Wednesday, December 16, 2015

ஸ்மார்ட் போன்களில் எது போலி? எது அசல்? என்பதை கண்டுபிடிப்ப‍து எப்ப‍டி? –

ஸ்மார்ட் போன்களில் எது போலி? எது அசல்? என்பதை கண்டுபிடிப்ப‍து எப்ப‍டி? – விழிப்புணர்வு பதிவு

ஸ்மார்ட் போன்களில் எது போலி? எது அசல்? என்பதை கண்டுபிடிப்ப‍து எப்ப‍டி? – விழிப்புணர்வு பதிவு
இளைஞர்களின் கையில் இந்தியா என்கிற வாசகம் மறந்து, அனைவரின் கையில் ஸ்மார்ட்போன் என்கிற
வாசகமே இன்று ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. புதிது புதிதாய்ஸ்மார்ட்போன்கள் அப்டேட் வெர்ஸன்களுடன் தினம்தினம் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அனைத்து விதமான  ஃப்யூச்சர்களையும் பார்த்து ஸ்மார்ட்போன் வாங்குபவர்களைவிட, அதன் செயல்பாடுகளில் ஆர்வமாகி, வெளித் தோற்றம் நன்றாக இருக்கிறதா என்பதை மட்டுமே பார்த்து வாங்குபவர்களே அதிகம்.
இதை தெரிந்துவைத்துக்கொண்டு, ஒரு சிலர் ஸ்மார்ட்போன்களில் ஏமா ற்று வேலைகளை அரங்கேற்றியிருக்கிறார்கள். இன்று எல்லாவற்றிலும் கலப்படம், போலி என வந்துவிட்டநிலையில் தொழில் நுட்பச்சந்தையில் போலி ஸ்மார்ட்போன்களையும் கயவர்கள் களமிறக்கியிருக் கிறார்கள்.
போலி ஸ்மார்ட்போன்களை ஒரு சில ஃப்யூச்சர்க ளை வைத்து எளிதாக கண்டு பிடித்துவிட முடியும். அவை என்னென்ன என்பதை இனி இங்கே பார்க்க லாம்.

ஐ.எம்.இ.ஐ. கவனிக்க!

இந்தியாவில் வெளியாகும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் (சாதாரண மொபைல் போன்களிலும் இந்த எண் இருக்கும்) பிரத்யேக அடையாள எண்ணாக கருதப்படும் ஐ. எம்.இ.ஐ. எண் (IMEI) கட்டாயம் இருக்கும். இந்த எண்ணானது ஸ்மாட்போனின் உள்புறம் மற்றும் ஸ்மார்ட்போன் பேக்கிங் க் பாக்ஸின் வெளிப்புறம்  அச்சிடப்பட்டிருக்கும். இந்த எண் இல்லை என்றால் அவை நிச்சயமாக போலி ஸ்மார்ட்போன்களே. அதனால் இந்த ஐ.எம்.இ.ஐ நம்பர் இல்லாத ஸ்மார்ட்போன்களை ஒரு போதும் வாங்க வேண்டாம்.
 பிரபலமான கடை; நம்பகத்தன்மையுள்ள வலைதளம்!

ஸ்மார்ட்போன்களை வாங்கவேண்டும் என ஆசைப்படுபவர்,பிராண்டட் வகை ஸ்மார்ட்பொன்களையே பரிசீலனை செய்யு ங்கள். அதுவும் பிரபல ஸ்மார்ட்போன் கடைகள், ஃப்ளிப்கார்ட், அமேஸான் போன்ற நம்பகத் தன்மை யுள்ள வர்த்தக வலைதளங்களில் மட்டுமே ஸ்மார்ட் போன்களை வாங்குங்கள்.
முன்பின் தெரியாத கடைகளில் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. காரணம், அங்கே போலி ஸ்மார்ட்போன்கள் விற்கப்படலாம். 

வடிவமைப்பும், டிஸ்ப்ளேயும்!

போலி ஸ்மார்ட்போன்களாக இருந்தால் அதன் வடிவமைப்பு ஒழுங்காக இருக்காது. அதேபோல ஒரிஜினல் ஸ்மார்ட்போன்களின் திரைக்கும் (டிஸ்ப்ளே),போலி ஸ்மார்ட்போன்களின் திரைக் கும் அதிக வித்யாசங்க ள் இருக்கும்.
போலி ஸ்மார்ட்போன்களின் டிஸ்ப்ளே தெளிவாக இருக்காது, தரம் குறை ந்ததாக இருக்கும். இதை வைத்து போலி ஸ்மார்ட் போன்களை எளிதாக இனம் கண்டுகொள்ளலாம்.
இரைச்சலான ஒலி!

போலி ஸ்மார்ட்போன்களாக இருந்தால், சீன மொபைல்கள் போல பாடல் சத்தங்கள் மற்றும் ரிங்க்டோன் ஆகியவற்றை இரைச்சலுடன்கொடுக்கும்.இதனால் ஸ்மார்ட்போன்களை வாங்கும்போது அதிலு ள்ள ரிங்டோன்களை ஒலிக்க விட்டு பரிசோதித்து வாங் கவும்.
அதே போல ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது பல செயலிகளை ஒரே நேரத்தில் இயக்கிப்பாருங்கள் போலி ஸ்மார்ட்போனாக இருந்தால் நிச்சயம் ஹேங் ஆகும். அப்போதே அந்த போனை வாங்காமல் தவிர்த்து விடலாம்.
கேமரா மற்றும் பேட்டரியை பார்க்க!
 
கேமராக்களின் தரத்தை வைத்தும் ஸ்மார்ட்போன் களின் விலை வித்தி யாசப்படுகிறது. ஆனால் போலி ஸ்மார்ட்களில் அதிக மெகாபிக்ஸல் அளவுக்கு கேமராவின் தன்மை வழங்கப்பட்டிருந்தாலும் அது 2 மெகபிக்ஸல் அளவு தரத்திலேயே இருக்கும். இதையும் பரிசோதித்துக் கொள்வது நல்லது.
மேலும், ஸ்மார்ட்போனின் மெமரி அளவை பார் த்தும் போலி ஸ்மார்ட் போன்களை கண்டுபிடித்துவிடலாம்.
ஸ்மார்ட்போனின் இதயமாக இருப்பது பேட்டரி தான். அதனால் ஸ்மார்ட்போன் வாங்கும்போது பேட்டரியின் தன்மையையும் கவனிப்பது அவசியம். போலி ஸ்மார்ட்போன்களாக இருந்தால், அதில் நிச்சயமாக சீன மொபைல்களின் பேட்டரிகளே பொருத் தப்பட்டிருக்கும்.
இனி கவனித்து ஸ்மார்ட்போன்களை வாங்குங்கள்!
=> செ.கார்த்திகேயன்



No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...