Wednesday, August 17, 2016

ஆவ‌ணி அ‌வி‌ட்ட‌‌ம் எ‌ன்பது

ஆவணி அவிட்டம்: ஆவணி மாதம் அவிட்ட நட்சத்திரத்தன்று
பூணூல் அணிபவர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும்
ஒரு பக்திபூர்வமான பண்டிகை இது
இந்த நாளில் பழைய பூணூலை கழற்றிவிட்டு
புதிய பூணூல் அணிந்து கொள்வர்.
நயனம் என்றால் கண்.
நமக்கு இரண்டு நயனங்கள் (கண்கள்)இருக்கின்றன.
அவை ஊனக் கண்கள்.
இது தவிர மூன்றாவதாக ஒரு கண்தேவை.
அது தான் ஞானக்கண்.
அக்கண்ணைப் பெறுவ தற்கான சடங்குதான்உபநயனம்.
உபநயனம் என்றால் துணை க்கண் என்று பொருள்.
ஞானம்என்னும் கல்வி அறிவை பெற்றால்
மட்டுமே ஒருவன் கண் பெற்ற பயனைப் பெறுகிறான்
என்று தெய்வப்புலவர் திருவள்ளுவர் குறிப்பிடு கிறார்.
கடவுளைப் பற்றி அறியும்அறிவே உயர்ந்த அறிவாகும்.
அதனால் பூணூல் அணியும் சடங்கினை
பிரம்மோபதேசம் என்று குறிப்பிடுவ துண்டு.
மகா விஷ்ணு பூலோகத்தில் பல அவதாரங்களை எடுத்து
தர்மத்தை நிலைநாட்டினார்.
அதில் வாமன அவதாரமும் ஒன்று.
அதிதி காஷ் யபரின் பிள்ளையாக அவதரித்த
வாமன மூர்த்திக்கு சூரியபகவானே
உபநயனம் (பூணூல் அணிவித்தல்) செய்தார்.
பகவானே பூணூல் அணிந்து கொண்டதன் மூ லம்,
இச்சடங்கின் சிறப்பினை உணரமுடியும்.
பூணூலையக் ஞோபவீதம் என்று அழைப்பர்.
இதற்கு மிகவும் புனிதமானது என்று பொருள்.
பூணூல் அணிபவர்களும்,
அதனைத் தயாரிப் பவர் களும்
ஆச்சார அனுஷ் டான ங்களில் இருந்து
சிறிதும் விலகுதல் கூடாது.
ஆவணி அவிட்டத்தன்று
பூணூல் அணியும் இளைய தலைமுறையினரும்
இதன் முக்கியத் துவத்தை உணர்வது அவசியம்.
ஆவ‌ணி அ‌வி‌ட்ட‌‌ம் எ‌ன்பது
ரிக், யசுர் வேதிகள் கொண்டாடும் தினமாகும்.
சாம வேதிகள் பிள்ளையார் சதுர்த்தி தினத்தில் கொண்டாடுவர்.
இது ஓர் கூட்டுவழிபாடு ஆகும்.
இந்நாளில் அனைவரும் ‌நீ‌ர் ‌நிலை‌யி‌ன் கரை‌யி‌ல்
அதாவதுஆற்றங்கரையிலோ குளக்கரையிலோ குளித்துலோ
இத்தகைய சடங்கினை உருவாக்கிய
இருடிகளுக்கு நன்றி கூறி
தர்ப்பணம் செய்வர்.
தந்தை இல்லாதவர்கள் தங்கள் மூதாதையருக்கு
எள்ளும் அரிசியும் நீரில் கொடுத்து தர்ப்பணம் செய்வர்.
பின்னர் தாங்கள் அணிந்துள்ள பூணூலைப் புதுப்பிப்பதோடு
தங்கள் வேதங்களைப் படிக்கவும் தொடங்குவர்.
இந்த பூணூலும் கள்ளப்பூணூல், பிரம்மச்சாரி பூணூல்,
கிரஹஸ்தர் பூணூல், சஷ்டிஅப்த பூர்த்தி பூணூல் என்று 4 வகைப்படும்.
சம‌ஸ்கிருதத்தில் இதனை உபாகர்மா எ‌ன்று கூற‌ப்படு‌கிறது
.இதன் பொருள் தொடக்கம் எனபதாகும்.
இன்றைய தினம் வேதங்களை படிக்க துவங்க
நல்லநாள் எனக் கொள்ளலாம்.
இ‌ந்த பூணூ‌ல் போடு‌ம் சட‌ங்கு ‌‌பிராமண‌‌ர்க‌ள் ம‌ட்டு‌ம் அ‌ல்லாம‌ல்
வேறு பல சமுதாய‌த்‌தினரு‌ம் கடை‌பிடி‌க்‌கி‌ன்றன‌ர்.
பூணூல் போட்டுக்கொள்ளும் ஆண்
பாலகன் அந்தஸ்திலிருந்து பிரம்மச்சாரி அந்தஸ்த்திற்கு
உயர்த்தப்படுகிறான்.
அதன் பின் அவன் வேதங்கள் கற்றுத்தேற வேண்டும்.
