Monday, July 4, 2016

அமெரிக்காவில் 6 இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்த இளையராஜா திட்டம்

1000 படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்துள்ள இசைஞானி இளையராஜா, அவ்வப்போது வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். அந்த வரிசையில் வருகிற செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த இளையராஜா திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்காவின் வெவ்வேறு இடங்களில் 6 இசை நிகழ்ச்சிகளை நடத்த அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இளையராஜா அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்துவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே, அவர் 2013-ஆம் ஆண்டில் நியூஜெர்ஜியில் மிகப்பெரிய இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார். இது இரண்டாவது முறையாகும்.
இந்த இசை நிகழ்ச்சியில் பங்குகொள்ள 50-க்கும் மேற்பட்டவர்களை இங்கிருந்து அழைத்துச் செல்லவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. யார், யார் கலந்துகொள்ளவிருக்கிறார்கள் என்பது குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...