Monday, August 15, 2016

தங்கம்................

தகரத்தைத் தகரம் என்றும்
ஈயத்தை ஈயம் என்றும்
இரும்பை இரும்பு என்றும்
அட..! பித்தளையைப் பித்தளை என்றும் பார்த்தவுடன் சொல்லி விடுகிறது இந்த உலகம். அதை நம்பியும் விடுகிறார்கள் மக்கள். ஆனால் தங்கத்தைத் தங்கம் என்று சொல்ல உரசியும் உருக்கியும் இம்சைப் படுத்திய பின்தான் தங்கம் என ஒத்துக் கொள்கிறார்கள். ஏன் இந்தச் சோதனை தங்கத்துக்கு.?
இப்போதெல்லாம் தங்கங்கள் ஊமையாகித் தன் வேதனைகளை
மறக்க fbயில் கிறுக்கு மாதிரிப் பதிவுகள் பல இட்டு ஆறுதல் அடைந்து வருகின்றன..
காரணம்:
கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தங்கங்கள் கலந்து கொண்ட ஒரு போட்டியில் தகரத்தையே சுத்தமான தங்கம் என்று கூறிப் பரிசும் பாராட்டும் தரப்பட்டு விடுகிறது. .! நிஜத் தங்கம் இந்த ஆண்டும் போட்டியில் உள்ளது. உரசிப் பார்த்து அரசுக்குத் தரம் சொல்லும் தரகர்கள் தகரங்களிடம் இந்த ஆண்டும் காசு வாங்கிக் கொண்டு தகரங்களைத் தங்கங்கள் என்று பொய் சொல்லப் போகின்றார்களா என்பதைக் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...