சரியாக, 38 ஆண்டுகள், 9 மாதங்களே வாழ்ந்த பாரதி தன் மொழிக்கும் சமூகத்துக்கும் விட்டுச்சென்றது ஏராளம்.
எப்பாடுபட்டாவது இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கித்தர வேண்டும் என்று தவிப்புடன் போராடியவர்களில் பாரதிக்கு முதல் வரிசையில் இடம் உண்டு. இந்தத் தவிப்பின் பிரதிபலிப்புதான் மிதவாதம், தீவிரப்போக்கு ஆகிய இரு வழிகளில் தீவிரப்போக்கை பாரதி தேர்ந்தெடுத்தது. விடுதலைபெற்ற இந்தியாவை, தீண்டாமை போன்ற பிரச்சினைகள் ஒழிந்த இந்தியாவை வாழ்த்திப் பாடும் முதல் பாடகனாக, தான் இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய பெருங்கனவு. நாடு விடுதலை பெறுவதற்கு 26 ஆண்டுகளுக்கு முன்பே மறைந்துவிட்டாலும்கூட, ஏதோ ஒரு முன்னெச்சரிக்கை உணர்வால் மேற்குறிப்பிட்ட லட்சிய பாரதத்தை வரவேற்று முன்கூட்டியே பாடல்களைப் பாடிவிட்டுப் போயிருக்கிறார்.

பாரதியை நம் நாடு உரிய வகையில் கெளரவித்திருக்கிறதா என்று பார்த்தால், இல்லை என்பதுதான் உண்மை. தேசப்பற்றையும் சுதேசி உணர்வையும் வடிவமைத்ததில் தேசத்தின் எந்தத் தலைவருக்கும் நிகராகப் பங்குவகித்த பாரதி, இறுதியில் தமிழகத்துக்கு மட்டுமே உரியவராகப் பார்க்கப்பட்டவரானார். தமிழகத்தால் மட்டுமே தற்போது கொண்டாடப்படுகிறார். தாகூரின் புகழை இந்திய அளவில் பரப்பவும் நிலைநாட்டவும் இந்திய அரசும் மேற்கு வங்க அரசும் எவ்வளவோ திட்டங்களைச் செயல்படுத்திவருகின்றன. இதற்கெல்லாம் தாகூர் தகுதி வாய்ந்தவர் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. ஆனால், தாகூருக்கு இணையாகக் கருதப்பட வேண்டிய பாரதி போன்றவர்களும் கெளரவப்படுத்தப்பட வேண்டியது அவசியம் . . .
No comments:
Post a Comment