Wednesday, August 31, 2016

ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு திருட்டுக் கட்சி

தி.க.என்னும் திருட்டுக் கூட்டம்:நம்மை அடக்கி ஆண்ட வெள்ளைக்காரர் களின் கைக்கூலிகளாக செயல் பட்டவர்கள் தான் தி.க. என்னும் திருட்டுக் முன்னேற்றக் கட்சிக் கூட்டம்.இந்துக்களின் மன உறுதியை தகர்ப்பது என்பதே இவர்களுக்கு வேலையாக வெள்ளைக்கார கிருஸ்த்துவர்கள் கொடுத்திருந்தனர்.மன உறுதியை இழந்த இந்துக்களை கிருஸ்துவர்களாக மதம் மாற்றினார்கள்.

இவர்கள் இந்துக்களின் கடவுள் எல்லாம் பொய் என சொல்லி நம்ப வைப்பார்கள்.தி.க என்னும் திருட்டுக் கூட்டம் செய்யும் வேலைக்கு வெள்ளக்கார கிருஸ்துவர்கள் சம்பளம் தருவார்கள். அப்படிச் சேர்த்த கோடிக் கணக்கான சொத்தை பூதம் காப்பது போல் காத்துக்கொண்டு அனுபவிக்கும் படகாமணி இப்போதும் அதே வேலையை தான் செய்கிறான்.
ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு திருட்டுக் கட்சி.தாலி அறுப்போம், ப்ராமணர்களின் பூணூல் அறுப்போம், பசுக்களை வெட்டுவோம் இது தான் இவர்களின் அறிவிப்பு.சரியான காட்டு மிராண்டிகள்.
நம் பாரத தேசத்தின் தென்னகமாக விளங்கக் கூடிய ஆந்திரம், கர்நாடகம், கேரளா இங்கெல்லாம் இவர்கள் தி.க. என்று சொல்லிக் கொண்டு போனால் இவர்களை மூட்டையாகக் கட்டி சாக்கடையில் வீசி விடுவார்கள். தமிழகத்தில் மட்டுமே தீங்கு செய்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு திராவிட அரசியல் கட்சி என்ற பெயர் பொருந்தாது. தி.க. என்னும் திருட்டுக்கட்சி என்ற பெயரே பொருந்தும்.
ஆழ்வார்களும்,நாயன்மார்களும் அவதரித்து கால் பதித்த புண்ணிய பூமியில் மாட்டைவெட்டுவோம், தாலியை அறுப்போம்,பூணூலை அறுப்போம், ஸமஸ்க்ருதம் எதிர்ப்பு என்று கொக்கரிக்கும் தி.க. என்னும் திட்டு அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட வேண்டிய கட்சிகள் ஆகும்.... படம் உதவி செய்த திரு Suba Shankar அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.......

நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ...


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி யிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பூலாங்குறிச்சி என்னும் ஊர். இந்த ஊரில் தான் பிரமிக்கத்தக்க
"காஞ்சாத்து மலை ".

மலைகளின் அழகை ரசிக்க புதுக்கோட்டை யில் உள்ளவர்களே ஏற்காடு, உதகமண்டலம், கொடைக்கானல் செல்கிறோம். அங்கு வெறும் மலைகளை மட்டும்தான் கண்டு ரசிக்க முடியும். இந்த காஞ்சாத்து மலை யில் கப்பல் போன்ற மலைகளும் ரயிலைப் போன்ற மலைகளும் அதிகமாக உள்ளன. அடர்ந்த மலைக்காடுகள் சூழந்துள்ளன. ஓர் மலையின் உச்சியில் முருகன் கோயிலும் உள்ளது. இந்தக் காட்டில் காட்டு மாடுகள் அதிகமாக வாழ்ந்தன. நரிகளும் முயல்களும் அதிகமாக வாழ்கின்றன. அரியவகை பழங்களான பாஞ்சாம் பழம், களாக்காய், தொரட்டிப்பழம் இங்கு அதிகம். ரம்மி படத்தில் இடம்பெற்ற "கூடைமேல கூடைவச்சு " பாடல் இங்குதான் எடுக்கப்பட்டது.
அருகில் இருக்கும் நமக்கு அதன் அழகான இயற்கையை ரசிக்க தெரியவில்லை. ஒருமுறையாவது சென்று ரசியுங்கள் ....

எதில் மகிழ்ச்சி!!!

\ஒரு பெரிய ஹாலில் செமினார் நடந்து கொண்டிருந்தது.அப்போது பேச்சாளர் எல்லார் கையிலும் ஒரு 
🎈🎈பலூனை கொடுத்து தங்கள் பெயரை எழுத சொன்னார்.
எல்லோரும் தங்கள் பெயரை 🎈பலூனில் எழுதி முடித்தவுடன் ,அதை இன்னொரு அறையில் நிரப்ப சொன்னார்.இப்பொழுது அந்த பேச்சாளர், உங்கள் பெயர் எழுதிய பலூனை 🎈அந்த அறைக்குள் இருந்து எடுத்து வாருங்கள் என்று அறிவித்தார்.
உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து அந்த அறைக்குள் ஓடிச் சென்று ஒவ்வொரு 🎈

பலூனாக எடுத்து தேடினர் . ஒருவருக்கொருவர் நெக்கி தள்ளிக்கொண்டு கீழே விழுந்து  தங்கள் பெயருக்குரிய 🎈பலூன் கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர்.5 நிமிடம் கடந்த போதிலும் ஒருவராலும் தங்களுக்குறிய பலூனை 🎈தேடி கண்டு பிடிக்க முடியவில்லை.
இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், ’ஒவ்வொருவரும் ஒரு பலூன் 🎈மட்டும் எடுங்கள்,அந்த பலூனில் 🎈யார் பெயர் இருக்கிறதோ அதை அந்த பெயர் உடைய நபரிடம் கொடுங்கள்’ என்றார்.
அடுத்த ஒரே நிமடத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்ட 🎈பலூன் எல்லோருக்கும் கிடைத்துவிட்டது.
இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார்,’இது தான் வாழ்க்கை.எல்லோரும் மகிழ்ச்சியை தேடுகிறோம், ஆனால் அது எங்கே,எப்படி,எதில் கிடைக்கும் என்று நினைப்பது இல்லை’.
நம்ம சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில் தான் இருக்கிறது.அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுங்கள்,உங்கள் மகிழ்ச்சி உங்களை தேடி வரும்’.
இந்த நாள் அனைவருக்கும் சந்தோஷமாய் மலரட்டும் ..

Image may contain: 8 people , people smiling , crowd

உண்மையில் என்ன அர்த்தம்!

பூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது என்ற ஏன் கூறினார்கள் தெரியுமா?
பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் இருக்கும். மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது.
அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்க¬ சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.
ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம். மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்க பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.\
பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம். அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக்கூடாது என்றார்கள்.
நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்..
பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும் திரிக்கப்பட்டுவிட்டது. 
பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக்கூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்கவேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை.
இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்..?
பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்…!

இன்றையசூழ்நிலையில்............

அந்த இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள்.
அதிகாலை காபி குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள்.

பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள்,
“அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்”
கணவனும் பார்த்தான்.
ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை.
தினமும் அவர்கள் எழுந்து காபி குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி தினமும் அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள்.
திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள்,
“அப்பாடா, இப்போது அந்தம்மாள் துவைக்கக் கற்றுக் கொண்டு விட்டாளா..?
இல்லை நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா என்று தெரியவில்லை...
இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன..”
கணவன் அமைதியாகச் சொன்னான்,
“இன்றைக்கு அதிகாலையில் தான் நான் நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தேன்”
இப்படித்தான் நாட்டில் நடக்கின்றன.
நம் வீட்டுக் கண்ணாடி சுத்தமில்லாத போது அடுத்தவர் வீட்டுத் துணிகள் அழுக்குப் படிந்தே காட்சி அளிக்கின்றன.
ஆனால் நாம் நம் வீட்டுக் கண்ணாடியை சந்தேகிப்பதே இல்லை.
ஒருவேளை அடுத்தவரிடம் உண்மையாகவே குறைகள்
இருந்தாலும் கூட அவை உடனடியாக நம்மால் கவனிக்கப்படுகின்றன.
அதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கலாம் என்று கூட நம்மால் யோசிக்க முடிவதில்லை...
வீரம் என்பது
பயப்படாத மாதிரி
நடிப்பது;
புத்திசாலி என்பது
அடுத்தவனை
முட்டாளாக்குவது;
சந்தோஷம் என்பது
பணம் இருப்பதாய்
காட்டி கொள்வது;
அமைதி எனப்படுவது
அடுத்து என்ன பேசனும்னு
தெரியாமலிருப்பது;
குற்றம் என்பது
அடுத்தவர் செய்யும்போது
தெரிவது;
தன்னிலைவிளக்கம் என்பது
தன் தவறுக்கு
சால்ஜாப்பு சொல்வது;
பொதுஜனம் என்பது
கூடி நின்று
வேடிக்கை பார்ப்பது;
தலைவர் என்பது
ஊரை அடித்து
உலையில் போடுவது;
தானம் என்பது
வீட்டில் உள்ள
பழையதை கொடுப்பது;
பணிவு என்பது
மரியாதை இருப்பதுபோல்
நடிப்பது;
காதல் என்பது
இரண்டு பேரும் சேர்ந்து
பொய் சொல்வது;
நேர்மை என்பது
நூறை திருப்பிக் கொடுத்து
இருநூறாய் கேட்பது;
நல்லவன் என்பது
கஷ்டப் பட்டு
நடிப்பது;
எதார்த்தம் என்பது
நெல்லை விற்றுவிட்டு
அரிசி வாங்கிக்கொள்வது;
மனிதம் என்பது
இன்னமும் கண்டுபிடிக்க
முடியாதது;
சிரிப்பு என்பது
அடுத்தவன் விழும்போது
வருவது...🆗🆗🆗

Sunday, August 28, 2016

வைகுண்டராஜனால் ரூ10,000 கோடி அரசுக்கு இழப்பு.

தொழிலதிபர் வைகுண்டராஜன் தடையை மீறி தாதுமணல் ஏற்றுமதி செய்வதால், அரசுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, அவரது சகோதரர் குமரேசன் தெரிவித்தார். வி.வி. மினரல்ஸ் நிறுவன தொழிலதிபர் வைகுண்டராஜனின் சகோதரர் குமரேசன் சென்னையில் ஞாயிறன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தடையை மீறி தொடர்ந்து வைகுண்டராஜன் தாது மணலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதாகவும், அவரது வி.வி. மினரல்ஸ் நிறுவனத்தின் இத்தகைய நடவடிக்கையால் தமிழக அரசுக்கு10 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், தாது மணல் எந்தெந்த வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும், இதுவரை தடையை மீறி ரவுடிகளின் பாதுகாப்புடன் 50 லட்சம் டன் தாது மணலை வெளிநாடுகளுக்கு வைகுண்டராஜன் கடத்தி உள்ளதாகவும் தெரிவித்தார். முறைகேடாக அள்ளப்பட்ட தாது மணல் 15 கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த கடத்தல் தொடர்பாக இதுவரை 50 காவல்நிலையங்களில் புகார் கொடுத்தும், எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்த குமரேசன், தாது மணல் கடத்தலை தமிழக முதல்வர் தலையிட்டு தடுப்பதோடு, வைகுண்டராஜனின் சொத்துகளையும் அரசு முடக்க வேண்டும் என்றும் கூறினார்....

