Saturday, December 5, 2015

இது மாதிரியான செய்திகள் தான் மக்களை குழப்பி தவறான முடிவெடுக்க வைப்பது

இது அரசியல் பேசவேண்டிய நேரமில்லை . இது இயற்கையின் சீற்றம் . இந்த சமயத்தில் கட்சி ஜாதி மத வேறுபாடுகளை கைவிட்டு ஆபத்து சமயத்தில் மக்களை பாதுகாக்க மனிதநயத்தால் ஒன்றுபடவேண்டும் அதுதான் இப்போதைய தேவை. விஷயம் தெரியாம விஷமா பேசாதிங்க மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வரும் தன்னார்வலர்களுக்கு அதிமுகவைச் சேர்ந்தவர் யாரேனும் இடையூறு செய்தால் உடனடியாக கட்சி மேலிடத்துக்கு புகார் அளிக்கலாம் என அக்கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தி இந்துவுக்கு அதிமுக நிர்வாகிகள் ஒருவர் அளித்த பேட்டியில், "மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வரும் தன்னார்வலர்களுக்கு அதிமுகவைச் சேர்ந்தவர் யாரேனும் இடையூறு செய்தால் உடனடியாக கட்சி மேலிடத்துக்கு புகார் அளிக்கலாம். 044-28130787, 044-28132266, 044-28133510 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இதுதவிர info@aiadmk.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் புகார் தெரிவிக்கலாம். அல்லது @aiadmkofficial என்ற ட்விட்டர் பக்கத்தின் வாயிலாகவும் புகார்களை தெரிவிக்கலாம்" என்றார். தன்னார்வலர்கள் கொண்டு வரும் நிவாரணப் பொருட்களை அதிமுகவினரும், பாமகவினரும் பெற்றுக் கொண்டு அதை அவர்கள் அளிக்கும் நிவாரணப் பொருட்களை வழங்குவதாக சமூக வலைதளங்களில் பரவலாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனையடுத்து, நிவாரணப் பொருட்களை வழங்கி வரும் தன்னார்வலர்களுக்கு அதிமுகவைச் சேர்ந்தவர் யாரேனும் இடையூறு செய்தால் உடனடியாக கட்சி மேலிடத்துக்கு புகார் அளிக்கலாம் என அக்கட்சி தெரிவித்துள்ளது. மேலும், அதிமுகவினர் இடையூறு செய்யும் ஆடியோ, வீடியோ பதிவு இருந்தால் அவற்றையும் கட்சி மேலிடத்துக்கு அனுப்பலாம் சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகரப் பகுதியில் துப்புரவு பணிகளை வலுப்படுத்த கூடுதலாக 1139 துப்புரவு பணியாளர்கள் பிற மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''சென்னையில் கடந்த இரு நாட்களாக மழை குறைந்துள்ள நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணியில் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என மொத்தம் 22 ஆயிரத்து 500 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் துப்புரவுப் பணியை வலுப்படுத்தும் வகையில் பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் இருந்து 25 துப்புரவு ஆய்வாளர்கள், 44 துப்புரவு மேற்பார்வையாளர்கள், 1070 துப்புரவு பணியாளர்கள் என மொத்தம் 1139 பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு, தற்போது பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 52 குப்பை லாரிகளும் வரவழைக்கப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்டவர்கள் 114 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, தினமும் 1 லட்சத்து 32 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான உணவு, 252 அம்மா உணவகங்கள் மற்றும் 4 மைய சமையல் கூடங்களில் இருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. 200 வார்டுகளிலும் 292 மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. மழைநீர் தேங்கிய பகுதிகளில் பிளீச்சிங் பவுடர்கள் தூவப்பட்டு வருகிறது'' என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயா படம் ஓட்டக் கூடாது என்று காவல்துறையும்,,அண்ணாதிமுக தலைமை கழகமும் அறிவித்துள்ளது.

