எங்கள் அன்புள்ள இசைஞானி ஐயா,
நீங்கள் திரையுலகிற்கு வருவதற்கு முன், நாங்கள் ஒன்றும் இசையைப் பற்றி அறிந்துகொள்ள இவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டதில்லை.
ஏதோ இசைக்கப்படுகிறது, நன்றாக இருந்தால் ரசிப்போம். இல்லையென்றால் அதைப்பற்றி யோசிப்பதேயில்லை. அது ஏன் என்று கவலைகொள்வதுமில்லை.
ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும், அக்காலக் கட்டத்தில் (நீங்கள் வருவதற்கு முன்) மெட்டுக்கள் எங்களை ஈர்த்ததைவிட, கவிஞர்களின் வரிகளே எங்களை படங்களின் கதைகளோடு அதிகமாக ஈர்த்தன என்றே சொல்ல வேண்டும்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, முத்துராமன், சரோஜாதேவி, பத்மினி, சாவித்திரி, தேவிகா என இவர்களின் உடலசைவுகளே (body language) பாடல்களைக் கற்பனை செய்யவோ விரும்பவோ வைத்தன, என்போம்.
ஒருவேளை இப்படியும் இருந்திருக்கலாம், TMS, T.R.மகாலிங்கம், சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், P.சுசீலா, S.ஜானகி என உச்சஸ்தாயியில் பாட வல்ல இவர்களது குரல்வளத்தைக் காட்டுவதிலும், மக்களுக்கு கவிஞர்கள் சொல்லும் கருத்தோ தத்துவமோ சென்றடைவதையே குறிக்கோளாக வைத்து, இசையமைப்பாளர்கள் மெட்டைவிட மேற்சொன்னவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தார்களோ எனவும் ஐயப்பட வேண்டியிருக்கிறது.
மெட்டுக்களே இல்லையென்று சொல்லமாட்டோம். அவர்களும் இசைமேதைகள் என்பதால் அழகான மெட்டுக்கள் அவர்களுக்கும் இயற்கையாக வரவே செய்தன. ஆனாலும் அப்போது எங்களுக்கு அவ்வளவாக வெளியில் தெரியவில்லை. நல்ல மெட்டுக்களை ரசித்தோம்தான். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் அருமையான மெட்டுக்களை அளவோடுதான், ஏன் உங்களது ஆயிரக்கணக்கில் உள்ள அற்புத மெட்டுக்களோடு ஒப்பிடும்போது, அவர்கள் மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் மெட்டுக்களைக் கொடுத்திருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
ஹிந்திப் பாடல்கள் எங்களை ஆக்கிரமித்தபோது, எங்களில் மாற்றமாக அவைகளின் மெட்டுக்களும், ஹ, ஸ, ஷ, ga போன்ற இசைச் சத்தங்களும் எங்களுக்குப் பிடிக்கலாயின.
மொழி தெரியாமல் போனதால், வரிகளில் எங்களுக்கு அக்கறையில்லாமல் போனது.
இங்கேயும் இதைச் சொல்லியே ஆகவேண்டும். நல்ல மெட்டுக்களைக் கொண்ட ஹிந்திப்பாடல்களே நமக்குத் தெரியவந்தன எனலாம். மொழி தெரியாததன் காரணமாக மெட்டு நமக்குப் பிடிக்கவில்லையென்றால் அவற்றை சட்டைசெய்யாமல் விட்டிருக்கலாம். உள்ளூர் ஹிந்தி ரசிகர்களுக்கே அது வெளிச்சம்.
இப்படியாக நாங்கள் ஆற்றில் (வரிகள் + காட்சிகள்) ஒரு காலும், சேற்றில் (ஹிந்திப் பாடல் ட்யூன் + காட்சி) ஒரு காலுமாய் பயணம் செய்துகொண்டிருக்கும் வேளையில்தான்,
'#அன்னக்கிளி'யில் ஓர் அற்புத சத்தமாக, 'லாலீ லாலி லோலோ.. லாலீ லாலி லோலோ..ஓ', என்று #அன்றுவரைக்_கேட்டிராத ஒரு #அற்புத மெட்டொன்று எங்கள் மனங்களை #வசீகரிக்கக்_கண்டோம்.
