிகழ்த்துனர்கள் தங்கள் வழிமரபைப் பின்பற்று கிறார்கள்: ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் பனாரஸ் கரானாக்கள் (இது முறையே கச் வாஹா ராஜ புத அரசர்கள், ஔதின் நவாப் மற்றும் வாரணா சியின் அரசவைகளில் உருவானவை); குறைந்த முக்கியத் துவமுடைய (மற்றும் பிந்தையது) ராய்கார் கரானாவும் கூட இருக்கிறது, இது முந்தைய எல்லா மூன்று கரானாக்களிலிருந்த நுணுக்க ங்களை ஒன்றுசேர்த்தது தன்னுடைய தேயான தனிச் சிறப்புடைய இசைப்பாடல்க ளுக்காகப் பிரபலமடைந்தது.
.
கதக் என்னும் பெயர் சமஸ்கிருத வார்த்தை யான கதா விலிருநு உருவானது அதற்கு கதை என்று பொருள் மேலும் சமசுகிருத த்தில் கத்தாக்கா என்றால் கதை சொல்லும் ஒருவன்/ஒருத்தி அல்லது கதைக்கு சம்பந்தப்பட்டது என்று பொருள். இந்த வடிவத் தின் சரியான பெயர் कत्थक கத்தாக் , பெறப்பட்ட வடிவத்தைக் காட்டுவதற்காக இரட்டிப் பான பல் வரிசையுடன், ஆனால் அது தற்போதைய कथक கதக் என எளிமை படுத்தப்பட்டுள்ளது. கதா கஹெ சோ கதக் என்பது ஒரு சொல் லடை இதை ஆசிரியர் கள் தங்கள் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பார்கள், இது பொதுவாக ‘கதை சொல்லும் ஒருத்தி / ஒருவன், ஒரு கதக்’ என்று மொழி பெயர் க்கப்படுகிறது, ஆனால் இது ‘எது கதை சொல்கிறதோ, அது கதக்’ என்றும் மொழி பெயர்க்கப்ப டலாம்.
.
கதக்கின் இன்றைய நிலவரம்
.
ஆங்கிலேயர் ஆட்சியின் போது வீழிச்சியிலிருந்து இன்று கதக்தன்னுடைய பிரபலத்தை மீண்டும் பெற்றுள்ளது, (அப்போது விக்டோரிய நிர்வாகத்தால் அது கீழ்த்தரமானதாகப் பார்க்கப் பட்டது), இப்போது இது அதிகார ப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்தியாவின் பாரம்பரியமிக்க எட்டு நடன வடிவங்களில் ஒன்றாக அறிவி க்கப்பட்டுள்ளது. கதக்கின் தற்போதைய வடிவம் கடந்த காலங்களில் அது பெற்ற அனைத்து உள்ளீடுகளின் ஒரு கலவையாக இருக்கிறது: அரசவை மற்றும் காதல் அம்சங்கள் கோவில் மற்றும் புராண/மதங்களுடன் இணையாய் அமர்ந்திரு க்கிறது. மஹராஜ் குடும்ப நடனக் கலைஞர்கள் (அச்சன் மஹராஜ், ஷம்பு மஹராஜ், லச்சு மஹராஜ் மற்றும் இன்றும் உயிருடன் இருக்கும் தற்போதைய பெரும் நடனக் கலைஞரான பிர்ஜு மஹாராஜ்) மற்றும் சாஸ்வதி சென் உட்பட அவருடைய மாணவர்களின் பணி கதக்கின் பிரபலத்தன்மையைப் பரப்பு வதில் வெற்றி கரமாக இருந்திருக்கிறது. அச்சன் மஹ ராஜ் அவர்களின் மற்றொரு சிஷ்யை சித்தாரா தேவி, இவர் பனாரசின் சுக்தேவ் மஹாராஜின் மகள். அவருடைய உயிர்த்துடிப்புடன் கூடிய, உற்சாக மிக்க சுடர் ஒளி மிக்க நிகழ்ச்சிகள் பல பார்வை யாளர்களின் மனதைக் கவர்ந்திருக் கிறது. ஷம்பு மஹராஜ், திருமதி. குமுதினி லக்கி யாவுக்கும் கூட பயிற்சியளித்துள்ளார், இவர் பிர்ஜு மஹராஜ் உடன் இணைந்து, கதக்கில் பல நபர் நடன மியற்றல் புதுமையை அறிமுகப்படுத்தியுள்ளார், பாரம்பரிய முறைப்படி கதக் ஒருவரே செய்யும் நடன வடிவில் இருந்தது. அவர் சுத்தமான இலக்கியத் தரம் வாய்ந்த அசைவுகள் மற்றும் பாணியைத் தெளிவான சம காலத்திய இடைவெளியைப் பயன் படுத்துத லுடன் இணைத்ததற்கான பெரும் பெயரைப் பெற்று ள்ளார்.