பிரம்மச்சாரிய விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.
உபநயன ‌விழா நடத்தி பூணூல் போடப்பட்டுவிட்டால்
அதை கழற்றக் கூடாது.
ஆனால், விழா ஏதுமினறி ஆவணி அவிட்டம் தினத்தன்று மட்டும்
சாஸ்திரத்துக்காகப் போடப்படும் பூணூலை கழற்றி விடலாம்.
இதை‌த்தா‌ன் க‌ள்ள‌ப் பூணூ‌ல் எ‌ன்‌கிறா‌ர்க‌ள்.
திருமணமாகாதவர்களுக்கு பிரம்மச்சாரி பூணூல் போடப்படும்,
பிரம்ச்சாரி பூணூலிலும், கள்ளப் பூணூலிலும் 3 நூல்கள் இணைத்து
கட்டப்பட்டு அதன் நடுவில் பிரம்ம முடிச்சு போடப்பட்டிருக்கும்.
திருமணமானவர்களுக்கான கிரஹஸ்தர் பூணூ‌ல் போட‌ப்படு‌ம்.
இ‌தி‌ல் 6 நூல்கள் இணைந்து கட்டப்பட்டிருக்கும்.
60 வயதான பின், சஷ்டி அப்த பூர்த்தி என்று அழைக்கப்படும்
அறுபதாம் கல்யாணம் முடிந்தவர்களுக்கு
சஷ்டி அப்தி பூணூல் அணிவிக்கப்படும.
இதில் 9 நூல்கள் இணைத்து கட்டப்பட்டிருக்கும்.
ஆவணி அவிட்ட தினத்தன்று ஆற்றங்கரையில் சென்று
(இல்லை என்றால் வீட்டில் குளித்துவிட்டு)
நீராடிவிட்டு அவரவர்கள் குல வழக்கப்படி பூஜைசெய்துவிட்டு
பழைய பூணூலை கழற்றி விட்டு
புதிய பூணூலை அணிந்து கொள்வார்கள்.
இந்த பூணூல் அடையாளம் எதற்கு தேவைப்படுகிறது.
மந்திரங்களில் ராஜ மந்திரம் என்று கருதப்படுவது காயத்ரி மந்திரமாகும்.
நியமனப்படி காயத்ரியை ஜபிக்கும் ஒருவன் ஞானத்திலும், தேஜஸ்திலும் சிறந்தவனாக இருக்கிறான்.
ஒரு தாய் தனது குழந்தையை காப்பது போல காயத்ரி மந்திரம் மனித மனதை சிதற விடாமல் காக்கிறது.
இந்த மந்திரத்தை சொல்லும் தகுதியை ஒருவன் அடைந்து விட்டான் என அடையாளப்படுத்துவதே பூணூலாகும்.
பூணூல் மூன்று புரி நூல்கள் இருக்கும். இவை சிவன், விஷ்னு, பிரம்மாவையும், சக்தி, லஷ்மி, சரஸ்வதியையும் நினைவூட்டுவதாகும்.
அது மட்டுமல்லாது வேதம் சொல்லுகின்ற மனித குணங்களான சத்வ, ராஜஷ, தாமஸ ஆகிய மூன்று மனித குணங்களையும் ஞாபகப்படுத்துகிறது.
முக்காலத்தையும் விழிப்பு, கனவு, அமைதி ஆகிய மூன்று அவஸ்தைகளையும் இது காட்டுகிறது எனலாம்.
மேலும் மனிதன் அனுபவித்தே ஆக வேண்டிய இகலோக, பரலோக, அகலோக வாழ்க்கையையும் காட்டுகிறது.
மூன்று நூல்களையும் இணைந்து முடிவில் போடுகின்ற முடிச்சிக்கு பிரம்ம முடிச்சி என்று பெயர்.
பூணூலின் முதல் நூல் கயிறு: வேதம், உபநிடம், வாழ்வியல் நெறி, தருமங்களை உபதேசித்த பல்வேறு ரிஷி, முனிவர்கள், ஆசிரியர்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய நன்றியை மறக்காமல் நினைவு படுத்துவது. குருபரம்பரைக்கு ஒரு நபர் செலுத்தவேண்டிய நன்றியைக் குறிப்பது.
பூணூலின் இரண்டாம் நூல் கயிறு: தான் தோன்றக் காரணமான தனது முன்னோர்களை, வளர்த்து ஆளாக்கிய பெற்றோரையும் அவர்க்குச் செய்ய வேண்டிய நன்றிக்கடனையும் நினைவு படுத்துவது. குலப்பரம்பரைக்கு ஒரு நபர் செலுத்தவேண்டிய நன்றியைக் குறிப்பது.
பூணூலின் மூன்றாம் நூல் கயிறு: தான் வாழ உதவும் தேவதைகளான (இயற்கை) நீர், நிலம், காற்று,சூரியன், ஆகாயம், எனும் பஞ்சபூதமாகிய தேவதைகளுக்கு ஒரு நபர் செலுத்த வேண்டிய நன்றியை நினைவு படுத்துவது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...