கமல்ஹாசனுக்கு ஃப்ரான்ஸ் நாட்டின் செவாலியே விருது - செய்தி
வாழ்த்துக்கள் ! கூடவே இன்னுமொரு விஷயம்...
செவாலியே விருதைவிட பன்மடங்கு பெரிது...ஃப்ரான்ஸ் நாட்டின்"ஒஃபீஸே விருது" ! இதுவரை இந்தியாவில் ஒரே ஒருவருக்குத்தான் அந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. அதுவும் இலக்கியப் பங்களிப்புக்காக !
அவர்... பாண்டிச்சேரியை சேர்ந்த திருமதி டாக்டர் மதனகல்யாணி ஆவார்! ஏறத்தாழ 80 வயதை நெருங்கிவிட்டாலும் இன்னமும் மொழிபெயர்ப்பு வேலைகளை செய்கிறார்.
இவர், வங்காள மண்ணிலோ அல்லது மலையாள தேசத்திலோ பிறந்திருந்து இந்த விருதை பெற்றிருந்தாரேயானால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியிருப்பார்கள் !
சரி, போகட்டும் ! கமலஹாசனுக்காக எடுக்கப்படும் பாராட்டு விழாவில் இவரையும் மேடையேற்றினால் கொஞ்சம் யோக்கியமாக இருக்கும் !
செய்கிறார்களா என்று பார்ப்போம் !
No comments:
Post a Comment