மருத்துவமனைகளின் அதிரவைக்கும் மறுபக்கம் – மருத்துவர்களின் பதறவைக்கும் ஒப்புதல் வாக்குமூலம்
மருத்துவமனைகளின் அதிரவைக்கும் மறுபக்கம் – மருத்துவர்களின் பதறவைக்கும் ஒப்புதல் வாக்குமூலம்
தனியாக எந்தவொரு முன்னுரையும் இல்லாமல் நேரடியாக விஷயத்தி ற்கு வருகிறேன்… ஏனெனில்,
இதற்கு முன்னுரை எழுதும் வகையில், இந்த கட்டுரையை படிக்கும் அனைவருக்கும் ஒவ்வொரு தனி அனுபவம் இருக்கும்.
ஆம். மருத்துவத்துறையில் நடக்கும் தில்லுமுல்லுகள் பற்றி அங்கொன் றும், இங்கொன்றுமாக விவாதிக்கப்பட்ட விஷயங்கள் இப்போது பொது வெளிக்கு வந்திருக்கிறது. அதுவும் இரண்டு மருத்துவர்கள் மூலம். மருத் துவர்கள் அருண் காத்ரே மற்றும் அபய் சுக்லே, “Dissenting Diagonisis” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார்கள். மருத்துவத் துறையின் இருட்டுப்பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கி றார்கள்.
நோயாளிகளின் நலன் அல்ல, பங்குதாரர்களின் நலனே முக்கியம்:
மருத்துவச் சுற்றுலாவில் இந்தியா குறிப்பாக சென்னை கோலாச்சுகிறது’ என்று இங்குள்ள கார்ப்பரேட் மருத்துவமனைகள் பிதற்றிக்கொள்ளும் இ ந்த தருணத்தில், இந்த புத்தகத்தின் உள்ளடக்கம் முக்கியத்துவம் பெறுகிற து.
இந்த புத்தகத்தின் ஆசிரியர்களான மருத்துவர்கள் அருண் காத்ரே மற்றும் அபய் சுக்லே முன்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு, “இங்குள்ள பெரிய மருத்துவமனைகள் நோயாளிகளின் நலன்காக இயங்குவதை விட அதன் பங்குதாரர்களின் நலனுக்காகதான் இயங்குகின்றன” என்பதுதான். இவர் கள் எந்த குற்றச்சாட்டையும் மேம்போக்காக கூறவில்லை. பாதிக்கப்பட்ட நோயாளிகள், நேர்மையான மருத்துவர்களின் வாக்குமூலங்களை கொ ண்டே பதிவு செய்திருக்கிறார்கள்.

நம் அனைவருக்கும் ஒரு அனுபவம் நிச்சயம் இருக்கும். அதாவது தேவை யற்ற பரிசோதனைகளை மருத்துவர்கள் எடுக்க சொல்கிறார்கள் என்று. இது குறித்து இந்த மருத்துவர்கள், “பரிசோதனைகள் பாமரனின் பர்ஸை மட்டும் பதம் பார்க்கவில்லை. பரிசோதனை சாலைகள், நோயாளிகளிட மிருந்து சேகரிக்கும் ரத்த மாதிரிகளை உண்மையாக பரிசோதிப்பதே இல் லை. மருத்துவர்கள் எது மாதிரியான அறிக்கையை விரும்புகிறார்களோ … அதைதான் இவர்கள் தயார் செய்து தருகிறார்கள்” என்கிறார். இப்போது உங்கள் சொந்த அனுபவங்களை இந்த வாக்கியத்துடன் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.
பெரும் மருத்துவமனைகள், லாப இலக்கு நிர்ணயத்துக்கொண்டு வேலை செய்கின்றன. *அவர்களுக்கு எப்போதும் அப்பாவி நோயாளிகளின் நலன் முக்கியமே இல்லை. லாபம்… லாபம்… லாபம்… மேலும் லாபம் மட்டுமே முக்கியமாக இருந்து வருகிறது என்கிறார்கள் இந்த மருத்துவ ர்கள்.
நியாயமான மருத்துவர்களை உதாசீனம் செய்யும் மருத்துவமனைகள்:
ஒரு பிரபலமான மருத்துவமனை, தன் மருத்துவமனையில் வேலை பார் த்த சிறந்த சிறுநீரக சிறப்பு மருத்துவரை பணிநீக்கம் செய்தது. அதற்கான காரணம், ஒரு நோயாளிக்கு அதிகம் லாபம் தரும் ஒரு அறுவை சிகிச்சை யை செய்யாமல், சாதாரண சிகிச்சைமூலம் குணப்படுத்தியது. “இது கார் ப்பரேட் மருத்துமனைகள் எவ்வளவு வக்கிர மனநிலையில் செயல்படு கிறது என்பதற்கான சான்று” என்கிறார்கள் இந்த மருத்துவர்கள்.
“லாபத்தை முதன்மையான நோக்கம்கொண்ட மருத்துவமனைகள் அனைத்தும் இப்படிதான் செயல்படுகின்றன. அவர்களுக்கு நோயாளிகளி ன் நலன் முக்கியமல்ல. லாபத்திற்காக தேவையற்ற அறுவை சிகிச்சைக ள் மற்றும் மருந்துகளை தன்னை நம்பிவரும் நோயளிக்கு அளிக்கின்றன” என்று வருத்ததுடன் குறிப்பிட்டுள்ளார்கள்.

