ஆங்கில மருத்துவத்தை ஆங்கில மருத்துவர்களை குறை சொல்ல இல்லை இந்த பதிவு. சில பிரச்சனைகளுக்கு மாற்று மருத்துவமும் இருக்கிறது. அதை பற்றி தெரிந்து கொள்ளாதவர்கள் தெரிந்து கொள்ளலாமே என்று தான் இந்த பதிவு.
இரண்டு மூன்று வருடங்களாக ஹார்மோர்ன் இம்பாலன்ஸ் குறைப்பாட்டால் அவஸ்தைப்பட, அது ஹார்மோர்ன் இம்பாலன்ஸால் ஏற்படும் பிரச்சனை என்று பார்க்காமல், அந்தந்த நேரத்தில் தோன்றும் நோய்களுக்கான மருத்துவம் மட்டுமே பார்ப்பேன். சில நேரம் தானாக சரியாகிவிடும் என்று விட்டு தீவிரமடைய ஆங்கில மருத்துவம் தான் ஆரம்பித்தேன். ஒன்றுக்கு மாத்திரை எடுக்க பக்கவிளைவாக வேறொன்று என தொடர கடந்த மே மாதம் மாதவிடாய் கோளாறு பிரச்சனையும் முகத்தில் பருக்கள் அதிகரிக்க தொடங்கிய போது தான் ஆங்கில மருத்துவர்கள் ஹார்மோர்ன் இம்பாலன்ஸ் ஹார்மோர்ன் மாத்திரைகள் தான் எடுக்கவேண்டும். ஆனால் பக்கவிளைவுகள் உண்டு என்று கூறினார்கள்.
அதன்பின்னர் நண்பர் ஒருவர் பரிந்துரைக்க சித்த மருத்துவரை நாடினேன். அவரிடம் பிரச்சனைகளை சொல்ல மாதாந்திர சர்கிளை ஒழுங்கு பண்ண M2tone மாத்திரை மற்றும் மூட் ஸ்விங் உச்சத்தில் இருந்த அந்த நேரத்தில் அதற்கும் மாத்திரை கொடுக்க என்னடா M2tone ஆங்கில மருத்துவர்களும் பரிந்துரைத்திருக்கிறார்களே என்ற யோசனையோடு வீடு வந்தேன். அந்த மாத்திரையுடன் வேறு சில சித்த மாத்திரைகளும் கேப்சியூல் வடிவில்.
அதன்பின் கூகுள் ஆண்டவரின் துணையுடன் நான் சாப்பிடும் மருந்துகளின் மூலபொருட்களையும் அதை உபயோகிப்பவர்கள் பக்க விளைவுகள் எல்லாம் தேடி கொஞ்சம் திருப்தியான பின் இங்கு ஏற்கனவே பலமுறை Sarav Urs ஆலோசனை கேட்டதில் இந்த மருத்துவத்தின் மேல் எற்பட்ட நம்பிக்கையிலும் மருந்தை தொடர்கிறேன். (ஆங்கில மருத்துவர்களும் m2tone மாத்திரையை தான் முதலில் ரெபர் செய்கிறார்கள் மாதாந்திர சர்க்கிள் ஒழுங்காக) ,
இரண்டு மாதத்தில் சர்க்கிள் ஒழுங்கானதுடன் அல்சர் இல்லை. மேலும் மைக்ரேனும் வெகுவாக குறைந்துள்ளது. பருக்கள் சில நாட்கள் ஆகும் என்றும் இன்னும் சில நாட்கள் மாத்திரை தொடர சொல்லியிருக்கிறார்கள். மெனோபாஸ் பிரச்சனையால் அல்லது மாதாந்திர சர்க்கிள் தாறுமாறாக வந்து அவஸ்தைப்படுபவர்கள் ஒரு நல்ல சித்த மருத்துவரை அணுகி (அடிக்கோடிட்டு கொள்ளுங்கள் நல்ல மருத்துவரை) ஒரு முறை முயற்சித்து பாருங்கள். மூட் ஸ்விங்ஸ்க்கு கூட பக்க விளைவில்லா மாத்திரை சித்த மருத்துவத்தில் உள்ளது. சென்னையில் என்றால் நான் பார்க்கும் மருத்துவரையே உள்டப்பியில் பரிந்துரை செய்கிறேன்.
No comments:
Post a Comment