HORLICKS திருடர்கள் இன்று வந்து கருத்து மழை பொழிவார்கள் ..ஜூலை 2010 இல் 10000 பாட்டில் HORLICKS சரக்கு ஏற்றி வந்த வட நாட்டு லாரி டிரைவர் இரவு உணவுக்கு நிறுத்த ... வந்து பார்த்த போது லாரி எம்ப்டி ...கியா ஹே என்று அதிர்ச்சி அடைந்த டிரைவர் போலிஸ் புகார் கொடுக்க .. 2 தினம் கழித்து திமுகவினர் மதுரை மக்களுக்கு நல திட்ட உதவியாக HORLICKS பாட்டில்களை வழங்கினர் ...பஞ்சாபு சிங்கு இன்னும் மதுரையில் .கியா ஹே .கியா ஹே என்று அலைவதாக கேள்வி .இப்படிப்பட்ட மலிவு விளம்பரத்திற்கு அதிமுக தலைமை ஒருநாளும் ஒப்புதல் அளித்திறுக்காது' கட்சியில் உள்ள புல்லுருவிகளோ அல்லது எதிர்கட்சியில் ஒரு சிலரோ அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த செய்யும் செயலாக இருக்கும்' முதல்வர் இதில் உடனே தலையிட்டு இப்படிப்பட்டவர்களை கடுமையாக தண்டிக்க r வேண்டும்' இல்ல எனில் அரசுக்கும் அதிமுக கட்சிக்கும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அவப்பெயர் ஏற்படப் போவது உறுதி.
நிவாரணத்தை அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னாள் கொடுக்கணுமாம் ஒரு பெரியவர் கூறுகிறார் அதுவும் இத்துனை வருஷம் ஆட்ச்சியில் இருந்தவர் இவர் தெரியபோவதில்லை அத்துனையும் 6 மாதத்தில் மறந்துவிடும் நிதர்சன உண்மை செய்தாரோ? பாவம் வராது வந்த மாமழை ஆசையில் மண்ணை போட்டுவுட்டது வானத்து சுனாமி ஆளும் கட்ச்சிக்கு சாதகமாக்கிடுத்தாம் பாருங்கள் என்ன சூப்பர் package முதல்வர் கொடுக்கபோராங்கோ அப்புரம் வெள்ளம் வந்த சுவடே யாதெனில் மக்களும் மிகபெரிய தவறை செய்துள்ளனர் பிளாஸ்டிக் கழிவுகளை அதிகம் கால்வாய்களில் போட்டனர் கண்டபடி பாதுகாப்பான இடம் இல்லாத இடங்களில் ஏரிகளில் குளங்களில் ஆறுகளில் ஆக்கிரமித்து வீட்டை கட்டிகொண்டனர் அதற்க்கு அப்ப்ரோவல் கொடுத்த அரசு அதிகாரிகள் மகா புண்ணியவான்கள் சிட்டி உள்ளேயும் இதே நிலைமை இவை இல்லாவிட்டாலும் இந்த மாதிரி இயற்க்கை சீற்றம் நிச்சயம் யாரையும் விட்டுவைக்காது நடந்தது பேரழிவு ஜப்பான் அமெரிக்க போன்ற நாடுகள் இதே நிலைமையை சந்தித்துள்ளது இன்னமும் சந்திக்கிறது ஆகையால் அவர்களின் உதவியை நாடி இனிமேல் வராமல் இருக்க என்ன seiyya வேண்டும் என்பதை தீர்மானிக்கவேண்டும் அரசாங்கம் முடங்கவில்லை இது ஒரு பெரிய நிகழ்வு சும்மா அரசாங்கம் செயல்படவில்லை என்று புலம்புவதை நிறுத்திவிட்டு அரசுக்கு கைகொடுத்து மறு கட்டமைப்பை செய்துகொண்டு இனிமேல் பத்திரமாக வாழனும் இயற்க்கை சீற்றம் யாரையும் விட்டுவைக்காது அதற்க்கு ஜாதி மதம் பணக்காரன் ஏழை குடிசை மாடி வீடுகள் பேதம் இருக்காது எல்லாரும் சமமே மக்களுக்கு இலவச அறிவிப்புகள் தவிர்த்து உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தி விட்டால் எந்த ஆட்ச்சியும் தோற்காது அன்று சுனாமியை தானே புயலை மற்றும் இன்று இந்த பேய் மழையை சந்தித்த அரசு அதை இனிமேலும் வராது பார்த்து கொள்ளும் முதல்வரின் அறிவிப்புகள் நிச்சயம் சூப்பர் ஆக இருக்கும் நிரந்தர தீர்வை நிச்சயம் கொடுப்பார்கள் அப்போது செயல்படாத அரசுன்னு கோபாலபுரத்து கையால் உலக நாயகன் இங்கு வாசிக்காமல் வேறு எங்காவது ஓடி போகணும்.


