துவண்டு போன சென்னை வாசிகளின் துயர்துடைக்க உதவிக்கரங்கள் ஓராயிரம் நீழுகின்றன.
சாதிஇல்லை, மதம் இல்லை, மொழி இல்லை. கண்ணில் தெரிவது மனித நேயம் மட்டும்தான். தங்களால் முடிந்த நிவாரண பொருட்களை திரட்டி கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பலர் செல்கிறார்கள்.
எல்லா பகுதிகளிலும் உணவு, தண்ணீர், போர்வை, ரொட்டி, பிஸ்கட்டுகள் என்று பலவிதமான உதவி பொருட்கள் வந்து கொண்டே இருக்கின்றன. 2 போர் கப்பல்களிலும் 100 டன் நிவாரண பொருட்கள் வந்துள்ளன.
து. இந்த நிவாரணங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டவர்களின் வலிக்கு நிச்சயமாக ஆறுதல் அளிக்கும்.தமிழக அரசு இன்று முதல் 4 நாட்கள் மாநகர பஸ்களில் இலவசமாக பயணம் செய்து ள்ளலாம் என்று அறிவித்துள்ள
வீடுகளின் முதல் தளம் வரை புகுந்து துவம்சம் செய்த மழை நீர் மெல்ல மெல்ல வடிந்து வருகிறது. அடுத்தவர் உபசரிப்பில் மேல் தளங்களில் தஞ்சம் அடைந்து இருந்தவர்கள் வீடு திரும்பி வருகிறார்கள்.
பெரு வெள்ளத்தில் சிக்கி கண்ணீர் வடித்த மக்கள் தண்ணீர் புகுந்த தங்கள் வீடுகளின் நிலையை பார்த்து வடிக்கும் கண்ணீர் ஆறாக பெருக்கெடுக்கிறது.
ஆசை ஆசையாய் வாங்கி வைத்திருந்த பிரிட்ஜ், டி.வி. வாஷிங்மெஷின், மிக்சி, கிரைண்டர், கம்ப்யூட்டர் பொருட்கள் அத்தனையும் உருக்குலைந்து விட்டன.
மின்விளக்கு, மின் விசிறி உள்ளிட்ட மின்சார பொருட்களும் செயலிழிந்து போனது. துணிமணிகள், ஆவணங்கள், புத்தகங்கள், கியாஸ் அடுப்புகள் உள்ளிட்ட உடமைகள் அத்தனையும் கந்தல்கோலமாகி கிடக்கின்றன.
ஒவ்வொரு வீட்டிலும் இழப்பீடு என்பது லட்சத்துக்கு மேல் இருக்கும். தண்ணீர் வடிந்தாலும் இந்த இழப்புகளை சரிகட்ட மாதங்கள்.... ஏன் வருடம் கூட ஆகலாம்.
எல்லாவற்றையும் அரசு சரி கட்ட முடியாது என்பது மக்களுக்கும் தெரியும். பஸ்சில் இலவச பயணம், நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல் படுத்துவது போல் இழந்து போன மின்சாதன பொருட்களும், எலக்ட்ரானிக் பொருட்களும் சலுகை விலைகளிலாவது அவர்களுக்கு கிடைப்பதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட மக்கள் துயரத்தில் இருந்து மீண்டுவர மனித நேயத்தோடு போராடி கொண்டிருக்கும் போது பீதியை கிளப்பிவிட்டு மகிழ்பவர்களும் இருக்கிறார்கள்.
தண்ணீர் சற்றே வடிந்து முளங்கால் அளவு தண்ணீருக்குள் வீடுகளில் திகைத்து கொண்டிருந்த மக்களை செம்பரம்பாக்கம் ஏரி உடைந்து விட்டதாக நேற்று சிலர் கிளப்பிய பீதி மீண்டும் திகிலடைய வைத்தது. நேற்று மாலையில் கொட்டிய மழையில் உயிரை கையில் பிடித்தபடி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் ஓடியதால் குழந்தைகளை தவறவிட்டு அவர்களை தேடி கதறி அழுதபடி ஓடிய பெண்கள் – வயதானவர்களை தூக்கி கொண்டு ஓட முடியாமல் ஓடியவர்களை காண பரிதாபமாக இருந்தது. அவர்களிடம் போலீசார் பீதியை நம்பாதீர்கள் என்று தடுத்து அனுப்புவதற்குள் பெரும்பாடு பட்டனர்.
ஏற்கனவே கனமழையை பார்த்து அழுது கண்வீங்கி கவலை தோய்ந்த முகங்களுடன் இருக்கும். மக்களிடம் மீண்டும் பீதியை ஏற்படுத்தும் வகையில் வருகிறது சூரிய புயல். இது இதை விட பெருமழையை கொண்டு வரும். இது நாசா தகவல் என்று வாட்ஸ் அப்பில் கிளப்பி விட்டுள்ளனர்.
இது தவறான தகவல் என்று நாசாவே மறுத்து ஒரு மாதம் ஆகிவிட்டது. சந்தர்ப்பம் பார்த்து இப்போது மீண்டும் அந்த பீதியை கிளப்பி விட்டுள்ளார்கள்.
அடுத்தவர் வடிக்கும் கண்ணீரிலும், வேதனையிலும் அப்படியென்ன அற்ப சந்தோஷம்? உதவிக்கரம் நீட்டலாம். அல்லது உபத்திரவம் செய்யாமல் ஒதுங்கி இருக்கலாம்.
புலி வருது புலி வருது என்று ஏமாற்றுபவன் உண்மையிலேயே நிஜப்புலியிடம் ஒரு நாள் சிக்கி கொள்வான். அதைப்போல் இப்படி பீதியை கிளப்புபவர்களும் கண்டிப்பாக சிக்கலில் மாட்டி சீரழிவார்கள் என்பதை உணர்ந்தால் அவர்களுக்கு நல்லது.
No comments:
Post a Comment