Wednesday, August 31, 2016

நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ...


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி யிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பூலாங்குறிச்சி என்னும் ஊர். இந்த ஊரில் தான் பிரமிக்கத்தக்க
"காஞ்சாத்து மலை ".

மலைகளின் அழகை ரசிக்க புதுக்கோட்டை யில் உள்ளவர்களே ஏற்காடு, உதகமண்டலம், கொடைக்கானல் செல்கிறோம். அங்கு வெறும் மலைகளை மட்டும்தான் கண்டு ரசிக்க முடியும். இந்த காஞ்சாத்து மலை யில் கப்பல் போன்ற மலைகளும் ரயிலைப் போன்ற மலைகளும் அதிகமாக உள்ளன. அடர்ந்த மலைக்காடுகள் சூழந்துள்ளன. ஓர் மலையின் உச்சியில் முருகன் கோயிலும் உள்ளது. இந்தக் காட்டில் காட்டு மாடுகள் அதிகமாக வாழ்ந்தன. நரிகளும் முயல்களும் அதிகமாக வாழ்கின்றன. அரியவகை பழங்களான பாஞ்சாம் பழம், களாக்காய், தொரட்டிப்பழம் இங்கு அதிகம். ரம்மி படத்தில் இடம்பெற்ற "கூடைமேல கூடைவச்சு " பாடல் இங்குதான் எடுக்கப்பட்டது.
அருகில் இருக்கும் நமக்கு அதன் அழகான இயற்கையை ரசிக்க தெரியவில்லை. ஒருமுறையாவது சென்று ரசியுங்கள் ....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...