2 மணிநேரம் பன்னீரில் ஊறவைத்த உலர் திராட்சையின் ரசத்தை குடித்து வந்தால் . . .
உடல் மற்றும் உள்ளம் சார்ந்த பிரச்சனைகளுக்கு முழுக்க முழுக்க நமது பாரம்பரிய மருத்துவமான சித்த
மருத்துவத்தில் ஏராளமான மருத்துவ குணமுள்ள மூலிகைகள் உண்டு. அவற்றில் உலர் திராட்சையும் பன்னீரையும் எடுத்துக் கொள்வோம்.
சுத்தமான பன்னீரில் உலர்திராட்சைகளை போட்டு வைத்து சுமார் 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன்பிறகு அந்தபன்னீரில் ஊறிய உலர்திராட்சைகளை எடுத்து பிழிந்து அதன் இரசத்தைக் குடித்து விட்டு உலர் திராட்சைகளையும் சாப்பிட வேண்டும். இவ் வாறு தொடர்ந்து 21நாட்கள் குடித்தும் சாப்பிட்டும் வந்தால், சிலருக்கு எப்போதுமே இருந்து ஒருவித படபடப்பும் குறையும். பயம் கலந்த பதற்றமும் தணியும். இதனால் நீங்கள் செய்யும் காரியங்கள் அத்தனையும் ஜெயமே!
No comments:
Post a Comment