முன்பு மாநகரங்களில் மட்டும் பிரபல மாக இருந்த மோனோ சோடியம் குளூட்டமேட்என்ற வேதிப்பெயரைக் கொண்ட இந்த வினோத உப்பு, தற்போது கிராமப்புற வீடு களின் சமைய லறைக்குள்ளும் புகுந்து விட்டது.
* இந்த அஜினோமோட்டோவின் விஷத்த ன்மை குறிப்பாக குழந்தைகளுக்கு பலவித ஆபத்துகளை உருவாக்கும் என்று நிரூபித்துள்ளன.
* அஜினோமோட்டோ கலந்த உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடும் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் சுரப்பது வெகுவாக குறையும். இதனால் உடல் வளர்ச்சி தடைப்பட்டு உயரம் குறைகிறது. மேலும் இந்த வேதிப் பொருள் மூளையில் ஆர்குவேட் நுக்ளியஸ் என்னும் பகுதியைப் பாதிப்பதால் உடல் எடை தாறுமாறாக அதிகரிக்கும்.
* மூளை மட்டுமின்றி இரைப்பை, சிறுகுடல், கல்லீரல் போன்ற உறுப்புகளிலும் அழற்சியையும், சிறு ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகளுக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாத வயிற்றுவலி அடிக்கடி ஏற்படும்.
* ஒவ்வாமை உள்ள ஒரு சிலருக்கு இந்த வேதிப் பொருள் கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மார்பில் எரிச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டு, உடல் வியர்க்க ஆரம்பித்துவிடும்.
* அஜினோ மோட்டோவைப் போன்றே பாஸ்ட்புட் கடைகளிலும், ஐந்து நட்சத்திர விடுதிகளி லும் பயன்படுத்தப்படும் ஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட் என்றஎண்ணெய் பசு, எருது, பன்றி போன்ற பல விலங்கு களின் கொழுப்பிலிருந்து தயாரிக்கப் படுவதாகும். இதில் உடலுக்குத் தேவையற்ற ஒருவித கொழுப்பு இருக்கிறது. பாக்கெட்டுகளில் கிடைக் கும் உருளைக்கிழங்கு சிப்ஸ், பீட்ஸா, சாக்லெட், துரித உணவுகள் போன்றவை இந்த எண்ணெய்யில்தான் தயாரிக்கப்படுகின்றன.
*இந்த எண்ணெய்யைப் பலமுறை திரும்பத் திரும்ப பயன்படுத்தினாலும் உணவின் மணம் மாறாது பதினெட்டு மாதம் வரை உணவுப் பொருள் கெட்டுப் போகாது. ஆனால் இந்த எண்ணெய்யைப் பயன்படுத்தினால் உடலில் வேண்டாத கொழுப்பு சேர்ந்து இருதய நோய், புற்றுநோய், உடல் பருமன் எல்லாம் வந்துவிடும்.
* விருந்துகளில் உணவு உண்போர் உடனடியாக வயிற்று உபாதையால் அவதிப்படுகிறார்கள். பல பெற்றோர்கள், குழந்தை இதையாவது சாப்பிடுகிறதே என்று ஆசை ஆசையாக பலரும் அதை வாங்கிக் கொடுப்பர். சில மாதங்கள், வருடங்கள் கழித்து இந்த நோஞ்சான் எக்கச்சக்கமாக சதை போட்டு ஊளைச் சதையுடன் தோன்றுவான் .
* பிறப்புக் கோளாறு, உறுப்புகளில் வளர்ச்சி யற்றத் தன்மை, தலைவலி, வாந்தி, வயிற்று வலி, செரிமானச் சிக்கல், கெட்ட கனவு, தூங்குவதில் சிக்கல், சோம்பல், மிதமாகும் இதயத்துடிப்பு, முடிகொட்டுதல், ஆஸ்துமா, பக்கவாதம், அல்சிமர்ஸ் என்ற முதுமை நோய் மற்றும் சர்க்கரை நோய் என்பவையெல்லாம் அஜினோமோட்டோ அள்ளி வழங்கும் நோய்களாகும்.
No comments:
Post a Comment