மிக ஆழமான பரந்த பொருளை கொண்டவை.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், சுவாமி விவேகானந்தருக்கும் நடைபெற்ற உரையாடல்...
உங்கள் பல சந்தேகங்களுக்கு இதில் தீர்வு ஒளிந்திருக்கக் கூடும்.
படியுங்கள்…
பல வரிகள் மிக மிக ஆழமான பரந்த பொருளை கொண்டவை.
சுவாமி விவேகானந்தர் : நாம் ஏன் எப்போதும் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறோம்?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : துன்பத்தையே நினைத்து கற்பனை செய்து கொண்டிருப்பது உன் வழக்கமாகி விட்டது. அதனால் உன்னால் மகிழ்ச்சியுடன் இருக்க முடியவில்லை.
சுவாமி விவேகானந்தர் : நல்லவர்களுக்கு மட்டும் எப்போதும் துன்பம் ஏன்?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : உரசாமல் வைரத்தை பட்டை தீட்டமுடியாது. நெருப்பிலிடாமல் தங்கத்தை தூய்மைப்படுத்த முடியாது. நல்லவர்கள் சோதனைக்குள்ளாவார்கள். ஆனால் அவர்கள் பாதிப்புக்குள்ளாகமாட்டார்கள். அந்த சோதனையின் மூலம் அவர்கள் மேன்மையடைவார்களே தவிர கீழே செல்ல மாட்டார்கள். (By experience their life becomes better, not bitter!)
சுவாமி விவேகானந்தர் : அப்போது, சோதனைகள் நன்மைக்கு என்று சொல்கிறீர்களா?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : ஆம். அனுபவத்தை விட பெரிய ஆசிரியர் வேறு யாருமில்லை. அது முதலில் சோதனையை கொடுத்துவிட்டு பிறகு தான் பாடத்தை போதிக்கும்.
சுவாமி விவேகானந்தர் : கணக்கற்ற பிரச்னைகளில் மூழ்கி தவிப்பதால் நாங்கள் எங்கே போகிறோம் தெரியவில்லை….
இராமகிருஷ்ண பரமஹம்சர் : வெளியே பார்த்தால் எங்கே போகிறோம் என்று உனக்கு புரியாது. உனக்குள்ளே பார். புரியும். கண்களால் பார்க்கத் தான் முடியும். ஆனால் உள்ளத்தால் தான் வழியை காட்ட முடியும். (Eyes provide sight. Heart provides the way.)
சுவாமி விவேகானந்தர் : சரியான பாதையில் போகும்போதும் தோல்வி அடிக்கடி ஏற்படுகிறதே?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : செல்லும் பாதையில் வெற்றி என்பது பிறரால் அளக்கப்படுவது. ஆனால் அதில் கிடைக்கும் திருப்தி என்பது உன்னால் உன்னால் மட்டுமே உணரப்படுவது.
சுவாமி விவேகானந்தர் : கடினமான சூழ்நிலைகளில் எப்படி நீங்கள் உற்சாகம் குறையாமல் உத்வேகத்துடன் இருக்கிறீர்கள்?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : எப்பொழுதும், இனி எப்படி போகப்போகிறோம் என்று அச்சப்படுவதைவிட இதுவரை நீ எப்படி வந்திருக்கிறாய், எதையெல்லாம் கடந்து வந்திருக்கிறாய் என்று பார். உனக்கு கிடைத்த வரங்களை எண்ணிக்கொள். இழந்தவைகளை அல்ல.
சுவாமி விவேகானந்தர் : இந்த மக்களை நினைத்து நீங்கள் வியக்கும் விஷயம் எது?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : துன்பப்படும்போது “எனக்கு ஏன்? என்னை மட்டும் ஏன்??” என்று கேட்பவர்கள் இன்பத்தின் போது அந்த கேள்வியை கேட்பதில்லை. அதை நினைத்து தான் வியக்கிறேன்.
சுவாமி விவேகானந்தர் : வாழ்க்கையில் மிகச் சிறந்தவைகளை நான் அடைவது எப்படி?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : உன் கடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக்கொள். நிகழ்காலத்தை நம்பிக்கையோடு கைக்கொள். எதிர்காலத்தை அச்சமின்றி எதிர்நோக்கு. இதுவே வாழ்க்கையில் சிறந்தவைகளை பெற கடைபிடிக்க வேண்டிய நியதி.
சுவாமி விவேகானந்தர் : கடைசியாக ஒரே ஒரு கேள்வி. சில நேரங்களில் என்னுடைய பிரார்த்தனைகளை இறைவன் கேட்கவில்லையோ என்று தோன்றுகிறது.
இராமகிருஷ்ண பரமஹம்சர் : கேட்கப்படாத பிரார்த்தனைகள் என்று எதுவுமே இல்லை. (There are no unanswered prayers!) அச்சத்தை விடு. நம்பிக்கை கொள். வாழ்க்கை என்பது தீர்வு காணப்படவேண்டிய ஒரு புதிர் தானே தவிர பிரச்னை அல்ல. எப்படி வாழவேண்டும் என்று மட்டும் நாம் அறிந்து கொண்டால் வாழ்க்கை மிக மிக இனிமையாக மாறிவிடும்.

நண்பர்களை சேர்க்க மறந்திட்டாய்.

ஒரு பணக்காரனுக்கு ஏழை நண்பன் ஒருவன் இருந்தான்.
ஒரு சமயம் பணக்கார நண்பனுக்கு கொஞ்சம் பணத்தட்டுபாடு நிலவியது.
அந்நேரம் அங்கு வந்த ஏழை நண்பன் அவன் எரிச்சலும், கவலையோடும் இருக்கும் தன் நண்பனை பார்த்து “எப்பிடி டா இருக்கே?” என்று வழக்கம் போல கேட்டான்.
“சும்மா இரு, எனக்கு உடனே இருபது லட்சம் ரூபாய் தேவை. உன்னால் முடியுமா?” என்று கோபமாக கேட்டு விட்டு தன் அறைக்குள் சென்றான் .
அவன் பின்னால் சென்ற ஏழை நண்பன் “அரை மணி நேரத்தில் பணம் கிடைத்தால் பரவாயில்லையா?” என்று ஏழை நண்பன் நிதானமாக கேட்டான்.
பணக்கார நண்பனுக்கு ஒரே அதிர்ச்சி.ஏழை நண்பனை ஏளனமாக பார்த்தான்.
அரைமணி நேரத்தில் பணம் வந்தது.


பணக்கார நண்பனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
பணத்தை கொடுத்தவாறு ஏழை நண்பன் சொன்னான்.
“நீ எப்போ பார்த்தாலும் அதிகமா பணத்தை தான் சேர்த்தாய் நண்பா..நல்ல நண்பர்களை சேர்க்க மறந்திட்டாய். நான் அவைகளை சம்பாதித்து கொண்டேன் டா” என்றான்.
இருவரும் ஆரத்தழுவி கட்டி கொண்டார்கள்.
இந்த உலகத்திலே எதை சேர்ப்பதை பார்க்கிலும் உண்மை பலமும், உயிருள்ள பலமும் கண்டிப்பாக நண்பர்களை சேர்ப்பது தான்......