சுக்லே, “எனக்கு தெரிந்த ஒருவர், தனக்கு சொந்தமான வீட்டை விற்று , தன் மனைவிக்கான மருத்துவ கட்டணமான ரூபாய் 42 லட்சத்தை கட்டி னார். ஆனால், உண்மையில் அந்த சிகிச்சைக்கு அவ்வளவு கட்டணமெ ல்லாம் இல்லை*…” என்கிறார்.
இதைதாண்டி இவர்கள் வைக்கும் இன்னொரு குற்றச்சாட்டு பகீரென்று இருக்கிறது. சில மருத்துவமனைகள் உண்மையில் அறுவை சிகிச்சையே செய்யாமல், வெறும் மயக்க மருந்தை மட்டும் கொடுத்துவிட்டு, அறுவை சிகிச்சை செய்துவிட்டோமென்று பணம் பறிக்கிறார்கள்

கொல்கத்தாவைசேர்ந்த புண்யபிரதா கூன் என்னும் மருத்துவர், “எங்கள் பகுதியில் மருத்துவர்களுக்கு நியாயமாக மருத்துவம் பார்த்தும் ஈட்டும் தொகையை விட, ஆய்வு மையங்கள் அளிக்கும் பங்கு தொகை அதிகம். x-ray எடுக்க பரிந்துரைத்தால் 25 சதவீதமும், MRI, CT ஸ்கேன் எடுக்க பரி ந்துரைத்தால் 33 சதவீதமும் கமிஷன் தருகிறார்கள்..” என்று தன் அனுப வத்தை இந்த புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.
“தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை, தங்களின் தொடர் வாடிக் கையாளர்களாக வைத்துக் கொள்ள தான் பல மருத்துவமனைகள் விரும் புகின்றன. அதாவது தேவையற்ற அறுவைசிகிச்சைகள், மருந்துகளை பரிந்துரைத்து, நோயாளிகளை மீண்டும் மீண்டும் திரும்ப வரவைக்க வே ண்டும். அதை மருத்துவர்கள் செய்ய தவறும்போது, அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள்” என்று இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட் டுள்ள வரி களை நாம் சாதாரணமாக கடந்துவிட முடியாது.

இந்திய மருத்துவ கவுன்சில் என்ன செய்து கொண்டிருக்கிறது…?
என்ற நம் கேள்விக்கு இந்த மருத்துவர்களின் பதில், “பெரும் மருத்துவம னைகள் மருத்துவதுறையை திட்டமிட்டு கொலை செய்து கொண்டிருக் கிறார்கள். ஆனால், இதை மெளனமாக இந்திய மருத்துவக்கவுன்சில் வே டிக்கை பார்த்துகொண்டிருக்கிறது. உடனடியாக மருத்துவக்கவுன்சில் தன்னை புதுப்பித்துக் கொண்டு, இந்த அநியாயங்களை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று வலியுறுத்துகிறார்கள் இந்த இரு மருத்துவர்களும்.
இந்திய மருத்துவ துறையின் இன்றைய வணிக மதிப்பு 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது 2020 ம் ஆண்டு 280 பில்லியன் அமெரிக்க டால ர்களாக இருக்கப்போகிறது* என்கிற விபரங்களே, இதில் உள்ள அரசிய லையும், அக்கிரமங்களையும் நமக்கு உணர்த்துகிறது.

இதுதான் நடக்கிறது மருத்துவமனைகளில்…! – மருத்துவர்களின் ஒப்புதல் வாக்குமூலம்
இவர்களின் குற்றச்சாட்டுகளின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிற து இந்திய சுகாதாரத் துறை…?
“முடிந்த அளவு ஷேர் பண்ணுங்க “
No comments:
Post a Comment