Sunday, December 6, 2015

ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்து....

ஒரு லட்சம் கோடி ரூபாய் நஷ்டம்? கூட்டம் கூட்டமாய் ஊருக்கு திரும்பிய மக்கள் மீண்டும் திரும்ப சென்னைக்கு வந்து வாழ்கையை ஆரம்பிக்க ஆகும் காலம். அதுவரை, சென்னையில் ஏற்படும் தொழில் இழப்பு. ரியல் எஸ்டேட் மதிப்பு இந்த வெள்ளத்தால், இறங்கும். அதனால், அரசிற்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பு. இந்த வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட டூரிசம் திரும்ப இயல்பு நிலைக்கு வர குறைந்தது ஒரு மாதகாலம் எடுக்கும். அதனால் ஏற்படும் இழப்பு. வரி இழப்பு. இப்படியெல்லாம் பார்க்கும் போது, குறைந்தபட்சம் ஐந்து லட்சம் கோடி ரூபாயாவது ஒட்டு மொத்தமாக தமிழகத்திற்கு ஏற்படும். சென்னையே தமிழகம் என்று யோசித்ததன் விளைவு. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில், பாதிக்கு மேல், சென்னையில் இருந்து வருகிறது. இது நல்லதா? எல்லாவற்றையும் ஒரே இடத்தில, வைப்பது முட்டாள்தனமானது. முதலில் தலைநகரை திருச்சிக்கு மாற்றுங்கள். இதற்கு மேல் வரும் தொழிற்சாலைகளை மதுரை, ராமநாத புரத்திற்கு மாற்றுங்கள். அங்கும் மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் குடும்பம் உள்ளது. அவர்களுக்கும் வயிறு உள்ளது. சுயநலமாக எல்லாவற்றையும் சென்னையிலேயே வைத்து கொள்வோம் என்று நினைத்து கொள்வது மிக மிக ஆபத்தானது. நாளையே போர் என்று வந்தால், பாகிஸ்தானிற்கு மிகவும் எளிதாக போய்விடும். சென்னை, பாம்பே, டெல்லி, கல்கத்தாவில் நாலே நாலு அணுகுண்டு வீசினால் போதும். இந்தியா நூறு ஆண்டுகள் பின்னோக்கி சென்று விடும். சென்னைவாழ் மக்களே இனி இதற்குமேல் கூட்டத்தை விரும்பாமல் தான், அமைதியான இடங்களை நோக்கி ஓடி, ரெஸ்ட் எடுத்துவிட்டு வருகிறார்கள். முறைகேடான கட்டிடங்கள் எளுப்பபட்டதும், லேன்ட் மாபியா இயங்குவதற்கும் ஒரே காரணம், துறைமுகம், தொழில் நகரம், மருத்துவ நகரம், தலை நகரம் என்று மூன்றையும் ஒரே இடத்தில அரசியல்வாதிகள் முடக்கியதன் விளைவே. இதுவே மற்ற பெரிய நகரங்களில் கொயம்பதூர் , திருச்சி, மதுரையில் இவ்வளவு பெரிய முறைகேடுகள் இல்லை. இந்த அளவிற்கு ஏரிகளை வளைத்து போடவில்லை. முதலில் தலைநகரை, திருச்சிக்கு மாற்றுங்கள். கோயம்புதரை தொழில் மற்றும் மருத்துவ நகரமாக்குங்கள். மதுரை மற்றும் ராமநாதபுரத்தை சிறந்த தொழில் நகரம் மற்றும் டூரிசம் சென்டராக மாற்ற, என்டேர்டைன்மென்ட் சென்டர்களை கொண்டு வாருங்கள். ஒன்றன் பின் ஒன்றாக, தமிழகத்தை பரவலாக வளர்க்க வேண்டும். தமிழன் எப்போதும் இந்தியாவிற்கு எடுத்துகாட்டாக விளங்குபவன். நாம் தான் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தோம். நாம் தான், இலவச கல்வி திட்டத்தை முதலில் கொண்டு வந்தோம். ஜெயாவின் கடந்த ஐந்தாண்டு காலத்தின் ஒரே சிறப்பு அம்மா உணவகம். இந்த திட்டமும் இந்தியா முழுவதும் நிச்சயம் பரவும். இதுபோன்று, தமிழகத்தை பரவலாக வளர்த்து, தமிழனனின் வல்லமையை வளர்த்து, இந்தியாவிற்கே எடுத்துகாட்டாக விளங்குவோம். ரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, சிமெண்ட் இல்லாத காலத்திலேயே, கிரேன் இல்லாமாலே, கல்லணையை கட்டினோம். பரவலாக தமிழகத்தை வளர்ப்போம்.


இது ஈடு செய்ய முடியாத இழப்புதான் ' ஏற்பட்டிருப்பது மாபெரும் பேரிடர்' கற்பனைக்கு அப்பாற்பட்ட நினைத்தும் பார்க்க முடியாத 'மிகப்பெரிய பேரிடர்' இதிலிருந்து தமிழகம் மீள பல மாதங்கள் ஆகலாம்' ஆனால் மனிதர்களால் மு டியாதது என்று ஒன்று இல்லை' ஹீரோஷிமா நாகா சாகி பேரழிவிலிருந்து ஜப்பான் மீளவில்லையா'ஏன் சுனாமி பேரழிவிலிருந்து நாம் மீண்டு வரவில்லையா' இந்த பெரும் துயரத்தின் போது ஜாதி மதம் பாராமல் ஏழை பணக்காரன் பார்க்காமல் எவ்வளவு ஒற்றுமையாக மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொண்டனர்' இந்த மனப்பான்மை அப்படியே தொடர்ந்தால் இந்த துயரத்தை தூசு போல் தட்டி விட முடியாதா' இனியும் அரசாங்கத்தையும் அரசியல் வாதிகளையும் மட்டுமே நம்பாமல் மக்கள் ஒன்றினைந்து களத்தில் இறங்கினால் எதையும் சாதிக்கலாம்' அரசியல்வாதிகளும் அடங்குவர்'

No comments:

Post a Comment