விஞ்ஞானம் சொல்லும் சில விசித்திர உண்மைகளும், பல ஆச்சரிய சம்பவங்களும்!
இந்த உலகத்தில் நாம் அதிசயிக்கும் வகையில் சில உண்மைகளும், ஆச் சரியப்படும் அளவுக்கு பலசம்பவங்களும் உண்டு. அவற்றை நீங்கள் படித் தால், வியப்பின்
உச்சத்திற்கே நீங்கள் செல்வீர்கள் என்பது நிதர்சனமான உண்மை. இதோ
அந்த உண்மைகளையும் சம்பவங்களையும் இங்கு பார்ப்போம்.

*ஒரு ஆண் தன் வாழ்நாளில் 6 மாதங்களை ‘முகச் சவரம்’ (ஷேவ்)செய்வதற்கு எடுத்துக்கொள்கிறானாம். அதே போல் நீங்கள் புகைப்பிடிப்பவராக இருந்தாலும் ஆறு மாத காலங்களை வீணாக்குகிறீர்களாம்!
* கவலை தரும் செய்தி ஒன்று : ஒவ்வொரு 90வது நொடிக் கும் ஒரு பெண், பிரசவத்தின் போது இறக்கிறாளாம் என ஆய்வு சொல்கிறது.
*உலகில் பணக்கரப்பெண்களை கணக்கிட்டால் இருபதில் ஒருவர்தான் சொந்தமாக பணக்காரர் ஆவராக இருக்கிறா ராம். ஏனையவர்கள் தங்கள் அப்பாவின் சொத்து மூலமா கவோ, கணவரின் சொத்து மூலமாகவோ பணக்காரர் ஆனவர்களாம்.
* மிக சுவாரஷ்யமான செய்தி ஒன்று : ஒரு பெண்ணால் சராசரியாக 47 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் தான் தங்கள் ரகசியத்தை பேண மு
டியுமாம். (அடடே..)
* எந்த உடையை அணிந்து வெளியில் செல்வது? என்ற யோசனைக்கு வாழ்நாளில் ஒரு வருடத்தை செலவு செய் கிறார்களாம் பெண்கள்!
* உங்கள் மூளை தினமும் சிந்தித்துக்கொள்ள உடலில் இருந்து 20 தொடக்கம் 30 விழுக்காடு கலோரிகளை எடுத்
துக்கொள்கிறதாம்.
* ஆணோ, அல்லது பெண்ணோ தனது 35 வது வயதை அடைந்து விட்டதும், தினமும் 7000 மூளை செல்களை இழக்க ஆரம்பித்துவிடுகிறார்களாம்.
* லண்டனில் ஒவ்வொரு பெண்ணும், தன் வாழ்நாளில் சராசரியாக 111 கைப்பையை சொந்தமாக வாங்கி வைத்துக் கொள்கிறார்களாம்.
*இருவர் உதட்டோடுஉதடு வைத்து முத்தமிட்டுக் கொள் ளும் போது 10 மில்லியன் தொடக்கம் 1 பில்லியன் வரை ‘பக்டீரியாக்களை’ இடம் கடத்துகிறார்களாம்.
No comments:
Post a Comment