அமாவாசை குறித்த சில முக்கியத் தகவல்கள்! உங்களுக்காக

அமாவாசை குறித்த சில முக்கியத் தகவல்கள்! உங்களுக்காக

அமாவாசை குறித்த சில முக்கியத் தகவல்கள்! உங்களுக்காக
பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அமாவாசையும் அடுத்த‍ பதினைந்து சாட்களில்
பௌர்ணமியும் மாறி மாறி ஒவ்வொரு மாதமும் வந்து கொண்டிருக்கிறது இந்த அமாவாசை குறித்த சில தகவல்களை இங்கு காண்போம்.
புதிய காரியங்களை வளர்பிறையின் துவக்க நாளிலிருந்து ஆரம்பிப்பது நலமென்று நிறையப்பேர் நம்புகிறார்கள். அமாவாசைக்கு பிறகு வரும் நாட்களை வளர்பிறை நாட்கள் என்று அழைக்கிறோம். எனவே புதிய காரியங்களை வளர் பிறையின் துவக்க நாளிலிருந்து ஆரம்பிப்பது நலமென்று நம்புகிறார்கள்.
சிலர் அமாவாசை என்பது சந்திரன் இல்லாதநாள் அதா வது பூமிக்கு சந்திரன் தெரியாது அன்று இருட்டாக இருக்கும். எனவே இரு ட்டு பொழுதில் நற்காரியங்களை செய்ய கூடாது என்றும் சொல் கிறார்கள். இதில் எது சரி எது தவறு என முடிவெடுப்பது மகா சிரமமான காரியம். அவர வர் நம்பிக்கை அவரவர்க்கு என்று பொதுவாக சொல்லிவிட்டு போகலாம். ஆனால் அது சரியல்ல.
இதை ஜோதிட சாஸ்திரம் மற்றும் வானியல் சாஸ் திரத்தின் அடிப்படை யில் பார்க்கவேண்டும். அமாவாசை தினத்தில் சூரியனும் சந் திரனும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. அன்று இவ்விரு கிரகங்களும் ஒரே ராசியில் இருக்கும். அந்நேரத்தில் இரண்டு கிரகங்களில் ஆகர்ஷன சக்தியும் மிக அதிகமாக இருக்கும்.
இதனால் மனிதமூளையில் துரிதமான மாற்றங்கள் நிகழும் வாய்ப்பு நிறைய உண்டு அதாவது மனம் கொந் தளிப்பான நிலையிலேயே இருக்கும். எனவே அந்நாட்களில் சுபகாரிய ங்கள் செய்வதுகூட தவறல்ல ஆனால் புதிய காரியங்களை துவங்குவது தவறு என்பதே சரியான கருத்தாகும்.

எதையும் பற்றிக் கொள்ளாதீர்கள்.


ஆற்றில் வெள்ளம்
கரை புரண்டு ஓடுகிறது.
இக்கரையில் இரண்டு பேர்
நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை.
எப்படி அக்கரைக்குப்
போவது?
இந்த நேரத்தில்
ஒரு காளை மாடு அங்கே வந்தது.
அதுவும் அக்கரைக்குப்
போக வேண்டும்.
ஆனாலும் அதற்கு ஓடம்
எதுவும்
தேவைப்படவில்லை.
அப்படியே ஆற்றில்
பாய்ந்தது... நீந்த
ஆரம்பித்தது. இதைப்
பார்த்த இரண்டு பேரில்
ஒருத்தன் குபீர்
என்று ஆற்றில்
குதித்தான். அந்தக்
காளை மாட்டின் வாலைக்
கெட்டியாகப் பிடித்துக்
கொண்டான்.
காளை மாடு சுலபமாக
அவனை இழுத்துச்
சென்று அக்கரையில்
சேர்த்துவிட்டது.
அடுத்தவன் பார்த்தான்.
நமக்கு ஒரு ‘வால்’
கிடைக்காதா என்று எதிர்பார்த்தான்.
இந்த நேரம் ஒரு நாய்
வந்து ஆற்றில் குதித்தது.
இதுதான் நேரம்
என்று இவனும் ஆற்றில்
விழுந்து அந்த நாயின்
வாலைப் பிடித்துக்
கொண்டான். இந்த
மனிதனையும் இழுத்துக்
கொண்டு நாயால் ஆற்றில்
நீந்த முடியவில்லை.
திணறியது.
ஒரு கட்டத்தில் நாய்,
‘வாள்... வாள்’ என்று கத்த
ஆரம்பித்து விட்டது.
விளைவு _
இருவருமே ஆற்று நீர்
போகும்
திசையிலேயே மிதந்து போய்க்
கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் போக வேண்டிய
திசை வேறு.
போய்க் கொண்டிருக்கிற
திசை வேறு.
கரை சேர நினைக்கிற
மனிதர்களின் கதை இது.
சிலர்
கரையிலேயே நின்று விடுகிறார்கள்.
சிலர் காளையின் வாலைப்
பிடித்துக்
கொள்கிறார்கள். சிலர்
நாயின் வாலைப் பற்றிக்
கொள்கிறார்கள்.
ஆன்மிகம் என்ன
சொல்கிறது தெரியுமா?
நீங்கள் கரை சேர
விரும்புகிறீர்களா?
அப்படியானால் எதையும்
பற்றிக் கொள்ளாதீர்கள்.
ஏற்கெனவே பற்றிக்
கொண்டிருப்பதை எல்லாம்
விட்டு விடுங்கள்!
ஆற்றின்
நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து செல்கிறது.
உள்ளே ஏதாவது பொருள்
இருக்கும் என்கிற
ஆசையில் ஒருத்தன் நீந்திச்
சென்று அதைப்
பற்றுகிறான். நீண்ட நேரம்
ஆகியும்
கரை திரும்பவில்லை.
நடு ஆற்றில் போராடிக்
கொண்டிருக்கிறான்.
கரையில்
நின்று கொண்டிருக்கிற
நண்பர்கள் கத்துகிறார்கள்...
‘‘நண்பா...
கம்பளி மூட்டையை இழுத்துக்
கொண்டு உன்னால் வர
முடியவில்லை என்றால்
பரவாயில்லை...
அதை விட்டுவிடு!’’
ஆற்றின்
நடுவே இருந்து அவன்
அலறுகிறான்: ‘‘நான்
இதை எப்பவோ விட்டுட்டேன்...
இப்ப இதுதான்
என்னை விடமாட்டேங்குது
. ஏன்னா,
இது கம்பளி மூட்டை இல்லே.
கரடிக் குட்டி!’’
தவறாகப் பற்றுகிறவர்கள்
தடுமாறிப் போகிறார்கள்.
சரியாகப் பற்றுகிறவர்கள்
கரையேறி விடுகிறார்கள்.
பற்றையே விடுகிறவர்கள்
கடவுளாகி விடுகிறார்கள்!

Saturday, August 27, 2016

வெரிகோஸை குணப்படுத்த மூலிகை வைத்தியம்!!

வெரிகோஸ் நரம்பு என்பது நரம்பு சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனையாகும். பொதுவாக சாதாரண நரம்பில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். ஆனால் வெரிகோஸ் நரம்பில் ரத்தம் பின்னோக்கியும் செல்லும்.
காரணம் நரம்புகள் ஒன்றோடொன்று பின்னப்பட்டும் திருகியும் காணப்படும். இதனால்தான் அங்கே சிலந்தி போல் நரம்புகள் காணப்படுகின்றன. பரம்பரையாக இது ஏற்படுவதுண்டு.

