Saturday, December 5, 2015

தண்ணி தேங்கியிருப்பதால் மின்சாரம் பாய்ந்து உயிர் சேதம் ஏற்படும் , இதனால் தான் சேவை தடைபட்டுள்ளது , பெரும் இடர் களத்தில் மக்களும் அனைவர் நலனையும் பார்க்க வேண்டும்

சென்னை மக்கள் இந்த சூழ்நிலையில் வாடுவது மிகவும் கவலைக்குரிய விஷயம் தான். ஆனால் இதற்கு அரசாங்கத்தை மட்டும் குறை கூறி கொண்டிருப்பது அறியாமை என்பது என் கருத்துஇந்த வெள்ள பேரபாயம் ஒரு கடுமையான எச்சரிக்கையை தந்திருக்கிறது. இனி மேலும் இந்த எச்சரிக்கையை அதிகாரிகள் மட்டுமின்றி, அரசியல் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்த வாதம் வரும்.இதில் ஒரு நல்ல படிப்பினை என்னவென்றால் பணக்காரனுக்கு ஏழை சோறிடுகிறான். அணைத்து மக்களும் ஜாதி , மதம்,இனம் மறந்து ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொண்டிருகின்றனர். அண்டை மாநில மக்களும் உதவிசெய்து கொண்டிருகின்றனர். இதுதான் உண்மையான தேசிய ஒருமைப்பாடு. பணம் படைத்த மக்களுக்கு ஒரு வேண்டுகோள். என்னதான் பணம் இருந்தாலும் இதுபோல் ஒரு இக்கட்டான சமயத்தில் எதுவும் உங்களுக்கு உதவாது.உண்மையான அன்புடன் ஒருவருக்கு ஒருவர் உதவுவது என்றுமே நிலைக்கும். ஆகவே இந்த நிலை மாறியவுடன் நீங்கள் சேர்த்து வைத்து இருக்கும் பணத்தை எதாவது ஒரு ஏழை குடும்பத்திற்கு உதவுங்கள். வாழ்க இந்தியா. வளர்க மானுடம். முக்கியமாக பொதுமக்கள் மிகவும் சீரியஸாக எடுத்துகொள்ள வேண்டும். வெறுமனே அதிகாரிகளையும், அரசியல் வாதிகளையும் இந்த பிரச்சினைக்கு குறைகளை சொல்லாமல் பொதுமக்கள் தங்கள் கடமையை உணரவேண்டும். .. யாரையும் குறை சொல்லாதிர்கள். குறை சொல்ல நேரம் இதுவல்ல........ துணிச்சலாக கடமையாற்றும் இந்த மனிதர்களை பாராட்டி வணங்கத்தான் வேண்டும். பாராட்டுக்கள், வணக்கங்கள்.சென்னை போன்ற மக்கள் நெரிசல் அதிகமாக உள்ள இடங்களில் 

இது போன்ற பேரழிவுகள் முன்னெப்போதும் நடக்காத நிலையில், இதிலிருந்துதான் பாடம் கற்றுக்கொள்ள வேண்டி உள்ளது, அமெரிக்கா போன்ற நாடுகளில் வானிலை அறிக்கைகளும் துல்லியமாக உள்ளது, மக்களும் வரும் இடர்களை கணித்து முன்னெச்செரிக்கை நடவடிக்கையில் தாங்களே இறங்குகின்றனர், இங்கு அப்படி இல்லை, மக்கள் கண் முன் தண்ணீர் வந்தாலும் அது கழுத்தளவு தாண்டும் வரை சமாளிக்கலாம் என்ற அசட்டு தைரியத்தில் உள்ளனர், மும்பை ஒரு நாள் மலைக்கே 1785 பேர் மரணமடைந்த சூழலில் இங்கு மூன்று நாள் பெரு வெள்ளத்திலும் அச்சமூட்டும் வகையில் மரணங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது, பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்கள் இது போன்ற நெருக்கடியான சூழ்நிலையில் பொறுப்பாக இங்கு நடந்து கொள்வதில்லை, பாதிக்கப்பட்ட எவரும் செய்தி சேனலை பார்த்துகொண்டிருப்பதில்லை, பாதிப்படையாத மக்கள் இதனை ஒரு வேடிக்கையாக பார்க்கின்றனர், பெரு வெள்ளம் கரை புரண்டு ஓடும் நிலையில் பாலங்களின் அருகில் அவசியமில்லாத மக்கள் கூடியிருந்தனர், அவர்களை கட்டுபடுத்தவே பெரிய அளவில் போலீஸ் தேவைபடுகிறது, இவர்களால் சாலையில் வேகமாக மீட்பு வாகனங்கள் ஆட்கள் நகருவது சிரமமாகியது, எந்த பத்திரிக்கையும் ஊடகமும் இவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை, மேலும் அவர்களே மீட்பு வாகனங்களிலும், படகுகளிலும் முதல் ஆளாக ஏறி படமெடுப்பதில் ஆர்வம் காட்டினர், மக்களை மீட்க செல்லும் படகுகளில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை அளவிலேயே ஆட்களை ஏற்றமுடியும் என்ற சூழ்நிலையில் ஒவ்வொரு சேனல் காரர்களும் படகில் ஒரு கேமராமேன் செய்தியாளர் என்று இரண்டு பேர் இடம் பிடித்தனர், மேலும் மக்களை மீட்டு கொண்டிருக்கும் பேரிடர் மீட்பு குழுவினர் முன் மைக்கை நீட்டி அவர்கள் நேரத்தை வீணடித்தனர். இன்று தங்கள் வீட்டில் தண்ணீர் இல்லை என்றால் உடனே கரண்ட் வேண்டும் என்று போராடுகின்றனர், மற்ற தண்ணீரில் இருப்பவர்கள் எப்படி போனால் நமக்கென்ன என்ற எண்ணம், இப்படி குறைகள் பரவலாக எல்லோரிடமும் இருக்கும் சூழலில் எதோ அமைச்சர்களும் அதிகாரிகளையும் மட்டுமே பலிகடா ஆக்குவது எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் குள்ளநரித்தனம், அதற்க்கு ஊடகங்களும் துணைபோவது வருந்ததக்கது.