'#அன்னக்கிளி'யில் ஓர் அற்புத சத்தமாக, 'லாலீ லாலி லோலோ.. லாலீ லாலி லோலோ..ஓ', என்று #அன்றுவரைக்_கேட்டிராத ஒரு #அற்புத மெட்டொன்று எங்கள் மனங்களை #வசீகரிக்கக்_கண்டோம்.
அப்புறம் அறிந்துகொண்டோம் அந்த அதிசய இசைக்குச் சொந்தக்காரர், அறிமுக இசையமைப்பாளர் என்றும், இளைஞர் என்றும்,
பெயர் #இளையராஜா என்றும்,
அது நீங்கள்தான் என்பதும்.
பெயர் #இளையராஜா என்றும்,
அது நீங்கள்தான் என்பதும்.
நேற்று வந்ததுபோல் இருந்தது,
மட மடவென்று இன்றைய தேதியில்
கிட்டத்தட்ட 1,300 படங்களுக்கும் மேலாய், பாடல்கள் 7,000 த்திற்கும் அதிகமாய், 42 வருடங்களைக் கடந்தாகிவிட்டது.
மட மடவென்று இன்றைய தேதியில்
கிட்டத்தட்ட 1,300 படங்களுக்கும் மேலாய், பாடல்கள் 7,000 த்திற்கும் அதிகமாய், 42 வருடங்களைக் கடந்தாகிவிட்டது.
திரைப்படயிசை என்று எடுத்துக்கொண்டால், எந்த ஒரு #சாதனையும், 'இளையராஜா' என்ற பெயரை உச்சரிக்காமல் கடந்துசெல்ல முடிவதில்லை என்றே நம்புகிறோம்.
இச்சாதனைகள் இன்னும் பல காலங்களுக்கு #முறியடிக்கப்படாமலேயே இருக்கப்போவதாய் இன்னுமொரு நம்பிக்கை எங்களுக்கு இருக்கவே செய்கிறது.
எங்களுக்கு உங்கள்மீது இருப்பது இந்த நம்பிக்கைகள் மட்டுந்தானா என்ன. இடமும் நேரமும் இந்த தளத்தில் இடம் தர இயலாது. அந்த அளவிற்கு உள்ளன.
உங்கள் இசைமீது எங்களுக்குள்ள #ஈர்ப்பைப் பற்றிய பதிவே இது.
நீங்கள் திரைத்துறைக்கு வந்த பிறகே நாங்கள் இசைமீது அதிக நாட்டம் கொள்கின்றோம், என்பதை மீண்டும் அழுத்தமாகவே சொல்ல விரும்புகிறோம்.
காரணம் புதுப்புது ராகத்தில், நாங்கள் அதுவரைக் கேட்டிராத மெட்டுக்களில் பாட்டுக்கள் ஏராளமாக #இசைமழையாய்கொட்டியது நீங்கள் திரையுலகில் நுழைந்த பின்னரே.
எல்லாம் உங்கள் #ஒருவரின் இசையில் நூற்றுக்கணக்கானப் பாடல்கள், வந்த சில வருடங்களிலேயே, எங்கள் காதுகளை உலகில் எங்கிருந்தாலும் வானொலியின் மூலம் தொடங்கி, கேசட் டேப் ரெக்கார்டர் என்றும். டூ-இன்-ஒன் என்றும் அந்தப் #பொற்காலம் எங்கள் மனங்களையெல்லாம் இசைக் கொண்டாட்டத்திலும், கோலாகலத்திலும் ஆட்படுத்தி, ஆர்ப்பரித்தது என்பது மறுக்க முடியாதது. மறக்க முடியாத ஒன்றும்கூட.