அம்மாவிற்கு இருந்தால் குழந்தைக்கும் வரும் வாய்ப்புகள் உள்ளன. இது தவிர நாள் முழுவதும் அதிக நேரம் நிற்பது, அதிகமாய் கால்களுக்கு சிரமம் தருவது ஆகியற்றால் வெரிகோஸ் நரம்பு வர காரணமாகிவிடும்.
மற்ற காரணங்கள் :
வயது, ஜீன், ரத்த ஓட்டத்தில் பிரச்சனைகள் உடற்பயிற்சி போதிய அளவில் இல்லாமல் இருப்பது, ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவற்றால் இந்த வெரிகோஸ் பிரச்சனை உண்டாகும். இதனால் பெரும் பாதிப்பு இல்லையென்றாலும் அப்படியே விட்டால் பிரச்சனைகள் தரும்.
வெரிகோஸ் நரம்பை குணப்படுத்துவது எப்படி?
மிகத் தீவிரமான வெரிகோஸ் நரம்பு இருந்தால் அதனால் தாங்க முடியாத வலி உண்டாகும். நடக்க முடியாமல் அவதிப்படுவார்கள்.
ரத்த ஓட்டம் பாதித்து, மரத்தும் போகும். இந்த மாதிரியான தீவிர நிலையில் சரிப்படுத்த அறுவை சிகிச்சை உண்டு.
மூலிகை சாறு : இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று இல்லை. இதனை வீட்டிலேயே மூலிகை சாற்றின் மூலம் குணப்படுத்தலாம்.
இதனால் பக்க விளைவுகள் ஏதும் இல்லை. தேவையானவை : ஆப்பிள் சைடர் வினிகர் – 2 ஸ்பூன் கேரட் – அரை கப் சோற்றுக் கற்றாழை – அரை கப்
தயாரிக்கும் முறை :
கேரட்டை பொடிபொடியாக நறுக்கி அதனுடன் கற்றாழையை கலந்துய் மிக்ஸியில் அரையுங்கள்.
அதில் சிறிது சிறிதாக ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து மேலும் அரையுங்கள். க்ரீம் போன்ற பதம் வரும் வரைக்கும் நைஸாக அரைக்க வேண்டும். நீர் கலக்கக் கூடாது.
இப்படி உபயோகிப்பது :
இந்த க்ரீம் போன்ற கலவையை வெரிகோஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேய்த்து, காலை மேலே தூக்கி ஏதாவது உயரமான பொருளின் மீது வைத்துக் கொள்ளுங்கள்.
அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர் கழுவலாம். இதனை அந்த நரம்புகள் மறையும் வரை தினமும் உபயோகியுங்கள். நல்ல பலனைத் தரும்

அதிக விலையுள்ள விமான டிக்கெட்.......

உலகிலேயே அதிக விலையுள்ள விமான டிக்கெட் விற்பனைக்கு வருகிறது; லண்டனில் இருந்து மெல்போர்ன் சென்றுவர ரூ.53 லட்சம் கட்டணம்*
_துபை_,
_உலகிலேயே விலை உயர்ந்த விமான டிக்கெட்டை எதிகாட் ஏர்லைன்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.53 லட்சத்திற்கும் மேல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது (ரூ.53,52,398)_.
_லண்டனில் இருந்து மெல்போர்ன் சென்று வர இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த டிக்கெட்டுக்கு தி ரெஸிடென்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. ஏர்பஸ் ஏ 380 ரக விமானத்தில் 3 அதிசொகுசு அறைகளுடன் 5 நட்சத்திர ஓட்டலில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் வழங்கப்படுகிறது. 125 சதுரஅடி அளவில் சிங்கிள் மற்றும் டபுள் பெட் வசதியுடன் அறைகள் ஒதுக்கப்படுகின்றன. விமானத்தில் விலை உயர்ந்த உணவுகளை சமைப்பதற்காக சிறப்பாக பயிற்சியளிக்கப்பட்ட சமையல் கலைஞரும் பயணம் முழுவதும் இருப்பார்_.
_இதுதவிர, இந்த விலையுயர்ந்த டிக்கெட்டில் பயணம் செய்யும் விருந்தினரை உற்சாகப்படுத்துவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகின்றன. அதாவது, அதிநவீன பாத்ரும், 32-இன்ச் பிளாட் எல்.சி.டி. டிவி, இரண்டாக மடிக்கும் வகையிலான டைனிங் டேபிள்கள், தோலினால் உருவாக்கப்பட்ட டபுள் சோபா ஆகியவையும் சொகுசு அறைகளில் இடம்பெறுகின்றன_.

நவநாகரீக பெண்கள் .........................

பெண்கள் கால் மேல் கால் போட்டு 
உட்காரகூடாது.. 
ஏன் தெரியுமா?
பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காராதே என நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்..
இதை பெண் அடிமைத்தனம் புல்ஷிட் என இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கின்றனர்...
சொல்லிவிட்டு போகட்டும் ஆனால் நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை..
கால்மேல் கால் போட்டு அமர்வதை அகங்காரம், திமிர், ஒழுங்கீனம் என மேலோட்டமாக சொல்லிவைத்தாலும்,
அதன் உள் பொருள் பெண்கள் கால்மேல் கால் போட்டு அமர்வதால்,
"அவர்களது கர்ப்பப்பை 
நாளடைவில் பாதிக்கும் என்பதால்தான்"...
இது அவர்களது நன்மைக்காகத்தான்...
குறைந்தது ஒருவராவது நல்லபடி நடக்க share செய்வோம் நான் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது ஒரே ஒரு share ஐ மட்டுமே..

Friday, August 26, 2016

பச்சமுத்துவின் வளர்ச்சியும்...



