Sunday, October 7, 2018

தீதும் நன்றும் பிறர் தர வாராது....



எது நம்மை , நம் வாழ்க்கையை திசை மாற்றிச் செல்கிறதோ அதன் வழியே பயணிப்பது தான் மனித இயல்பு.அது நேர் வழியா? மறை வழியா என்பது தான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது.
உதாரணமாக எனது நண்பர்கள் குடித்தார்கள் நானும் குடித்தேன்.அரசாங்கம் சிகரட் புகைக்காதீர்கள்,மது அருந்தாதீர்கள் என்று சொல்கிறது.ஆனால் அவைகளை விற்பனை செய்ய அனுமதிக்கிறது.அதனால் நாங்கள் குடிக்கிறோம்.சிகரட் புகைக்கிறோம் என்பீர்கள்.
பெண்கள் ஆபாசமாக ஆடை அணிகிறார்கள்.அது தவறு.அதனால் தான் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். இது தான் உங்கள் குற்றச்சாட்டு.ஆறு வயது தொடக்கம் பதினைந்து வயது வரையிலான சிறுமிகள் உள்ளாடை மட்டும் அணிந்து வாழ்ந்த காலத்தில் இந்த துஷ்பிரயோகம் இடம் பெறவில்லை.ஏனெனில் அப்போது விதம்விதமான ஆடைகள் அணிய பணமும் இருக்கவில்லை.ஆடைகளும் இருந்ததில்லை.
எது எல்லாம் திறந்து இருந்தாலும் அதை நாடாமல் விலகிச் செல்வது தான் மனப்பக்குவம்.உலகத்தில் நல்ல விஷயங்கள் நிறைய உண்டு.
உதாரணமாக கல்வி.இதனை யாரோ ஒருவர் கூறாமல் நாமாகக் கற்க முயலுவோமா?.வீதியில் வாழைப்பழத்தோலோ, வேறு ஆபத்தை விளைவிக்கும் பொருட்களோ கிடக்கிறது.நம்மில் எத்தனை பேர் அதைத் தூக்கி அப்புறப்படுத்த நினைக்கிறோம்.
ஆனால் போதை தரும் இன்ன இன்ன விடயங்கள் நமக்கு கூடாது என்று தெரிந்தும் நாம் அதை விருப்பத்தோடு நாடுகிறோம்.அது போலத் தான் பெண்களின் ஆடையும்.உங்கள் வீட்டிலுள்ள உறவுகளின் ஆடைகள் விலகி இருந்தால் கடந்து செல்லும் உங்களால் பிற பெண்களின் ஆடைகள் விலகி இருந்தால் மட்டும் விலத்திச் செல்ல முடியவில்லை.ஆக எல்லாமே நம் பார்வையில் தான் இருக்கிறது.
ஒரு பெண் சேவை அணிந்து செல்லும் போது அவளைக் கண்ணியமாக நோக்கும் ஆண்கள் அதே பெண்ணின் மேலாடை க்குள் மறைந்திருக்கும் மார்பின் அளவைக் கணித்து விடுகிறார்கள்.அல்லது மேலாடை விட்டு வெளியே தெரியும் மார்புக் கச்சையின் பட்டி தெரிவதை உற்றுப் பார்க்கிறார்கள்.சேலை அடக்கமான ஆடை என்று தானே நீங்கள் கூறுகிறீர்கள்.அப்படியெனில் சேலைக்குள் அங்கங்களை ஏன் தேடுகிறீர்கள்.அம்மா, சகோதரிகள் சேலை கட்டும் போது மட்டும் அது கண்ணியமாகத் தெரிகின்றது.
இதில் இருந்து புரிந்து கொள்ள வேண்டிய அடிப்படைக் காரணம் ஒன்று தான்.நல்லது ஆயிரம் இருந்தாலும் அதை உங்களுக்கு கற்றுத் தர வேண்டியிருக்கிறது.ஆனால் தீது என்று தெரியும் விஷயங்களை நீங்களாகவே தேடித் தேடி கற்றுக் கொள்கிறீர்கள்.ஆகவே "தீதும் நன்றும் பிறர் தருவதில்லை.நம் பார்வைகளும்,நமது நடத்தைகளுமே தீர்மானிக்கிறது.நல்லதை உள் வாங்கி தீயதை வெளியேற்றக் கற்றுக் கொள்வோம்.
மூட மானிடரே ஆடைகள் கொண்டு பெண்ணின் அங்கங்களை மறைப்பதால் மட்டும் கற்பு காக்கப்படும் என்று கனவிலும் நினைக்காதே.பூட்ட வேண்டிய பெண்ணின் மனது திறந்து இருக்கும் போது ஆடைகள் கொண்டு மூடி அவர்களை அடைத்து வைத்திருப்பதாக மகிழ்ச்சி கொள்ளாதே.அவர்கள் மனங்களில் அஜித்தும்,விஜயும்,அரவிந்தசாமிகளும் கதாநாயகர்களாக வலம் வருகிறார்கள்.
ஒழுக்கம் என்பது கற்றுத் தருவதல்ல.நமது செயல்களில் இருக்க வேண்டும்.அது மனத் தூய்மையாக இருக்க வேண்டும்.
பகுத்தறிவு கொண்டு சிந்தியுங்கள்.மற்றவர் கூறுவதைக் கேட்டு நடக்காமல் உங்கள் மனதில் என்ன தோன்றியதோ அதைச் செயல்படுத்துங்கள்.
வெற்றி நிச்சயம்.....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...