Friday, December 25, 2015

தெரிந்து கொள்வோம்


* பன்னீர்ப் பூ இரவில் மலரும். 

* கார்த்திகைப் பூ என்றழைக்கப்படுவது காந்தள் மலர். 
* இரு குரங்கின் கை எனப்படுவது முசுமுசுக்கை. * உலகின் மிகப் பழைய மரம் தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம். இதன் வயது 4,130 ஆண்டுகள். * உலகின் மிகப் பெரிய மரம் கலிபோர்னியாவில் ùஸகோயா பூங்காவில் உள்ள ஷெர்மன் மரம். 

*உலகிலேயே மிகப் பெரிய பள்ளிக் கூடம் நம் இந்தியாவில் தான் இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌவில் உள்ள சிட்டி மாண்டிசேரி பள்ளிதான் உலகிலேயே மிகப் பெரிய பள்ளி என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதில், சுமார் 22,612 மாணவர்கள் பயில்கின்றனர். 


*ஒட்டகத்துக்கு மூன்று இரைப்பைகள் உள்ளன.

 
* பெயர்கள் பற்றிய படிப்புக்கு ஓனோமாஸ்டிக் என்று பெயர். 

* இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் ராஜாஜி. 


* தங்கம் அதிகளவில் வெட்டி எடுக்கப்படும் நாடு தென்னாப்ரிக்கா. 


* உலகின் மிகப் பெரிய பாலைவனம் சகாரா பாலைவனம். 90 லட்சம் சதுர பரப்பளவு கொண்டது இந்தப் பாலைவனம். 


* சாதாரணமாக ஒரு பல்ப்பின் ஆயுள்காலம் 3,000 மணி நேரம் ஆகும். 
* சிலந்திப் பூச்சிகளில் குண்டு வீசும் வண்டு என்ற ஒரு வகை வண்டு உண்டு. இவ்வண்டுகளின் வயிற்று அடிப்பாகத்தில் சிறிய சுரப்பி உண்டு. இந்தச் சுரப்பியில் உள்ள ஒரு வகை திரவமும் வெடிக்கம் தன்மை கொண்டது. அதனால் இதற்கு இப்பெயர் வந்தது. 

* டென்னிஸ் மட்டைகள் மகாகனி, சிக்மோர், பீச் ஆகிய மூன்றுவித மரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. 
* நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கணினி மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா ஆகும். 

* ஆஸ்ட்ரிச் என்னும் பறவை கல்லை தின்னும் தன்மை உடையது. 
* உராங் உடான் என்ற குரங்கினத்தை "கானகத்தில் கிழவன்' என்று மலேசிய மக்கள் அழைக்கின்றனர். * ஒரே கவிஞர் இரு நாடுகளுக்குத் தேசிய கீதம் எழுதிய பெருமையைப் பெற்றவர் ரவீந்தரநாத் தாகூர். இவர் இந்தியா மற்றும் வங்கதேசத் தேசிய கீதங்களை எழுதியுள்ளார். * பத்திரிகைகளில் மலர், இதழ் என்று போடுகிறார்கள் எதற்கு தெரியுமா? மலர் என்றால் ஆண்டு என்றும், இதழ் என்றால் அந்த ஆண்டில் அது எத்தனையாவது இதழ் என்ற தகவலையும் தரும். 

* ரோஜா மலரின் வாசனை இதயத்துக்கு பலம் சேர்க்கும். 
* பாரி, ஆய் அண்டிரான், எழினி, நள்ளி, மலயன், பேகன், ஓரி ஆகியோர் கடையேழு வள்ளல்கள் ஆவர். * தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழாமல் இருப்பது போலவே, திருக்கோட்டியூர் மாதவன் கோயில் கோபுரத்தின் நிழலும் கீழே விழுவதில்லை. 

* கவிச் சக்கரவர்த்தி கம்பரின் சமாதி இராமநாதபுரத்திலுள்ள நாட்டரசன் கோட்டையில் உள்ளது. 
* சீதையின் தந்தை பெயர் ஜனகர். தாயின் பெயர் சுநயனீ. * துப்பாக்கியை ஏமப்பூட்டு, துமிக்கி என்றும், பீரங்கியை குண்டு குழாய் என்றும், ரிவால்வரை சுழலி என்றும் அழகிய தமிழ்ப் பெயர்கள் சூட்டி அழைத்தவர் தேவநேயப் பாவாணர்


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...