பின்னர் மின்னணு தொழில்நுட்பம் வேகமாக மேலோங்க அதனுடன் இசைத்துறையும் சேர்ந்து போட்டிபோட நாங்கள் இஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டு பாடல்களைத் தேடியலைந்த ஆனந்தமான நாட்களெல்லாம் மாறிப்போய் பாடல்களெல்லாம் எங்களைத் தேடி வர ஆரம்பித்தன.
ஆம் செல்ஃபோன் என்றும் இன்டெர்நெட் என்றும் பென்ட்ரைவ் என்றும், எம்பி3 என்றும், மெமரி கார்ட் என்றும் உங்களது நூற்றுக்கணக்கான பாடல்களை நொடிப்பொழுதில் பதிவுசெய்துவிட்டு இருந்த இடத்தில் இருந்துகொண்டே எங்களைக் கேட்க வைத்துவிட்டன.
உங்கள் இசையைக் கேட்காமல் நாங்கள் உறங்குவதும், உயிர் வாழ்வதும் இயலாத காரியம் என்பதால், எங்கள் அந்த பொற்காலத்தை (ரேடியோ, டேப்ரெக்கார்டர்) விட்டுவிட்டு, மின்னணு காலத்திற்கு மாறிவிட்டோம்.
இந்த விஞ்ஞான வளர்ச்சிக்கு எதிராய் ஒன்றும் செய்வதற்கில்லாமல் அவற்றை ஏற்றுக்கொண்டுவிட்டோம்.
இது ஒருபுறமிருக்க, இப்பதிவை ஆரம்பித்த இடத்திற்கே நாம் போவோமானால், உங்கள் இசையைக் கேட்டபின்னரே இசைபற்றி நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்ள எங்கள் மனம் துடிப்புகொண்டது.
ஆம் இன்று இணையதளத்தை எடுத்துக்கொண்டால் நிறைய '#இளையராஜா_ரசிகர்கள்' குழுக்கள் குழுக்களாகப் பிரிந்துகொண்டு பலவிதமாய் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டு இருக்கின்றார்கள்.
1). உங்கள் மெட்டுக்களில் அவரவர்க்கும் #பிடித்த_பாடல்கள்அமைந்த படக்காட்சிகளைப் பகிர்ந்துகொள்வதென்ன.

2). இசைப் பதிவுகளின்போது நடந்த சுவாரஸ்யமான #நிகழ்வுகள்தெரியவந்தால் அவைகளைப் பகிர்ந்துகொள்வதென்ன.
3). #பிடித்தமான_பாடகர்கள் பாடிய பாடல்களைப் பகிர்வதென்ன.
4). ஒரு பாடலின்
ஆரம்ப இசைக்காக ஒன்று,
இடையிசைக்காக ஒன்று,
பல்லவிக்காக ஒன்று,
சரணத்திற்காக ஒன்று,
பின்னணியிசைக்காக (BGM/RR) ஒன்று,
- என இவைகளில் எல்லாம் அமைந்துள்ள உங்களது மெட்டுக்களில் மயங்கி எத்தனை ரசிகர்கள்-கூட்டம், சம்பந்தப்பட்ட படக்காட்சிகளைப் பகிர்ந்துகொள்வதென்ன.
ஆரம்ப இசைக்காக ஒன்று,
இடையிசைக்காக ஒன்று,
பல்லவிக்காக ஒன்று,
சரணத்திற்காக ஒன்று,
பின்னணியிசைக்காக (BGM/RR) ஒன்று,
- என இவைகளில் எல்லாம் அமைந்துள்ள உங்களது மெட்டுக்களில் மயங்கி எத்தனை ரசிகர்கள்-கூட்டம், சம்பந்தப்பட்ட படக்காட்சிகளைப் பகிர்ந்துகொள்வதென்ன.
5). இன்னுமொரு கூட்டம் உங்கள் பாடலின் மெட்டு கர்நாடக சங்கீதத்தில் எந்த #ராகத்தில் அமைந்துள்ளது என்பது பற்றி ஆராய்ச்சி மேற்கொள்வதென்ன,
அது அவ்வளவு எளிதாக அமைந்துவிடாததால் பல விவாத மன்றங்களில் (forums) அவைபற்றி ஆழமாக விவாதம் செய்யும் அழகென்ன.