இவ்வளவு மழைக்கும் காரணம் தி.மு.க தான்.அவரது கட்சியினர் தான் கரை ஓரங்களில் குடிசை போட்டு கொடுத்தார்கள்.கண்டபடி நிலங்களை அபகரித்து இன்று மக்களை நடுத்தெருவில் நிறுத்தி உள்ளனர்.2000 கோடி தற்போது மத்திய அரசு வழங்கி உள்ளது.இதை வைத்து ஒரு பெண்மணி எவ்வளவோ முயற்ச்சிகள் செய்து இன்று ஓரளவு மக்கள் நிம்மதியாக வெளி வருகிறார்கள்.தன்னிற் வடிந்தவுடன் எல்லாம் நன்றாக இருக்கும்.இந்த பெண்மணியை எல்லோரும் பாராட்டுகிறார்கள்.ஆனால் கிழ் தர எண்ணம் கொண்ட தி.மு.க எதை செய்தாலும் குறை தான் சொல்கிறது.கருணாவின் மகன் சவள பிள்ளை போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு என்னென்ன வோ பிதற்றுகிறது .மோடி வந்து போன பின் ராணுவம் வந்து எவ்வளவோ உதவிகளை செய்து கொடுத்து உள்ளார்கள். ஒரு பெண்ணாயிருந்து இவ்வளவு காரியங்களை செய்வதற்கு ஒரு பாராட்டு வேண்டாம் பொறாமை பிடித்தவர்கள்.0.ஐயோ இவ்வளவு பணமும் பொருளும் வந்து இருக்கிறதே.இதில் எவ்வளவோ கொள்ளை அடித்து இருக்கலாம் எல்லாம் வீணாகி விட்டதே என்று கருணாவின் கும்பல் புலம்புவது கேட்கிறது.குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க கருணா கும்பல் காத்து இருக்கிறது.மக்களே ஏமாற வேண்டாம்.ஓர் அரசாங்கம் செய்யும் நல்ல காரியங்களில் இப்படிப்பட்ட செயல்களை கட்சியின் சிலர் அதீத ஆர்வம் என்று கூட அல்ல..மிக கஷ்டப்பட்டு மக்கள் தவிக்கின்றபோது கூட வாராமல்...குளுகுளு பிரதேசம் கேரளா சென்று உடல் சூடு தணிய மீண்டும் மாப்பிள்ளை முறுக்கு பெறுவதுபோல..கிழவி மஞ்சள் தேய்த்து வந்ததுபோல ஸ்டாலின் போன்றோர் மழை தணிந்து மக்கள் வீடு திரும்புகின்ற நேரத்தில் வந்து தங்களது மாபெரும் தொலைகாட்சிகள் மூலம் இந்த அரசு ஏதும் செய்யவில்லை என்று தொடர்ந்து கூவுவதை தடுக்கவே கொடுக்கப்படும் நிவாரண உதவி பொருட்களில் மக்களுக்கு நன்கு தெரியும்பொருட்டு முதல்வர் படத்தினை ஒட்டி விநியோகம் செய்ய முயற்சித்தனர். இது ஆங்காங்கே உள்ள தொகுதி கவுன்சிலர்களுக்கு நன்கு தெரியும் என்பதால் இப்படி செய்தனர். இந்த புகைப்படத்தை மட்டுமே மீண்டும் மீண்டும் காட்டி பிரச்சாரம் செய்யும்போதே தெரியவில்லையா? ஏன் முதல்வர் படத்தை ஒட்டி விநியோகித்தனர் என்று. ஏன் பா ம க அன்புமணி செய்யவில்லையா? திமுகவினர் கொடிகளை வைத்துகொண்டு வெறும் மஞ்ச சோற்றை தந்ததை கூட பெரிய அளவில் தங்களது ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்யவில்லையா? ஊருக்கு நாளே நாலு உறுப்பினர்களை கொண்ட கட்சியான பா ஜ க தலைவி...நாலுமணி நேரம் மேக்கப் செய்துகொண்டு மேட்சிங்காக சேலை ஜாக்கெட் காதுக்கு அதே கலருக்கு தேடிப்பிடித்து காதுக்கு தொங்கட்டான் போட்டு அழகுபடுத்திக்கொண்டு படகிலே வரும்போதுகூட கட்சி கொடியை கட்டிக்கொண்டு வந்தார்களே..அதனை நீங்கள் செய்தியில் படமாக போட்டு காட்டியிருந்தால்..நீங்கள் செய்யும் பா ஜ க தேர்தல் பிரச்சாரத்தில் நியாயம் இருந்திருக்கும்..யாருமே யோக்கியமில்லை குற்றம் சுமத்துவதில் என்பதில் மட்டும் மாற்றமே கிடையாது..மக்களை காக்கின்ற பொறுப்பு இன்றைய அதிமுகவுக்கு பிற கட்சிகளை விட மிக அதிகம் இருக்கின்றது..ஏன் என்றால் சென்னை அதிமுகவின் மாபெரும் ஆதரவு கோட்டை. அதிலே ஓட்டை விடுவதோ கோட்டை விடுவதற்கோ சந்தர்ப்பம் இருக்க கூடாது என்பதால்..செய்தனர்..செய்வார்கள்..பிறர் செய்வதை நிறுத்துகின்றவரை...பிறரை நம்பி இதுபோன்ற நிவாரண பொருட்களை விட்டுவிட தயாரில்லை..பொறுப்பாக மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்கிற நல்ல எண்ணமே ஓங்கி இருப்பதால்..அரசு தருகின்ற..நிவாரண பொருட்களுக்கு முதல்வர் அம்மா படங்களை ஓட்டுவதில் தவறில்லை..இல்லை என்றால்..அந்த நிவாரண பொருட்களை திமுகவினர் அபகரித்துக்கொண்டு விற்றுவிட சந்தர்ப்பம் அதிகமாக இருப்பதால் மக்களுக்கு விநியோகம் செய்கின்ற பொருட்கள்..என்பதை உறுதி செய்யவே இப்படி செய்கின்றார்கள்...ஆரம்பம் அக்கப்போர்..... அதிமுகவை பழி கூறி தலைப்பு செய்திகள் சுமந்து வருவது..

இந்த நேரத்தில் இப்படிப்பட்ட செயலை யார் செய்தாலும் அது மிகவும் கீழ் தரமான செயல். இது நம் அரசியல் வியாதிகளின் மட்டரகமான செயலை வெட்டவெளிச்சமாக காண்பிக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...