வாரம் ஏழு முட்டைகளுக்கு மேல் சாப்பிட்டால், மரணம் நிச்சயம்! – அதிர்ச்சித் தகவல்
வாரம் ஏழு முட்டைகளுக்கு மேல் சாப்பிட்டால் மரணம் நிச்சயம்! – அதிர்ச்சித் தகவல்
முட்டை மீது அலாதி விருப்பம் கொண்டிருக்கிறீர்களா ? தினமும் முட்டை சாப்பிடவேண்டும் போலிருக்கிறதா? உங்களுக்கு ஒரு
அதிர்ச்சி வைத்தியம் தருவதற்காகவே வந்திருக்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று.
வாரம் ஏழு முட்டைகள் அல்லது அதற்கு மேல் உண்பவர்களுக்கு மரணம் விரை விலேயே வரும் வாய்ப்பு 23% அதிகரிக் கும் என்பதே அந்த ஆய்வு!
வாரம் ஏழு முட்டைகள் அல்லது அதற்கு மேல் உண்பவர்களுக்கு மரணம் விரை விலேயே வரும் வாய்ப்பு 23% அதிகரிக் கும் என்பதே அந்த ஆய்வு!
அதிலும் குறிப்பாக நடுத்தர வயதுடைய வர்கள் இந்த எல்லையைத் தாண்டி முட்டையை உட்கொண்டால் ஆபத்து அதிகமாம்.
நீரிழிவு நோயாளிகள் எனில் முட்டையின் பக்கம் பார்வையைக் கூடதிருப்பக் கூடாதாம். அவர்கள் ஒரு முட்டை சாப்பிட் டாலும் அது அவர்களுக்கு இன்னலை உண்டாக்கி விடக் கூடும். விரைவில் மரணமடையும் வாய்ப்பு 50 விழுக்காடு அதிகரிக்கும். இப்படி அடுக்கடுக்காய் சொல்லி முட்டை பிரியர்களின் விருப்பத்துக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கின்ற னர் ஆராய்ச்சியாளர்கள்.
இதய நோய், வலிப்பு போன்ற பல நோய்களை இந்த “அதிக முட்டைஉண்ணும் பழக்கம்” இழுத்துக் கொண்டு வந்து நமது உடலுக்குள் புகுத்தி விடுகிறது. முட்டையில் காணப்படும் அதிகப்படியான கொழுப்புச் சத்து இதன் காரணமாய் இருக் கலாம் எனத் தெரிகிறது.
இந்தஆய்வை நிகழ்த்திய ஹார்வேர்ட் குழு வினர் சுமார் இருபத்து ஏழு ஆண்டுகளாக, இருபதாயிரத்துக்கும் மேற்ப ட்ட நபர்களை ஆய்வு செய்து கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த முடிவை எட்டியிருக்கின்றனர்.
இதய நோய்க்கும் முட்டைக்கும் இடையே நிரூபிக்கப்பட்ட தொடர்பு ஏதும் இல்லையென்றாலும் இருபது ஆண்டு இடைவெளி யில் அதிக முட்டை சாப்பிட்டவர்களில் 23 விழுக்கா ட்டினர் மரணமடைந்திருக்கிறார்கள் என்பது முட்டை உணவின் பாதுகாப்பற்ற தன்மையை விளக்குகிறது..
எனினும் அதிகபட்சமாக ஆறு முட்டைகள் வரை உண்பது கெடுதலை ஏற்படுத்துவதில்லையாம். முட்டையும் எல்லா உணவு வகைகளையும் போன்றதே! மிக நன்று எனவோ, மிகவும் கெடு தல் எனவோ தெளிவான நிர்ணயம் செய்ய முடி யாது எனவும் அவர்கள் தங்கள் ஆய்வில் தெரிவி த்திருக்கின்றனர்.
முட்டை மீதான இந்த ஆராய்ச்சி “அளவோடு உண்டு வளமோடு வாழ” நம்மை எச்சரிக்கிறது.
No comments:
Post a Comment