 .
உடைகள்
.
எளிமையான ஒன்றாக இருக்கலாம் அல்லது பரந்த விரிவடை தலை உள்ளடக்குவதற்கு அது நடனத்திற்கு ஏற்ப இருக்கலாம், ஆனால் அது வழக்கமாக முழங்கால் நீளத்துக்கு இருக்கும். ஆண்கள் ஒரு அங்கார்கா வையும் கூட அணியலாம் (மேலே பெண் உடைகள், பார்க்கவும்). குறிப்பாக பழைய வகை உடை களில் சிகரம் வைத்த தொப்பிகளும் கூட உள்ளடங்கும்.
.
வெவ்வேறு சமுதாயச் சூழல்களைப் பிரதி பலிக்கும் வகையில் அந்த நடன பாணியே மாறிய நிலையில், நடனக் கலைஞர்களின் உடைகளும் நிகழ்த்து வதற்கான உடைக ளும் மாறியிருக்கின்றன.
 .
பெண் உடைகள்
 .
பாரம்பரியமிக்க (குறிப்பாக இந்து) உடைகள் சிலநேரங்களில்புடவையைக் கொண்டிருக்கும், அது தினசரி பாணியில் அணிந்தி ருக்கலாம் அல்லது நடனமிடும்போது நகர்வுகள் தடைபடாமல் இருக்க மேலே எடுத்து செருகப்பட்டிருக் கலாம். எனினும் மிகப் பொதுவான உடை யாக இருப்பது, லெஹெங்கா-சோளி இணை , இதில் விருப்பத் தேர்வாக ஒத்னி அல்லது முக்காடு இருக்கும். லெஹெங்கா என்பது தளர்ந்து கணுக்கால் நீள பாவாடை மற்றும் சோளி என்பது இறுக்கமாகப் பொருந்தும் இரவிக்கை, பொதுவாக குட்டைக் கையுடன் இருக்கும். இரண்டுமே அதிகமான அலங் காரமாக எம்ப்ராய்ட்ரி செய்யப்பட்டிருக்க லாம் அல்லது அழகுப்படுத்தப் பட்டிருக்கலாம். லெஹெங்கா சிலநேரங்களில் ஒரு விசேஷ நடன வகைக்காக மாற்றியமைக் கப்படுகிறது, அது நீண்ட காக்ராவை ஒத்திருக்கும், அப்போது தான் சுழலும்போது அந்தப் பாவாடை பரப்பரப்புடன் விரிவடை யும்.
பெண்களுக்கான முகலிய உடைகளில் மேற்புற உடலில் இருப் பது அங்கார்கா (சமஸ்கிருதம் அங்க-ரக்ஷகா ‘கை கால் பாது காவலர்’ என்பதிலிருந்து வந்தது). இந்த வடிவமைப்பு சுடிதார் கமீஸ் போன்றே இருக்கும், ஆனால் இடுப்புக்கு மேலே அது இறுக்கமாக பொருந்தியிருக்கும், மேலும் ‘பாவாடை’ பகுதி வெளி ப்படையாக வட்டமாக வெட்டப்பட்டிருக் கும், இது சுழலும்போது கீழ்ப் பாதியை விரிவடையச் செய்யும். அதற்குக் கீழே, கால்கள் சுடிதார் மூலம் மூடப்பட்டிருக்கும் அல்லது துணி வளையங்கள் போல் தோன்றும் உடலை இறுக்கியிருக்கும் முழங்காற் சட்டை. கட்டாயமற்ற துணை உடைகளாக இருப்பது குவிந்த சிறு தொப்பி மற்றும் பண்டி அல்லது மார்பு கச்சையை உயர்த்துவதற்கு ஒரு சிறு இடுப்பளவு கையில்லாத சட்டை. இடுப்பில் ஜரி அல்லது விலையுயர்ந்த கற்களால் செய் யப்பட்ட ஒரு இடுப்புவார் கூட அணியப்படு கிறது.
.
ஆண் உடைகள்
 .
ஆண்களுக்கான பாரம்பரிய உடை திறந்த மார்புடன் இருத்தல். இடுப்புக்கு கீழே வேட்டி, வழக்கமாக இது வங்காள பாணியில் இருக்கும், அதாவது பல மடிப்புவரைகளு டன் இருக்கும் மற்றும் ஒரு முனை விசிறி போன்று இருக்கும் (நடனக் கலைஞர்கள் ஆடையை இன்னும் எளிமையாக கட்ட வேண்டுமா என்பது தெரியவில்லை). ஆண் களின் பண்டி யை அணியும் தெரிவும் கூட இருக்கிறது. முகலியர் உடைகள் குர்தா-சுரிதார் என இருந்தது. குர்தா

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...