அன்பார்ந்த நண்பர்களே, இந்த மழை சென்னையிலோ அல்லது கடலூரிலோ மட்டும் நடந்திருந்தால்,அரசாங்கம் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று அரசாங்கத்தை குறை கூறலாம். ஆனால் இது ஒட்டு மொத்த தமிழ் நாடியே உலுக்கியிருக்கிறது. அதுவும் ஒரே நேரத்தில்.இதுவரை இப்போது இருப்பவர்கள் பார்த்திராதது. உங்கள் வீட்டில் 10 பேர் இருந்தால் ஒரே நேரத்தில் உங்கள் அம்மாவால் எல்லோருக்கும் தோசை சுட்டு தரமுடியுமா.அது போலத்தான் இதுவும். ஒரிசா,வைசாக் போன்ற இடங்களில் ஒரு நாள் புயலுக்கே 500/600 பேர் உயிர் இழப்திருக்கிறார்கள். ஆனால் தமிழ் நாட்டில் இந்த மோசமான மழைக்கே 300 பேர் தான். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். அரசை குறை கூறுவதை விட்டு உங்களால் முடிந்தா உதவிசெய்யுங்கள். 

இது அரசியல் வாதிகளின் தனிப்பட்ட தவறு என்று மட்டும் சொல்ல இயலாது.... தொலை நோக்கு கொண்ட city Planning அவசியம் என்றே கூற வேண்டும். ஆக்கிரமிப்புகள் கண்டிப்பாக அகற்றப்பட வேண்டும். அப்படி அகற்றப்படும் போது அரசியல் தலையீடு அதில் இருக்க கூடாது. பொது மக்களும் தங்கள் இடங்களை தவிர மற்ற இடத்தை ஆக்கிரமிப்பதை தானாகவே நிறுத்திக்கொள்ள வேண்டும்....நீரை வெளியேற்ற சரியான திட்டம் வகுக்க பட வேண்டும்....மந்திரிகளை அடிப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை.இவர்களை அடித்ததாக பொதுமக்கள் போர்வையில் வந்த திமுகவினர் அதிக விலைக்கு விற்கும் பால்காரனையும் அதிகஅளவு கட்டணம் வாங்கும் ஓம்னி பஸ் கொள்ளையர்களையும் ஏன்அடிக்கவில்லை .அதிக விலை விற்கும் காய்கறிக்காரனையும் போய்அடித்து பாருங்கள் அப்பொழுது தெரியும் இந்த திமுக கொள்ளையர்களின் வெற்று நாடகம்தயவு செஞ்சு இப்ப இருக்கும் நிலைமைல யாரும் இதுல அரசியல் பண்ணாதீங்க. அமைச்சர்களை மட்டும் குறை சொல்லாதீர்கள்.அவர்கள் வந்தாலும் திட்றீங்க, வராதனாலும் மொரைக்குறீங்க.அவர்களுக்கும் இது புது அனுபவம் தான். இவ்வளவு பேய் மழை அடித்தால் யார்தான் இவர்களை எதிர்த்து என்ன செய்ய முடியும். எதிர்கட்சிகள் தான் இதுல அரசியல் பண்றாங்க. பொது மக்களும் கூடவா. அதற்கு தினமலரும் துனை போகலாம. தயவு செஞ்சு இந்த மாதிரி செய்திகளை வெளியிடாதீர்கள்.முக்கியத்துவம் கொடுக்கவேண்டாம்.

No comments:

Post a Comment