அமாவாசை குறித்த சில முக்கியத் தகவல்கள்! உங்களுக்காக
அமாவாசை குறித்த சில முக்கியத் தகவல்கள்! உங்களுக்காக
பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அமாவாசையும் அடுத்த பதினைந்து சாட்களில்
பௌர்ணமியும் மாறி மாறி ஒவ்வொரு மாதமும் வந்து கொண்டிருக்கிறது இந்த அமாவாசை குறித்த சில தகவல்களை இங்கு காண்போம்.
புதிய காரியங்களை வளர்பிறையின் துவக்க நாளிலிருந்து ஆரம்பிப்பது நலமென்று நிறையப்பேர் நம்புகிறார்கள். அமாவாசைக்கு பிறகு வரும் நாட்களை வளர்பிறை நாட்கள் என்று அழைக்கிறோம். எனவே புதிய காரியங்களை வளர் பிறையின் துவக்க நாளிலிருந்து ஆரம்பிப்பது நலமென்று நம்புகிறார்கள்.
சிலர் அமாவாசை என்பது சந்திரன் இல்லாதநாள் அதா வது பூமிக்கு சந்திரன் தெரியாது அன்று இருட்டாக இருக்கும். எனவே இரு ட்டு பொழுதில் நற்காரியங்களை செய்ய கூடாது என்றும் சொல் கிறார்கள். இதில் எது சரி எது தவறு என முடிவெடுப்பது மகா சிரமமான காரியம். அவர வர் நம்பிக்கை அவரவர்க்கு என்று பொதுவாக சொல்லிவிட்டு போகலாம். ஆனால் அது சரியல்ல.
இதை ஜோதிட சாஸ்திரம் மற்றும் வானியல் சாஸ் திரத்தின் அடிப்படை யில் பார்க்கவேண்டும். அமாவாசை தினத்தில் சூரியனும் சந் திரனும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. அன்று இவ்விரு கிரகங்களும் ஒரே ராசியில் இருக்கும். அந்நேரத்தில் இரண்டு கிரகங்களில் ஆகர்ஷன சக்தியும் மிக அதிகமாக இருக்கும்.
இதனால் மனிதமூளையில் துரிதமான மாற்றங்கள் நிகழும் வாய்ப்பு நிறைய உண்டு அதாவது மனம் கொந் தளிப்பான நிலையிலேயே இருக்கும். எனவே அந்நாட்களில் சுபகாரிய ங்கள் செய்வதுகூட தவறல்ல ஆனால் புதிய காரியங்களை துவங்குவது தவறு என்பதே சரியான கருத்தாகும்.
No comments:
Post a Comment