*பச்சமுத்து என்ற பாரிவேந்தர் வரலாறு* எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவர் பச்சமுத்துவின் “வளர்ச்சி - வழக்கு - கைது”
வேந்தர் மூவிஸ் மதன் மாயமான விவகாரத்தில், எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பச்சமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவர், வேந்தர் டிவி, புதிய தலைமுறை ,புதுயுகம் தொலைக்காட்சி கொண்ட பச்சமுத்துவின் வளர்ச்சியும்... வழக்குகளும் பற்றிய செய்தி தொகுப்பு
சேலம் மாவட்டம் தாண்டவராயபுரத்தில் பிறந்த எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தரான பச்சமுத்து, 1969-ம் ஆண்டு சென்னையில் பிளாரண்ஸ் நைட்டிங்கேல் என்ற பெயரில் தொடக்கப் பள்ளியை தொடங்கினார்.
ஐந்தாம் வகுப்பு வரை இருந்த அந்த பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக மாற்ற 12 ஆண்டுகள் ஆகின.
ஆனால் அடுத்த 20 ஆண்டுகளில் 30-க்கும் அதிகமான கல்வி நிறுவனங்களைத் தொடங்க எஸ்.ஆர்.எம். குழுமத்திற்கு எங்கிருந்து பணம் வந்தது?
எஸ்.ஆர். எம். பல்கலைக்கழகத்தின் தற்போதைய மதிப்பு ரூ.10,000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
கல்வி நிறுவனங்கள் மட்டுமன்றி பிற நிறுவனங்களையும் எஸ்.ஆர்.எம். குழுமம் நடத்தி வருகிறது. அதில் எஸ்.ஆர்.எம் டிராஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளன.
அதுமட்டுமல்லாமல், மருத்துவமனைகள், ஹோட்டல்கள், ஊடகங்கள் உள்பட தற்போது உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் எஸ்.ஆர்.எம். குழுமத்தில் உள்ளன.
அதன்படி எஸ்.ஆர். எம். குழுமத்தின் தற்போதைய மதிப்பு 15 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சாதாரண ஆசிரியராக பணியாற்றிய ஒருவருக்கு இவ்வளவு சொத்துக்கள் எப்படி வந்தது என்பது மர்மமாகவே உள்ளது.
எஸ்.ஆர்.எம் குழுமத்தின் நிறுவனர் பச்சமுத்துவின் வள்ளியம்மை சொசைட்டியின் மீது, பொதுப்பணித்துறையின் அனுமதி இல்லாதது, கட்டிட உறுதி சான்று இல்லாதது உள்பட பல்வேறு புகார்களின் அடிப்படையில், அம்பத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.
அதில், நன்செய் நிலம் உள்ளதை மறைத்து கழிவு நிலம் என உண்மைக்கு புறம்பான தகவல் கொடுத்து அரசிடம் அனுமதி பெற முயற்சி நடந்திருப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் சட்ட விதிமீறல்களுக்கான ஆவணங்கள் தொடர்பான குற்றத்தை ஒப்புக்கொண்டு பச்சமுத்து மன்னிப்பு கடிதத்தையும் எழுதியிருக்கிறார்.
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து மகன் ரவி பச்சமுத்து மற்றும் அவரது கூட்டாளி மீது நில அபகரிப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, மதுராந்தகத்தில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு ஏக்கர் மற்றும் 12 சென்ட் நிலத்தை ரவிபச்சமுத்துவும், அவரது கூட்டாளியான ராஜகீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரும் போலி ஆவணம் செய்து மோசடி செய்துள்ளதாக சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த சரோஜா டிஜிபி அலுவலகம், சென்னை காவல் ஆணையர், முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.
இதே போன்று, காட்டாங்குளத்தூர், பொத்தேரி பகுதியில் உள்ள சுமார் 370 கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சமி நிலத்தை பச்சமுத்துவும், அவரது மகன் ரவி பச்சமுத்துவும், அபகரித்ததாக பொத்தேரியை சேர்ந்த சதீஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வேந்தர் மூவிஸ் மதன் காணாமல் போன நாளிலிருந்தே எஸ்.ஆர்.எம்.பச்சமுத்துவுக்கும் அவரது நிறுவனங்கள் மீதும் தொடர்ந்து இது போன்ற புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
2013ம் ஆண்டு 500 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் ஆக்கிரமித்தது எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் என தினகரனில் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேபோன்று, மெடிக்கல் சீட்டை விற்பனை செய்து ஆண்டுக்கு சுமார் 300 கோடிக்கு மேல் சம்பாதிப்பதாக எஸ்.ஆர்.எம். குழுமம் மேல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவை பச்சமுத்துவின் வழிகாட்டுதலில் நடந்துள்ளதாக மதனின் கடிதம் தெரிவிக்கிறது.

நன்றியில் ஊறியது தினம், வீறிட்டு வெளிவந்தது ஒரு கவிதை.

சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்த போது மிக மோசமான விபத்து ஏற்பட்டது.
அதில் சின்னப்பா தேவருக்கு
அவ்வளவாகக் காயம் இல்லை. ஆனால்
கண்ணதாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு
நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தார்.
காஞ்சிப் பெரியவரிடம் மிகுந்த பக்தியும்
மரியாதையும் கொண்ட தேவர் அவர்கள்,
சிவஸ்தானம் எனப்படும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பெரியவரைப் பார்த்து வணங்கி
‘விபத்து நேர்ந்து விட்டது’ என்று சொன்ன மாத்திரத்தில் ‘கண்ணதாசன் எப்படியிருக்கிறான்’
என்றும் பெரியவர் கேட்க, அதிர்ந்து போனார் தேவர். கண்கள் கலங்க வியப்பும் வருத்தமுமாய்
“அவர் படுகாயத்துடன் நினைவில்லாமல்
மருத்துவமனையில் இருக்கிறார்” என நா தழுதழுக்கக் கூறினார். தேவரின் கவலையை
உணர்ந்த பெரியவர், ‘சரி, கவலைப்படாதே.
இந்த விபூதியைக் கொண்டுபோய், அவன் நெற்றியில் இட்டு, வாயிலும் சிறிதளவு போடு,
மீதி இருப்பதை அவன் தலையணைக்குக் கீழ் வைத்துவிடு’ என்று தன் திருக்கரங்களால் விபூதி
எடுத்து மடித்துத் தர, தேவர் விதிர் விதிர்த்து,
பெரியவரை மறுத்துப் பேசவும் துணிவின்றி
தயங்க, மீண்டும் பெரியவரின் கட்டளைக்கிணங்கி தயக்கத்தோடு கைநீட்டி விபூதியைப் பெறுகிறார்.
தேவரின் தயக்கத்திற்குக் காரணம், கண்ணதாசன் நாத்திகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு, திராவிட
கட்சிகளின் சார்பில் பிராமணர்களையும் சனாதன தர்மத்தையும் நாக்கில் நரம்பில்லாது போல் மேடைகளில் பேசி வந்த காலகட்டம் அது. விபத்து
நடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு எதிரிலேயே நடந்த கூட்டத்தின்
மேடையில் படுபயங்கரமாகப் பேசி மடாதிபதிகளை இழிவுபடுத்திப் பேசியிருந்தார்.
எனவே அவரிடம் போய் இந்த விபூதியை எப்படிக் கொடுப்பது என்பதுதான் தேவரின் பெரியத் தயக்கமாயிருந்தது.
ஆனால் முக்காலமுணர்ந்த ஞானியாகிய பெரியவர், தேவரின் மனத்தயக்கத்தை உணர்ந்து ‘தயங்காமல் கொண்டு போய் பூசு. சூரியனை சில சமயம் மேகம்
மறைப்பது போல் நாத்திகமேகம் இதுவரை அவனை மறைத்திருந்தது.
இனி அவன் சூரியனாகத்
திகழ்வான். அவன் எப்பேர்ப்பட்ட பரம்பரையைச் சேர்ந்தவன் தெரியுமா? கோவில் திருப்பணி செய்வதற்கே பிறந்தவர்கள் போல் திகழ்ந்தவர்கள்
நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள்.
வரதராஜப் பெருமாள் கோவில் கோபுரத் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் கொள்ளுத் தாத்தா.
ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தாத்தா. காமாக்ஷி கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின்
தகப்பனார். இப்ப புரியறதா?’ என திருவாய் மலர்ந்தருளினார்.
தேவர் மனந்தெளிந்தவராய் பெரியவரை வணங்கி விடைபெற்று, நேராக மருத்துவமனைக்குச் சென்றார்.
நினைவிழந்து படுத்திருந்த கண்ணதாசனின்
நெற்றியில் விபூதியைப் பூசிவிட்டு சிறிது விபூதியை வாயிலும் இட்டு, மீதியை தலையணையின் கீழ் வைத்துவிட்டு வீடு திரும்பினார்.
அவர் சிந்தனையெல்லாம் கண்ணதாசன் நினைவு திரும்பி நடந்ததை அறிந்து என்ன சொல்வாரோ என்றே நினைத்தது.
மறுநாள் தேவர் மருத்துவமனை சென்று
கண்ணதாசனின் படுக்கையை சற்றே படபடக்கும் நெஞ்சோடு நெருங்கிய போது கண்ணதாசனுக்கு
நினைவு திரும்பி கண் விழித்திருந்தார். தேவரைப் பார்த்தவுடன், ‘வாங்க, எத்தனை நாளா இப்படி படுக்கையில் இருக்கேன். கொஞ்சம் கண்ணாடியை
எடுத்துக் கொடுங்களேன்.
என் முகத்தைப் பார்க்கணும்’ என்றார்.
நேற்று இட்ட விபூதி இன்னமும் நெற்றியில் திகழ, தேவர்
தயங்கியபடியே தந்த கண்ணாடியில் தன் முகம் கண்ட கண்ணதாசன்
‘இதென்ன விபூதி?’
என்று தேவரை ஏறிட்டுப் பார்க்க, வேறு வழியின்றி வந்தது வரட்டுமென தேவர், தான் பெரியவரைப் பார்த்ததையும், பெரியவர் ஆசீர்வாதம் செய்து
விபூதி கொடுத்ததையும் சொல்ல, கண்ணதாசனின் விழிகளில் அருவியெனக் கொட்டியது கண்ணீர்.
திகைத்து நின்ற தேவரின் செவிகளில் தேனாகப் பாயந்தது கண்ணதாசனின் வார்த்தைகள்,
‘எனக்கா? என்னிடமா இவ்வளவு கருணை?
போனவாரம் தான் அவரை... ஐயோ’ என வாய் விட்டுப் புலம்பி அழுததோடு, தேவரிடம் ஒரு வேண்டுகோளையும் சமர்ப்பித்தார். ‘எனக்கு உடல்
நலமாகி மருத்துவமனையிலிருந்து வெளியேறும்
சமயம் நான் வீட்டிற்குச் செல்லமாட்டேன். இந்தப் பாவியிடம் கருணை வைத்த அந்த மகானிடம் முதலில் என்னை தயவு செய்து அழைத்துச் செல்லுங்கள்’ என மனமுருகி வேண்டினார்.
கண்ணதாசன் வேண்டியபடியே அந்த நல்ல சந்திப்பும், பாவமன்னிப்பும் நடந்தது. மாறியது
மனம், நன்றியில் ஊறியது தினம், வீறிட்டு வெளிவந்தது ஒரு கவிதை. அக்கவிதையை எடுத்துக் கொண்டு, பெரியவரை நேரில் கண்டு
வணங்கி, கவிதையைச் சமர்ப்பித்தார், கண்ணதாசன்.
அக்கவிதை இதோ!:
'பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற
தீர்த்தப் பெருக்கு, திருவாசகத்தின் உட்கருத்து
கூர்த்த மதியால் மெய்ஞானக் கருத்துணர்த்தும்
முழுமூர்த்தம் கலிமொய்க்கும் இவ்வுலகைக்
காக்கவந்த கண்கண்ட தெய்வம், எம்மதத்தோரும்
சம்மதத்துடன் தம்மதத் தலைவனென தொழுதேத்தும்
தெய்வக் கமலக் கழல் தொழுவோம் வாரீர்!'
கவிதை வரிகளைக் கண்ட பெரியவர், கண்ணதாசனைக்
கனிவோடு நோக்கி, ‘அனந்த கோடி அற்புத லீலா
சாகித்ய மாயமானுஷாய நமோ நமஹ, அர்த்தநாரி
திருவண்ணாமலை சேஷாத்ரி மகானுக்கல்லவா
இது பொருந்தும்’ என்று அருளாசி கூறி,
‘அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும்
நிர்மலப் பொருள் ஞானசூரியனாம், மதத்தின்
பெருமையை எழுது’ என்று திருவாய் மலர்ந்தருள,
அக்கணமே கண்ணதாசனின் மனதில்
'அர்த்தமுள்ள இந்துமதம்' அழகாய் அரும்பி பலநாள்
உழைப்பில் இதழ் விரித்து மணம் வீசியது.

அ.தி.மு.க. கொடியை வடிவமைத்தவரும், இரட்டை இலைச் சின்னத்தை வரைந்து கொடுத்தவரும் இவர்தான்.

அதிமுக கொடியை வடிவமைத்த நடிகர்
நகைச்சுவை நடிகர் பாண்டு என்றாலே, அவரின் விசித்திரமான உச்சரிப்பும், வாயசைவும்தான் நினைவுக்கு வரும். அ.தி.மு.க. கொடியை வடிவமைத்தவரும், இரட்டை இலைச் சின்னத்தை வரைந்து கொடுத்தவரும் இவர்தான். இது இந்தத் தலைமுறையினருக்குத் தெரியுமா என்பது சந்தேகமே. தனது அனுபவங்களைப் பற்றி அவர் நினைவு கூர்ந்ததாவது:
அதிமுக தொடங்கப்பட்ட 1972-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி இரவு 10 மணிக்கு தன்னைச் சந்திக்க வருமாறு அழைத்தார் எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கி இருக்கிறேன் தெரியுமா... என்றார். தெரியும் பத்திரிகையில் பார்த்தேன் என்றேன் நான். கட்சிக்கு பேர் என்ன எனக் கேட்டார். அதிமுக என்றேன். கட்சிக்கான கொடியை நீங்கள்தான் வரைய வேண்டும். இன்றிரவே இங்கேயே தங்கி வரைய வேண்டும் என்றார். அங்கே இருந்த அறைக்குள் என்னை அனுப்பிவிட்டு, வெளியில் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு போய்விட்டனர். அதிமுக ஆரம்பிக்கப்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை அப்போது தமிழகத்தில் இருந்தது. எம்.ஜி.ஆரின் வீடு இருந்த இடத்தை திரைப்பட சண்டைக் கலைஞர்கள்தான் காவல் காத்தனர்.
அப்போதுதான் சென்னை ஓவியக் கல்லூரியில் படித்து முடித்திருந்தேன். எனது சகோதரர் இடிச்சபுளி செல்வராஜ், எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். அவர் மூலமாக என்னைப் பற்றி தெரிந்து கொண்டே என்னை அழைத்திருந்தார் எம்ஜிஆர்.



