இயற்கையான முறையில் தலைமுடி நன்கு கருப்பாகவும், நீண்டும் வளர ஏற்ற அரிய மூலிகைகள் உள்ளன. இவை இளம் வயதில் ஏற்படும் இளநரையை போக்கி முடிக்கு நல்ல போஷாக்கை தருகிறது.
1. முடி அடர்த்தியாகவும் நீண்டும் வளர: சடாமஞ்சளை நல்லெண்ணையில் காய்ச்சி வாரம் 1 முறை தலைக்கு தேய்த்து குளித்து வரவும்.
2. முடி நன்றாக வளர: காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி தேய்த்து வரலாம்.
3. செம்பட்டை முடி நிறம் மாற: மரிக்கொழுந்து இலையையும், நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து மைய அரைத்து தலைக்கு தடவி வந்தால் சில நாட்களில் நிறம் மாறும்.
4. முடிநன்கு வளர: செம்பருத்தி பூவை நல்லெண்ணையில் காய்ச்சி தடவ முடி நன்கு வளரும்.
5. தலைமுடி உதிர்வதை தடுக்க: கோபுரம் தாங்கி இலைசாறு நல்லெண்ணையில் காய்ச்சி தலை முழுகினால் தலைமுடி உதிராது.
6. இளநரை கருப்பாக: நெலிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.
7. முடி கருமையாக, முடி உதிர்வது நிற்க: காய்ந்த நெல்லிக் காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வரலாம்....
No comments:
Post a Comment