Sunday, August 21, 2016

ஜோக்கர் பட வசன முத்துக்கள்:

"சத்து குறைபாட்டால் 12 குழந்தைங்க செத்து போச்சி.
மயக்க மருந்த மாத்தி கொடுத்ததால 2 கர்ப்பினி பெண்கள் செத்து போயிட்டாங்க.
கர்த்தரும் காப்பாத்தால.. மாரியாத்தாளும் காப்பாத்தால.."
"இங்க பாக்க முடியாது. அப்பல்லோல தான் பாக்கனும்னா ஓட்டு ஏன் கெவர்மென்டுக்கு போடனும்.
அப்போல்லோவுக்கோ போட்ரலாமே"
வேடிக்கை பார்ப்பவர்களை வெள்ளம் கொண்டு போகட்டும்.
"சாராய அதிபர்களுக்கும், கொலைகாரர்களுக்கும் இரண்டடுக்கு பாதுகாப்பு கொடுக்குது இந்த மானங்கெட்ட அரசு"
"நூடுல்ஸ தடை பண்ணா சைனா காரனுக்கு புடிக்கல.
கூல்ட்ரிங்ஸ தடை பண்ணா அமெரிக்கா காரனுக்கு புடிக்கல.
ஹெலிகாப்டர பாத்து கும்பிடாதிங்கடான்னா அமைச்சர்களுக்கு புடிக்கல.
அரைநாள் உண்ணா விரதத்துக்கு ஏர்கூலர் ஏன்னு கேட்டா எதிர்கட்சி தலைவருக்கு புடிக்கல.
கல்லூரி கட்ட தடை. கூட்டணித் தாவலுக்கு தடை..
சாதி மாநாட்டுக்கு தடை.
அதனாலதான் என்ன புடிக்கல."
"நகைக்கட காரனுங்க புரட்சி பண்ற இந்த நாட்டுல ஜனாதிபதி புரட்சி பண்ண கூடாதா...!"
"மக்களாட்சி என்றால் மக்களிடம் இருந்தே புறப்பட வேண்டும்"
"நமக்கு தேவையானத கொடுக்கலன்னா நாமளே எடுத்துக்கனும்"
"அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தின்னுட்டு போடுற எச்சி சோத்த திங்கிறவங்கதான்டா நம்ம மக்கள்"
"வாழ்றதுதான் கஷ்டம்னு நெனச்சேன்.
இந்த நாட்ல பேல்றத கூட கஷ்டமாக்கிட்டானுங்க"
"நாம ஓட்டு பொட்டுதான் அரசியல்வாதிங்கள தேர்ந்தைடுக்கிறொம்.
ஆனா அவங்கள டிஸ்மிஸ் பண்ண உரிமை இல்ல நமக்கு"
"நாட்ல இருக்கிறவங்கள எல்லாம் நடைபிணமா ஆக்கிட்டு யாருக்கு காட்டபோறீங்க உங்க கருணைய.
ஊழல் இல்லாம கக்கூஸ் கட்ட வக்கில்ல.
உங்க கிட்ட கருணைய எதிர்பார்த்தது தவறுதான்"
"பெத்தவளையும், கட்டுனவளையும் விக்கிற மாதிரி ஓட்ட விக்கிறானுங்க"
கடைசியாக..
"நாம யாருக்காக போராடுறமோ, யாருக்காக உயிர விடுறமோ, அவங்களே நம்மள காமெடியனா பாக்கிறதுதான் பெரிய கொடுமை".
ஒவ்வொரு வசனமும் நிகழ்கால அரசியல் அதிகாரங்களை தோலுரிக்கின்றன.
படத்தின் பெயர் தான் ஜோக்கர் ஆனால் சொல்லியி௫க்கும் விஷயங்கள் புத்திசாலித்தனமானவை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...