Sunday, August 28, 2016

வைகுண்டராஜனால் ரூ10,000 கோடி அரசுக்கு இழப்பு.

தொழிலதிபர் வைகுண்டராஜன் தடையை மீறி தாதுமணல் ஏற்றுமதி செய்வதால், அரசுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, அவரது சகோதரர் குமரேசன் தெரிவித்தார். வி.வி. மினரல்ஸ் நிறுவன தொழிலதிபர் வைகுண்டராஜனின் சகோதரர் குமரேசன் சென்னையில் ஞாயிறன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தடையை மீறி தொடர்ந்து வைகுண்டராஜன் தாது மணலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதாகவும், அவரது வி.வி. மினரல்ஸ் நிறுவனத்தின் இத்தகைய நடவடிக்கையால் தமிழக அரசுக்கு10 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், தாது மணல் எந்தெந்த வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும், இதுவரை தடையை மீறி ரவுடிகளின் பாதுகாப்புடன் 50 லட்சம் டன் தாது மணலை வெளிநாடுகளுக்கு வைகுண்டராஜன் கடத்தி உள்ளதாகவும் தெரிவித்தார். முறைகேடாக அள்ளப்பட்ட தாது மணல் 15 கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த கடத்தல் தொடர்பாக இதுவரை 50 காவல்நிலையங்களில் புகார் கொடுத்தும், எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்த குமரேசன், தாது மணல் கடத்தலை தமிழக முதல்வர் தலையிட்டு தடுப்பதோடு, வைகுண்டராஜனின் சொத்துகளையும் அரசு முடக்க வேண்டும் என்றும் கூறினார்....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...