இரவு 10 மணிக்கு அறைக்குள் சென்ற நான் 10.30-க்குள் கருப்பு- சிவப்பு நிறங்களில், நடுவில் அண்ணா சிரிப்பது போல ஒரு கொடியை வரைந்து கொடுத்தேன். அதைப் பார்த்த எம்.ஜி.ஆர் தொண்டர்களை உசுப்பிவிடுவது போல இந்தக் கொடி இல்லையே. சிரிப்பில் போர்க்குணம் இருக்காது. கட்சியின் போர்க் குணத்தை வெளிக்காட்டும் விதத்தில் கொடியை வடிவமைத்துத் தர வேண்டும் என்றார்.
அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் சிலையை மனதில் வைத்து, அவர் கை நீட்டிப் பேசுவது போல கொடிக்கான படத்தை வரைந்து கொடுத்தேன். அதைப் பார்த்த அவர் இந்தப் படத்தைக் கொடியாக மாற்றும்போதும் கை வெட்டுப்பட்டுவிடும் என்றார். கையைச் சுருக்கி நேராக இருப்பது போல வரைந்து கொடுத்தேன். அது பார்ப்பதற்கு, அண்ணாவின் கையில் துப்பாக்கி இருப்பது போல இருந்தது. அதைப் பார்த்தவர். ஏன் எம்.ஆர்.ராதா என்னை சுட்டது போதாதா என்றார். உடனே கையை சிறிது மேலே இருப்பது போன்ற இப்போதைய கொடியை வரைந்து கொடுத்தேன். கட்டித் தழுவி, மிகவும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டார்.


அதேபோல, இரட்டை இலைச் சின்னத்தையும் நான்தான் வரைந்து கொடுத்தேன். அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியவுடன் நடைபெற்ற வெற்றிக் கூட்டத்தில் என்னை அறிமுகப்படுத்தி, 5 பவுன் தங்கச் சங்கிலியும், ரூ.10,000 ரொக்கப் பரிசும் கொடுத்தார் எம்ஜிஆர்.
தமிழகம் முழுவதும் நான் வடிவமைத்த கொடி பட்டொளி வீசிப் பறப்பதைப் பார்க்கும் வேளைகளில் எல்லாம் மிகவும் சந்தோஷமாக இருக்கும். ஒரு கலைஞனுக்கு இதைத் தவிர வேறு என்ன வேண்டும் என்றார் அவர்.

சீக்கிரமாய் குடி நம்மை அழித்து விடும்.


ஒரு ஊரில் பெரிய பலசாலி ஒருவன் இருந்தான்.
ஊருக்குள் அவனுக்கு நல்ல செல்வாக்கும் இருந்தது.
அந்த செல்வாக்கை இன்னும் அதிகரித்துக் கொள்ள அவன் விரும்பினான்.
எனவே ஏதேனும் ஒரு பயங்கரமான காட்டு மிருகத்தைப் பிடித்து வளர்த்து , அதை எப்போதும் தன்னுடன் வைத்துக் கொண்டால் தனது மதிப்பு இன்னும் உயரும் என்று நம்பினான்.
ஒரு நாள் அவன் ஆற்றில் குளிக்கும் போது கரையில் ஒரு குட்டி முதலை ஒதுங்கியது.
ஆவலுடன் அதைக் கையில் பிடித்து வீட்டுக்கு எடுத்து வந்தான்.
முதலைக் குட்டியைக் கண்டு திடுக்கிட்ட அவனது மனைவியும் , நண்பர்களும் திடுக்கிட்டுப் போனார்கள் .
அது விபரீத விளையாட்டு என்று சொல்லி எச்சரிக்கை செய்தார்கள் .
அவனோ அதை அலட்சியப்
படுத்தி
விட்டு முதலையை செல்லமாக வளர்க்கத் தொடங்கினான்.
எங்கே சென்றாலும் அவன் முதலைக் குட்டியோடுதான் சென்று வந்தான். போகும் இடமெல்லாம் மக்கள் மிரண்டு போய்ப் பின் வாங்குவது அவனுக்குப் பெருமையாக இருந்தது.
நாளுக்கு நாள் முதலை வளர்ந்த போதிலும் அவன் அதைத் தூக்கி சுமப்பதை விடவேயில்லை.
முதலை இப்போது ஐந்தடி நீளம் வளர்ந்துவிட்டது.
எவ்வளவு இறைச்சி போட்டாலும் சாப்பிட்டு விடுகிறது.
ஆனால் முதலையின் காரணமாக அவனது மனைவி , பிள்ளைகள் அவனை விட்டு விலகிப் போனார்கள்.
நண்பர்களும் வருவதில்லை.
இருந்தாலும் மற்றவர்கள் அவனைப் பார்த்து பயப்படும் பயம் அவனுக்குப் பிடித்திருந்தது.
ஒரு நாள் முதலைக்குத் தீனி போதவில்லை .
இப்போது அது ஆறடி வளர்ந்திருந்தது.
அவனோ நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான்.
பசியில் அவனையே கடித்துத் தின்னத் துவங்கியது .
நன்கு வளர்ந்துவிட்ட முதலையின் வலிமையோடு அவனால் போராட முடியவில்லை .
இரண்டே கடியில் அவன் உயிர் பிரிந்தது..
குடிப் பழக்கமும் இந்தக் குட்டி முதலை போலத்தான் ஆபத்தில்லாத ஒன்று போல வாழ்வில் நுழைந்து ஒரு நாள் நம்மையே விழுங்கி விடும் .
அதில் கிடைக்கும் பெருமையும் , மகிழ்ச்சியும் சில நாள் தான்.
சீக்கிரமாய் குடி நம்மை அழித்து விடும்.
குடித்து அழிந்தவர்களும், குடியினால் பிச்சைக்காரர்களாக
அனவர்களும் விளையாட்டாய் குட்டி முதலையை வீட்டுக்குள் கொண்டு வந்தவர்கள்தான்.
என்றைக்கானாலும் அதற்கு அவர்கள் இரையாகப் போவது நிச்சயம் .
எனவே,
"குடி எனும் முதலையை இப்போதே கொன்று விடுவது நல்லது"

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...