Tuesday, August 23, 2016

இசைஞானியை பற்றி இயக்குனர் சிகரம் திரு. கே. பாலசந்தர்.

‘இந்த விழாவிற்கு என்னால் வர இயலாத சூழ்நிலையிலும் ஒரு ஐந்து நிமிடங்களாவது வந்துவிட்டு செல்கிறேன்’ என்று சொன்னேன். நான் சொன்னது ப்ரகாஷ்ராஜுக்காக அல்ல; இளையராஜாவுக்காக. இளையராஜாவை சந்தித்து நெடுநாட்கள் ஆகிவிட்டன. அவரை சந்திக்கின்ற ஒரு வாய்ப்பாக இது இருக்கட்டுமே என்றுதான் வருகிறேன் என்று சொன்னேன். ஆரம்பகாலத்தில் நான் இயக்கிய படங்களுக்கு திரு. எம்.எஸ்.வி. அவர்கள்தான் இசையமைத்துக்கொண்டிருந்தார். ஆனால் ஒரு குறிப்பிட்டத் திரைப்படத்திற்கு இளையராஜாதான் பொருத்தமாக இருப்பார் என்று எனக்குத் தோன்றியது. ஆனாலும் எம்.எஸ்.வி.யை விட்டுப் போவதற்குத் தயக்கமாக இருந்தது. எனவே நான் திரு. எம்.எஸ்.வி. அவர்களிடமே சென்று, ‘இது போல ஒரு படம் இயக்க இருக்கிறேன்.. அதற்கு இளையராஜா இசையமைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. எனவே உங்கள் அனுமதியுடன் அவரை இசையமைக்கக் கேட்கப் போகிறேன்’ என்று கூறினேன். அதற்கு அவர், ‘நிச்சயமாக இது போன்ற ஒரு கதைக்கு இளையராஜாவின் இசைதான் சரியாக இருக்கும்’ என்று கூறினார். உங்களுக்கெல்லாம் தெரியும். அந்தத் திரைப்படம்தான் ”சிந்து பைரவி”.


முதல்முறையாக அவர் எனக்கு இசையமைக்கப் போவதால் எனக்கு ஒரு Excitement. அவருக்கும் அப்படியே..! படத்தின் கதையைச் சொல்லி அவரிடம் நான், ‘இந்தப் படத்திற்கு நீங்கள் தேசிய விருது வாங்க வேண்டும்’ என்று கூறினேன். உடனே அவர், ‘நிச்சயம் வாங்குவேன்’ என்று கூறினார். ‘பாடறியேன் படிப்பறியேன்’ மாதிரி ஒரு Folk Song-ல் இருந்து கர்நாடிக் பாடலுக்குப் போவது போன்ற ஒரு Situation-க்கு இசையமைப்பது என்பது எவ்வளவு சிரமமான வேலை என்பது எனக்குத் தெரியும். அந்த சிச்சுவேஷனை அவரிடம் சொல்லும்போது மிகவும் ரசித்தார். ரசித்துவிட்டு ‘எனக்கு ஒரு நாள் டைம் கொடுங்கள்’ என்று கேட்டார்.
மறுநாள், ‘முடித்துவிட்டீர்களா’ என்று கேட்டேன். ‘முடித்துவிட்டேன்’ என்றார். அந்த ஒரு நாளில், Folk-ல் இருந்து ஆரம்பித்து Carnatic-ல் முடியும் அந்த சிரமமான பாடலை இசையமைத்து முடித்திருந்தார். அந்தப் படத்தின் Highlight அந்தப் பாடல்தான். மேலும் படம் முழுவதும் இசைஞானியின் Contribution அளப்பறியது.
அடுத்து ஒருமுறை, சிரஞ்சீவி நடித்த ஒரு தெலுங்கு படத்திற்கு இசையமைக்கும்போதும், ‘இந்தப் படத்திற்கும் நீங்கள் தேசிய விருது வாங்க வேண்டும்’ என்று சொன்னேன். அந்தப் படத்திற்கும் தேசிய விருது கிடைத்தது. நாம் எதை Aim பண்ணுகிறோமோ, எதை நோக்கிப் போகின்றோமோ அது நமக்குக் கிடைப்பதை விட ஒரு கலைஞனுக்கு வேறென்ன வேண்டும்?
நான்காவது முறையாக அவர் தேசிய விருது பெற்றபோதும் அவருக்கு தொலைபேசியில் வாழ்த்து சொன்னேன். ‘இதில் பாதி நீங்கள்தான்’ என்றார். எனக்குப் புரியவில்லை. ‘இது நான்காவது விருது. அதில் இரண்டு விருது உங்கள் படம்’ என்றார்.
இளையராஜா தமிழகத்திற்கு வாய்த்ததும் சரி.. இந்தியாவிற்கு வாய்த்ததும் சரி.. அது ஒரு பெரிய Historic Accident.
இத்தனை புகழ்மாலைகளையும் வாங்கிக்கொண்டிருந்த கேட்டுக்கொண்டிருந்த அந்த மாபெரும் இசை மேதையின் முகத்தில் சற்றும் சலனமில்லை. அரங்கினுள் இருந்த 4 மணி நேரமும் அவர் விரல்கள் நாற்காலியில் தாளமிட்டபடி இருந்தன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...