இராமாயணத்தில் இராவணன், சூர்ப்பனகையின் தூண்டுகோலாலும், சீதையின் அழகை எடுத்துச்சொல்லி இராவணனுக்கு சீதைமீது
காமவெறி கொள்ள வைத்ததாலும் சூழ்ச்சியால் இராமனையும், லட்சுமணனையும் ஏமாற்றி, சீதையை கடத்தினான். பின் சீதையை மீட்க வந்த இராமரிடம் போரில் தோற்று மாண்டான் என்பது என்பதே இராமாயணத்தில் இராவணன் பற்றி சொல்லப்பட்டதன் சுருக்கம் இதனையே நீங்கள் எல்லோரும் சிறுவயதில் இருந்தே பெரியவர் சொல்லக்கேட்டும், திரை ப்படங்களில் பார்த்தும், தொலைக்காட்சிக ளில் நெடுந்தொடர்களாக கண்டு இருப்பீர்கள்.
இவையெல்லாமே இராவணனை ஒரு வில்லனாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் வில்லனாக சித்தரிக்கப்பட்ட இராவணன் எழுதிய அரிய நூல்களை எழுதியுள்ளான். அவன் எழுதிய நூல்கள் 27 ஆகும் இவை பின்வருமாறு.
- உடற்கூறு நூல்
- மலை வாகடம்
- மாதர் மருத்துவம்
- இராவணன் – 12000
- நாடி, எண்வகை பரிசோதனை நூல்
- இராவணன் வைத்திய சிந்தாமணி
- இராவணன் மருந்துகள் – 12000
- இராவணன் நோய் நிதானம் – 72 000
- இராவணன் – கியாழங்கள் – 7000
- இராவணன் வாலை வாகடம் – 40000
- இராவணன் வர்ம ஆதி நூல்
- வர்ம திறவுகோல் நூல்கள்
- யாழ்பாணம் – மூலிகை அகராதி
- யாழ்பாணன் – பொது அகராதி
- பெரிய மாட்டு வாகடம்
- நச்சு மருத்துவம்
- அகால மரண நூல்
- உடல் தொழில் நூல்
- தத்துவ விளக்க நூல்
- இராவணன் பொது மருத்துவம்
- இராவணன் சுகாதார மருத்துவம்
- இராவணன் திராவக தீநீர் நூல் – அர்க்க பிரகாசம்
- இராவணன் அறுவை மருத்துவம் – 6000
- இராவணன் பொருட்பண்பு நூல்
- பாண்ட புதையல் முறைகள் – 600
- இராவணன் வில்லை வாகடம்
- இராவணன் மெழுகு வாகடம்
No comments:
Post a Comment