அது அவ்வளவு எளிதாக அமைந்துவிடாததால் பல விவாத மன்றங்களில் (forums) அவைபற்றி ஆழமாக விவாதம் செய்யும் அழகென்ன.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது, இதுபோல் உலகில் எந்த இசையமைப்பாளரின் இசையையாவது ரசிகர்கள் கூட்டம் கூட்டமாகக் கூடி இவ்வாறெல்லாம் வகை வகையாகப் பிரித்து அலசி ஆராய்ந்து தங்களின் மகிழ்ச்சியை கொண்டாடுவார்களா. தங்களுக்குள் இவ்வளவு ஆனந்தமாகப் பகிர்ந்துகொள்வார்களா, இவையெல்லாம் சாத்தியமாகுமா அவர்களது இசை விஷயத்தில், என்பது மிகப் பெரிய கேள்விக்குறியே.
இதில் சுவாரஸ்யம் என்ன வென்றால் பல #அபூர்வப்பாடல்களைத்தேடிக் கண்டுபிடித்து, பகிர்வதென்பது உங்கள் பாடல்கள் விஷயத்தில் அவ்வளவு #எளிய_காரியம்_அல்ல.
இது வேறு எந்த இசையமைப்பாளர்கள் விஷயத்திலும் நடக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறோம்.
இது வேறு எந்த இசையமைப்பாளர்கள் விஷயத்திலும் நடக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறோம்.
ஏனெனில் ஏழாயிரம் எண்ணிக்கையில் பாடல்கள், ஆயிரம் எண்ணிக்கையில் படங்கள், ஏராளமான பின்னணிப் பாடகர்கள், படம் வெளிவராத பாடல்கள், இசை ரசனையில்லா இயக்குனர்களால் வேண்டாமென்று ஒதுக்கிய அருமையானபாடல்கள் என்று இத்தனைவகைப் பாடல்கள் உங்களைத் தவிர வேறு எவருக்கும் இத்தனை அதிக எண்ணிக்கையில் அமையப் பெறவில்லை என்றே கருதுகிறோம்.
ஆகவேதான் சொல்கிறோம், நீங்கள் திரையிசை அமைக்க ஆரம்பித்த பின்னரே, நாங்கள் இவ்வளவு #ஆராய்ச்சிகள்_செய்யவிரும்புகின்றோம், இவ்வளவு #விஷயங்களைத்_தெரிந்துகொள்ள ஆசைப்படுகின்றோம்.
தெரிந்துகொண்டதை சக நண்பர்களுடன் #பகிர்ந்துகொள்ளஆசைப்படுகின்றோம்.
பகிரும் வேளையில் நண்பர்கள் வியக்கும்போதும், பாராட்டும்போதும், 'எல்லாம் நம் ஐயாவின் திறன்' என்று உங்களைப் பற்றி குறிப்பிட்டுப் #பெருமைப்பட்டுக்கொள்வதையும் விரும்புகின்றோம்.
தெரிந்துகொண்டதை சக நண்பர்களுடன் #பகிர்ந்துகொள்ளஆசைப்படுகின்றோம்.
பகிரும் வேளையில் நண்பர்கள் வியக்கும்போதும், பாராட்டும்போதும், 'எல்லாம் நம் ஐயாவின் திறன்' என்று உங்களைப் பற்றி குறிப்பிட்டுப் #பெருமைப்பட்டுக்கொள்வதையும் விரும்புகின்றோம்.
இந்தவகை மகிழ்ச்சிகளுக்கும், பெருமைகளுக்கும் நாங்கள் உங்களுக்கு என்றும் கடன்பட்டுள்ளோம், எங்கள் ஐயா.
நன்றிகளுடன்,
இவர்களில் ஒருவனாக,
இளையராஜா ரசிகன்.
இவர்களில் ஒருவனாக,
இளையராஜா ரசிகன்.
No comments:
Post a Comment