வாடிக்கையாளர்களின் அந்தரங்கத்தை உளவு பார்க்கும் AIRTEL! – திடுக்கிடும் தகவல்!
வாடிக்கையாளர்களின் அந்தரங்கத்தை உளவு பார்க்கும் ஏர்டெல் (AirTel) ! – திடுக்கிடும் தகவல்!
முன்னணி தனியார் மொபைல் சேவை நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களாக
இருந்து வரும் இணைய பயனாளிகளை ரகசியமாக உலவு பார்ப்பதாககுற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிறுவனத்தின் 3ஜி நெட்வொர்க் மூலமாக இணையத்தில் ஒருவர் இணைய பக்கத்தை பார்க்கையில் அவருக்கு தெரியாமலேயே பயனாளியின் ப்ரவுசர்களில் ரகசிய குறியீடு களை ஏர்டெல் ஊடுவச் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டை தகவல் ஆர்வலரான திஜேஷ் ஜி.என் என்பவர் சுமத்தியுள்ளார். கணினி ப்ரோகிராமிரான இவர் கூறுகையில், ஒரு பயனாளி இணையத்தை பயன்படுத்துகையில், அதில் ஜாவாஸ்கிரிப்ட்கோட் மற்றும் ஐஃப்ரேம்கள் ஊடுருவுகின்றன. இந்த கோட் (குறியீடு) எங்கி ருந்து தொடங்குகிறது என்று ஆராய்ந்து பார்த் தால் அது பார்தி ஏர்டெல் நிறுவனத்தினுடைய து என்பது தெரிய வந்தது என்கிறார்.
இக்குறியீடு ப்ரவுசிங் செசன்ஸில் ஊடுருவதன் நோக்கம் என்ன என்பது தெரியவில்லை. ஆனால் இணைய பயனாளி களின் அந்தரங்கத்தில் இது தலையிடுவதாக உள்ளது. ஏர்டெல் அல்லதுமூன்றாவது தரப்பு இணைய பயனாளியின் செயல்பாட்டை கண்டறிவது மட்டுமல்லாமல் அதனை கண்காணிக்கவும் செய்வதாக அவர் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.
பயனாளியின் ப்ரவுசிங் முறையின் அடிப்படை யில் இணையபக்கத்தில் விளம்பரங்களை உட் புகுத்தவும் இந்த ஜாவா ஸ்கிரிப்ட்கள் பயன்படுத்தப்படுவதாகவும் திஜேஷ் மேலும் கூறியுள்ளார்.
இதனிடையே இது பற்றி ஏர்டெல் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், பயனாளிகள் எவ்வளவு டேட்டா பயன்படுத்தியுள்ளனர் என்பதை தெரிந்து க் கொள்ள உதவுவதற்காக மேற்கொள்ள ஒர் நடவடிக்கையின் அங்கமாக இந்த குறியீடு கொண்டு வரப்பட்டது. இதனை தெரிவுசெய்த சில வாடிக்கையாளர்களிடம் சோதனை செய்து வந்தது. தற்போது இந்த பரிசோதனையை நிறுத்திவிட முடிவு செய்துள்ளது” என்று கூறியுள்ளது.

No comments:
Post a Comment